வெறும் காற்று மட்டும் போதும் இந்த கார் நிக்காம ஓடும்! புகைக்கு பதிலா சுத்தமான தண்ணீரை தான் வெளியேற்றும்!
டொயோட்டா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் தனது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ப்யூயல் செல் செடான் காரை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் குறித்த முழுமையான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நொய்டாவில் தற்போது நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில் பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை பொது மக்களுக்காக காட்சிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டொயோட்டா நிறுவனமும் தனது தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வருகிறது. இந்த கண்காட்சியில் டெயோட்டா நிறுவனம் சுற்றுசூழலுக்கு ஏற்ற வாகனங்களை காட்சிபடுத்தி வருகிறது. உதாரணமாக எத்தனால் இன்ஜின் வாகனங்கள், பிளக்ஸ் ப்யூயல் வாகனங்கள், என மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களை காட்சி படுத்தி வருகிறது.

இந்த வரிசையில் டொயோட்டா நிறுவனம் தனது டொயோட்டா மிராய் என்ற வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ப்யூயல் செல் செடான் காராகும். இந்த மிராய் காரில் டொயோட்டா நிறுவனம் பல அம்சங்கள் நிறந்த கேபினை வழங்கியுள்ளது. காரின் உள்ளே 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே வழங்கியுள்ளது. இதில் கனெக்டிவிட்டி அம்சங்கள், கலர் ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, பானரோமிக் வியூ மானிட்டர், டிஜிட்டல் ரியர் வியூ மிரர், வயர்லெஸ் சார்ஜர், பானரோமிக் சன் ரூஃப், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் சீட்கள், டிரைவர் அசிஸ்டென்ஸிற்காக டொயோட்டா டீம் மேட் சாஃப்ட்வேர், உள்ளிட்ட அம்சங்கள் இருகு்கிறது.

இந்த டொயோட்டா மிராய் கார் ரியர் -வீல் டிரைவ் சிஸ்டத்தில் இயங்குகிறது. இந்த காரில் உள்ள இன்ஜின் 182 எச்பி பவரையும், 300எல்பி-எஃப்டி டார்க் திறனயும் வழங்குகிறது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 9.2 நொடியில் எட்டி பிடிக்கும் திறன் கொண்டது. இந்த காரில் முழு முறை முழுவதும் ஹைட்ரஜன் ஃபில் செய்தால் 650 கி.மீ தூரம் வரை பயணம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
என்னது ஹைட்ரஜன் ஃபில் செய்யனுமா என நீங்கள் யோசிப்பது எங்களுக்கு கேட்கிறது. ஆம் இந்த கார் பெட்ரோல் காரோ அல்லது எலெக்ட்ரிக் காரோ கிடையாது. இந்த காரில் ஹைட்ரஜன் வாயுவில்இயங்கும் இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி இயங்கும் திறன் கொண்ட இன்ஜின் ஆம் வெறும் காற்றில் தான் இந்த இன்ஜினே இயங்குகிறது.

இந்த இன்ஜின் சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது. பெட்ரோல், டீசலை போல இந்த இன்ஜின் புகையை வெளியிடாது. மாறாக இந்த இன்ஜினிலிருந்த ஹைட்ரஜன் வெளியாகி வெளியே உள்ள காற்றுடன் கலந்து அதில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு வெறும் தண்ணீரை தான் கழிவாக வெளியிடும். இதனால் சுழற்று சூழலுக்கு எந்த விதமான மாசும் ஏற்படாது. அப்ப இந்த கார் காற்றில் இயங்கி தண்ணீரை தயாரிக்கும் ஒரு கருவியாக கூட மாறிவிடுகிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








