இந்திய இராணுவத்துக்கு ஏற்ற சரியான டொயோட்டா வாகனம்!! போர் களத்தில் கூட பயன்படுத்தலாம் - வெளியீடு!
இந்திய இராணுவத்துக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டொயோட்டா ஹிலுக்ஸ் (Toyota Hilux) பிக்-அப் டிரக் வாகனம் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. வழக்கமான ஹிலுக்ஸ் வாகனத்துடன் ஒப்பிகையில் இந்த புதிய ஹிலுக்ஸ் வாகனம் எந்த அளவிற்கு ஸ்பெஷலானது என்பதை இனி பார்க்கலாம்.
இந்திய பாதுகாப்பு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIDM) உடன் இணைந்து இந்திய இராணுவத்தின் வடக்கு பிரிவு வருடா வருடம் வடக்கு இராணுவ பிரிவுக்கான தொழிற்நுட்ப கருத்தரங்கு (NTS)-ஐ நடத்தி வருகிறது. இந்த வகையில், இந்த 2023ஆம் ஆண்டிற்கான கருத்தரங்கு கூட்டம் 2023 செப்டம்பர் 11 முதல் 13 வரையில் ஜம்மூவில் நடைபெற்றது.

இராணுவத்துக்கான பாதுகாப்பு சார்ந்த தொழிநுட்ப கண்காட்சியான இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே அதிநவீன உள்நாட்டு வளர்ச்சியையும், பாதுகாப்பு தொழிற்நுட்ப திறன்களின் உற்பத்தியையும், இராணுவ பாதுகாப்பு துறையில் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பதாகும். இந்த கண்காட்சியில் டொயோட்டா நிறுவனம் இரு புதிய ஹிலுக்ஸ் பிக்அப் டிரக் வாகனங்களை காட்சிக்கு நிறுத்தி உள்ளது.
இந்த ஹிலுக்ஸ் வாகனங்கள் வழக்கமான ஹிலுக்ஸ் வாகனங்களில் இருந்து இந்திய இராணுவத்தின் தேவைக்களுக்கு ஏற்ப மாடிஃபை செய்யப்பட்டவைகளாகும். ஃபீல்டு டயாக்னாஸிஸ் வைகல் (FDV) மற்றும் ராபிட் இண்டர்வென்ஷன் வைகல் (RIV) என்பவை இந்த இரு மாடிஃபை ஹிலுக்ஸ் வாகனங்களின் பெயர்கள் ஆகும். இந்த மாடிஃபிகேஷன்களை டொயோட்டா நிறுவனம் தனது அங்கீகரிக்கப்பட்ட வெளி விற்பனையாளர் மூலம் செய்துள்ளது.

பல்வேறு விதமான நிலப்பரப்பு மற்றும் தட்பவெப்ப நிலைகள் காரணமாக இந்திய இராணுவத்தின் செயல்பாடு மற்றும் போக்குவரத்து சவால்களை கருத்தில் கொண்டு, இராணுவ வீரர்களின் ஆன்-க்ரவுண்ட் சவால்களை கணிசமாக குறைக்க வாகன கஸ்டமைசேஷன்கள் மற்றும் சரியான தீர்வுகள் தேவைப்படுகின்றன. டொயோட்டாவின் புதிய ஹிலுக்ஸ் வாகனங்களில் FDV ஆனது இராணுவ வீரர்களின் போக்குவரத்துக்கும், RIV ஆனது போர் களத்திலும், மீட்பு பணிகளின் போதும் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு உருவாக்கப்பட்டு உள்ளன.
பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும் தனது வழக்கமான ஹிலுக்ஸ் பிக்-அப் டிரக் வாகனத்தையும் 2023 வடக்கு இராணுவ தொழிற்நுட்ப கண்காட்சியில் டொயோட்டா காட்சிப்படுத்தி உள்ளது. ஏனெனில், கடந்த 2023 ஜூலை மாதத்தில் சில எண்ணிக்கையிலான ஸ்டாண்டர்ட் ஹிலுக்ஸ் பிக்-அப் டிரக்குகளை இந்திய இராணுவத்துக்கு டொயோட்டா வழங்கியது. இந்திய இராணுவத்துக்கு ஹிலுக்ஸ் வாகனங்கள் வழங்கப்படுவது அதுவே முதல்முறை.

இந்த ஜப்பானிய-ஸ்டைல் பிக்-அப் டிரக்கின் அடையாளமே அதன் நீண்ட ஆயுட்காலமும், ஆஃப்-ரோடில் இயங்கும் திறனும் ஆகும். சுமார் 700மிமீ ஆழமுள்ள நீரிலும் ஹிலுக்ஸ் இயங்கக்கூடியது. இராணுவத்துக்காக வழங்கப்பட்ட ஹிலுக்ஸ் வாகனங்கள் இதனை காட்டிலும் ஆழமான நீரிலும் இயங்கக்கூடியவைகளாக இருக்கலாம். ஹிலுக்ஸில் 2.8 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
அதிகப்பட்சமாக 201 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். லோ-ரேஞ்ச் டிரான்ஸ்ஃபர் கேஸ் உடன் இயக்க ஆற்றல்கள் வாகனத்தின் 4 சக்கரங்களுக்கும் செல்கின்றன. இராணுவத்தின் பயன்பாட்டிற்காக இதில் கூட ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டாவின் தரமான தயாரிப்புகளுள் ஒன்று ஹிலுக்ஸ் பிக்-அப் டிரக் ஆகும். 180 நாடுகளில், சுமார் 2 கோடிக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ள ஹிலுக்ஸை இந்திய இராணுவத்திற்காக வழங்குவது சூப்பரான முடிவாகும். ஏனெனில், ஜப்பானிய-ஸ்டைல் வாகனம் என்பது ஒருபுறம் இருந்தாலும், அதனை விட, எளிதில் அணுகும் திறன் ஹிலுக்ஸை இராணுவத்துக்கு ஏற்ற வாகனமாக விளங்க வைக்கிறது.


Click it and Unblock the Notifications









