28 கிமீ மைலேஜ் தரும் காரின் விலை இவ்ளோதானா! மாருதி பொருளை எடுத்து போட்டி நிறுவனங்களை போட தயாரான டொயோட்டா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). இதன் அடிப்படையில் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டொயோட்டா (Toyota) நிறுவனம் தயாராகி வருகிறது. டொயோட்டா டைசர் (Toyota Taisor) என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வரும் 2024ம் ஆண்டின் முதல் பாதியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த கார், டாடா நெக்ஸான் (Tata Nexon), நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) ஆகிய கார்களுக்கு எதிராக விற்பனையில் போட்டியிடவுள்ளது.

Maruti Suzuki Fronx

செயல்திறனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் இந்த காரில் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் முதலாவது இன்ஜினின் பவர் அவுட்புட் 90 பிஹெச்பி மற்றும் 113 என்எம் ஆகவும், இரண்டாவது இன்ஜினின் பவர் அவுட்புட் 100 பிஹெச்பி மற்றும் 147 என்எம் ஆகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், மேனுவல், ஏஎம்டி மற்றும் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் தவிர, அதிக மைலேஜ் கொடுக்க கூடிய சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maruti Suzuki Fronx Display

டொயோட்டா டைசர் காரின் சிஎன்ஜி வெர்ஷன்களில், 1.2 லிட்டர் இன்ஜின் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு சுமார் 28 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர பல்வேறு அதிநவீன வசதிகளும் இந்த காரில் வழங்கப்படவுள்ளது.

வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி உடன் கூடிய 9.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்றவை இதில் மிகவும் முக்கியமானவையாக இருக்கும். இதுதவிர 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் போன்றவையும் இந்த காரின் மிக முக்கியமான வசதிகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த டொயோட்டா டைசர் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது. இதன் காரணமாக டொயோட்டா டைசர் கார், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களும் தற்போது கூட்டணி அமைத்து கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டணியின் மூலம் வெளிவந்த கார்கள் விற்பனையில் தூள் கிளப்பி வருகின்றன. இதன்படி விற்பனைக்கு வரவுள்ள டொயோட்டா டைசர் காரும் விற்பனையில் சாதிக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, November 20, 2023, 16:25 [IST]
English summary
Toyota taisor india launch in 2024 all you need to know
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+