டொயோட்டாவ சாதாரணமா எடை போட்டிருந்தவங்க எல்லாம் இப்ப வாயடைச்சு நிக்குறாங்க! டெஸ்லா, பிஒய்டிக்கே சங்கு ஊத தயார்!

மின்சார கார் (eCar) பிரிவில் டெஸ்லா (Tesla), பிஒய்டி (BYD) இவை இரண்டும்தான் முன்னணி பிராண்டுகளாக இருக்கின்றன. உலகின் நம்பர் 1 கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டாகூட இவற்றுடன் போட்டியிட முடியாத நிலையே தற்போது தென்படுகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

மிக முக்கியமான காரணமாக அந்நிறுவனம் பெரிய அளவில் மின்வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தாதே இருக்கின்றது. இப்போது வரை நிறுவனம் ஒரே ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே உலக சந்தையில் விற்பனைக்க வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதுவும், குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே அது விற்பனைக் கிடைக்கின்றது.

Toyota bz4x ev

இந்த நிலையிலேயே டொயோட்டா தன்னுடைய எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை வேற லெவலுக்குக் கொண்டு செல்ல இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம், வெகு விரைவில் அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் கார்களின் தயாரிப்பில் களமிறங்கப் போகின்றது. அந்த வாகனங்கள் ஒரு முழு சார்ஜில் 1000 கிமீ வரை ரேஞ்ஜை தரும் என கூறப்படுகின்றது.

இந்த தகவல் டொயோட்டாவை ரொம்ப சாதாரணமாக எடைப் போட்டிருந்தவர்களை வாயடைக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. அதிலும், நிறுவனம் அதன் அதிக ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் கார்களை மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கூடுதல் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

Toyota bz4x

ஆமாங்க, டொயோட்டா நிறுவனம் மிக மிக குறைவான விலையில் தன்னுடைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. தற்போது வெளியாகி இருக்கும் இந்த தகவல் உலக மின்சார கார் காதலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனங்களான டெஸ்லா, பிஒய்டி உள்ளிட்ட பிராண்டுகளுக்கு இந்த தகவல் மிகப் பெரிய ஷாக்கை ஏற்படுத்தி இருக்கின்றது.

நிறுவனம் சுமார் 40 சதவீதம் வரை செலவை சேமிக்க திட்டமிட்டுள்ளது. இதுவே, தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் மிக மிகக் குறைவான விலையில் டொயோட்டாவின் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்குக் கொண்டு வர உதவியாக இருக்கப் போகின்றது.

Toyota bz4x rear

ஆனால், இந்த எலெக்ட்ரிக் கார் 2026ம் ஆண்டிலேயே உலக சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி டொயோட்டா நிறுவனத்தின்கீழ் பிஇசட்4எக்ஸ் எலெக்ட்ரிக் கார் மட்டுமே விற்பனையில் இருக்கின்றது. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இது ஓர் முழு சார்ஜில் 252 மைல் வரை ரேஞ்ஜ் தரும். அதாவது, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400க்கும் அதிகமான கிமீ தூரம் வரை டிராவல் செய்யலாம். இதன் விலையும் மிக மிக அதிகம் ஆகும். 42,000 அமெரிக்க டாலர்களுக்கே இது விற்கப்படுகின்றது.

இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை 38 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இதைவிட 40 சதவீத விலைக் குறைவான எலெக்ட்ரிக் கார்களை டொயோட்டா உருவாக்கும் பணியில் தற்போது களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் நிறுவனம் இரு பரந்த பேட்டரிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

லித்தியம் அயன் மிக சிறந்த பெர்ஃபார்மன்ஸ் கொண்ட வாகனங்களுக்காகவும், லித்தியம் அயர்ன் பாஸ்பேட் பேட்டரி மிகவும் குறைவான விலைக் கொண்ட காருக்காகவும் அது தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அளவு குறைவான ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் காரை தயாரித்துக் கொண்டிருக்கும் டொயோட்டாவே வெகு விரைவில் ஆயிரம் கிலோமீட்டர் ரேஞ்ஜ் தரும் கார்களை தயாரிக்க இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் மட்டுமில்லைங்க இந்தியாவின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் மாருதி சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்களும் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றன. இதேபோல், மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் பிரிவை அதகளப்படுத்தும் விதமாக பன்முக எலெக்ட்ரிக் கார் மாடல்களை விரைவில் விற்பனைக்குக் கொண்டு இருக்கின்றது. source: autocar

More from DriveSpark

Article Published On: Saturday, September 16, 2023, 22:52 [IST]
English summary
Toyota to develop electric car with 1000 kilometers range on single charge
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X