Toyota 10 e-Carகளை களமிறக்க திட்டம்... டாடா, டெஸ்லானு எல்லாத்தோட சாம்ராஜ்யத்தையும் அழிக்க மிக பெரிய திட்டம்!

உலகளவில் மின்சார வாகன பிரிவில் டெஸ்லா நிறுவனமும், இந்திய அளவில் டாடா மோட்டார்ஸும் ஜாம்பவான் நிறுவனங்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும் விதமாக டொயோட்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 10 எலெக்ட்ரிக் கார்களைக் களமிறக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகமே மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கிவிட்டது. பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டால் ஏற்படும் மாசுப்பாட்டைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக அனைத்து உலக நாடுகளும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவித்துக் கொண்டு இருக்கின்றன. இதற்காக இந்தியா போன்ற உலக சில நாடுகள் மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

Toyota bz compact

ஆகையால், கடந்த காலங்களைக் காட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும், அவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தற்போது பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனை மேலும் அதிகரிக்கச் செய்யும் விதமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு நவீன வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையிலேயே வரும் 2026ம் ஆண்டிற்கு ஒட்டுமொத்தமாக 10 புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக டொயோட்டா நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கின்றது. டொயோட்டா வெளியிட்டு இருக்கும் இந்த தகவல் போட்டி வாகன உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Toyota c+pod small electric car

குறிப்பாக, அமெரிக்க நிறுவனமான டெஸ்லாவிற்கு டொயோட்டா வெளியிட்டு இருக்கும் தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். உலகளவில் இந்த நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை உடைக்கும் பொருட்டே பிற வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை தயார் செய்து வருகின்றனர்.

டொயோட்டாவும் அந்த நிறுவனங்களுடன் தற்போது இணைந்திருக்கின்றது. இந்நிறுவனம் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாக 10 எலெக்ட்ரிக் கார்களைக் களமிறக்க திட்டமிட்டு இருக்கின்றது. ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று எலெக்ட்ரிக் டொயோட்டா வாகனங்கள் களமிறக்கப்பட இருக்கின்றன.

Toyota c-hr electric

அதில், விலை குறைவானது முதல் பிரீமியம் தர எலெக்ட்ரிக் கார்களும் அடங்கும். நிறுவனம் 1.5 மில்லியன் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களை ஒவ்வொரு ஆண்டும் விற்பனைச் செய்ய இலக்கு நிர்ணயித்து இருக்கின்றது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி டொயோட்டா நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக கோஜி சேடோ பொறுப்பை ஏற்றார்.

இந்த பொறுப்பை ஏற்ற பின்னர் அவர் முதல் முறையாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போதே, தங்கள் நிறுவனத்தின் எதிர்கால திட்டம் பற்றிய தகவல்களை அவர் வெளியிட்டார். இதன் அடிப்படையிலேயே வரும் 2026ம் ஆண்டிற்குள் நிறுவனம் 10 புதுமுக எலெக்ட்ரிக் கார்களைக் களமிறக்க இருப்பது தெரிய வந்தது.

toyota bz4x side profile

இதுதவிர, நிறுவனம் 2050ஆம் ஆண்டிற்குள் முழுமையாக கார்பன் நியூட்ரல் வாகன உற்பத்தியாளராக மாற இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. தொடர்ந்து, நிறுவனம் ஆசிய நாடுகளில் டொயோட்டாவின் எலெக்ட்ரிக் பிக் -அப் ட்ரக்குகள் மற்றும் குட்டி எலெக்ட்ரிக் கார்கள் களமிறக்கப்பட இருப்பதும் தெரிய வந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையிலும் சில கார்களை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. மலிவு விலை கார் தொடங்கி அதிக விலைக் கொண்ட பிரீமியம் தர கார்கள் சிலது நிறுவனத்தின்கீழ் விற்பனைக்கு வர இருக்கின்றன. இவற்றின் வருகை டாடா மோட்டார்ஸின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையில் லேசான சரிவை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, April 10, 2023, 10:59 [IST]
English summary
Toyota to launch 10 e cars by 2026
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X