டாடா, ஹூண்டாய் மார்கெட்டை குப்புற கவிழ்த்த மாருதி, டொயோட்டா கொண்டு வரப்போகும் புதிய கார்!

மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் டாடா பஞ்ச் மற்றும் ஹுண்டாய் எக்ஸ்டர் ஆகிய கார்களுக்கு போட்டியாக சிறிய ரக எஸ்யூவி கார் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். இந்த கார் 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது சர்வதேச அளவில் சுஸூகி மற்றும் டொயோட்டா ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையே தங்கள் தொழில்நுட்பம் மற்றும் வாகனங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்களும் தங்கள் வாகனங்களை பகிர்ந்து வேறு வேறு பெயர்களை விற்பனை செய்து வருகின்றனர். இப்படியாக இரு நிறுவனங்களும் ஒரே மாதிரியான காரை வேறு வேறு பெயர்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

toyota-suzuki bz concept

இந்நிலையில் இந்த இரு நிறுவனங்களும் அவரவர்களுக்கு உள்ள தனித்துவமான விஷயங்களை பகிர்ந்து கொண்டு பல்வேறு செக்மெண்ட்களில் தங்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் டொயோட்டா மற்றும் சுஸூகி ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து சிறிய ரக எஸ்யூவி ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி டொயோட்டா பிஇஸட் ஸ்மால் கிராஸ் ஓவர் கான்செப்டில் புதிய ரக காரை தயாரித்து 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

டொயோட்டா நிறுவனம் சிறிய ரக எஸ்யூவி கார்களை கொண்டு வருவதில் ஆர்வமாக இருக்கிறது. ஜப்பானில் இந்த ரக கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் அங்கு அதிகமாக விற்பனையாகும் என அந்நிறுவனம் கருதுகிறது. இது மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் இந்த ரக கார்களுக்கு போட்டி குறைவாக இருப்பதால் இந்த கார்களை அந்நிறுவனம் டார்கெட் செய்து உள்ளது.

toyota-suzuki bz concept

கான்செப்ட் காரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காட்சிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் சுஸூகி நிறுவனமும் தற்போது இந்த காரை தயாரிப்பதில் இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் சிறிய கார் இந்த இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் தொழில்நுட்பத்தை இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொள்ள உள்ளன. இரு நிறுவனங்களும் வேறு வேறு பேட்ஜில் இரண்டு கார்களாக விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளன.

இந்தியா உட்பட சர்வதேச அளவில் இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது. குறிப்பாக தென் ஆப்பிரிக்கா தெற்காசியா மற்றும் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் இந்த கார்கள் அதிக அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த இரு நிறுவனங்களும் ஏற்கனவே பல கார்களை இப்படியாக பகிர்ந்து கொண்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இப்பொழுது சிறப்பான விற்பனையில் இருக்கிறது.

toyota-suzuki bz concept

மாருதி நிறுவனம் தனது பலேனோ மற்றும் எர்டிகா ஆகிய காரை டொயோட்டாவிற்கு வழங்கியது. அது இந்த காரை ரீபேட்ஜ் செய்து கிளான்ஸா மற்றும் ரூமியான் என்ற பெயரில் விற்பனைக்கு செய்து வருகிறது. இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்துதான் கிராண்ட் விட்டாரா என்ற காரை உருவாக்கினார்கள்.

மாருதி பிராண்டில் கிராண்ட் விட்டாரா என்ற பெயரிலும் டொயோட்டா பிராண்டில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் என்ற பெயரிலும் விற்பனையாகி வருகிறது. அதே போல டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸ் கார் மாருதி பிராண்டில் இன்விக்டோ என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது. அனைத்து கார்களும் சிறப்பாக விற்பனையாகின்றன.

தற்போது மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காரை டொயோட்டா நிறுவனம் விரைவில் ரீபேட்ஜ் செய்து டொயோட்டா டைசர் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து சிறிய ரக எஸ்யூவி காரை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். இதை ஒரு எலெக்ட்ரிக் காராக உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர். இந்த கார் இ-டிஎன்ஜிஏ என்ற பிளாட்பார்மில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் ஒரு கிலோமீட்டர் பயணிக்க 125 வாட் ஹவரை எடுத்துக் கொள்ளும் என கூறப்படுகிறது. இது மற்ற எலெக்ட்ரிக் கார்களை காட்டிலும் குறைவான பவரில் இயங்குவதாக இருக்கிறது. இதே காரின் பெட்ரோல் வெர்ஷனும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டை இந்த கார் மூலம் பிடிக்க மிகப் பெரும் திட்டத்தை திட்டி விடுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் கால்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் மாருதி நிறுவனமும் மிகப்பெரிய அளவில் பலனடைகிறது. அதே நேரத்தில் டொயோட்டா நிறுவனத்தின் விற்பனையும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் சிறிய எஸ்யூவி ரக கார்களை விட்டால் மார்க்கெட்டில் மிகப்பெரிய போட்டி ஏற்படும்

More from DriveSpark

Article Published On: Wednesday, October 4, 2023, 16:18 [IST]
English summary
Toyota suzuki affordable ev bz planning for 2025 will it come to india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X