ரேஸ் செய்வதற்காகவே தயாரிக்கப்பட்ட டொயோட்டா கார்.. இது எதுல ஓடும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

டொயோட்டா ஜிடி எச்2 ரேசிங் கான்செப்ட் (Toyota GT H2 Racing concept) வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த காரில் சிறப்பு வசதியாக ஹைட்ரஜனில் இயங்கும் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கார் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டொயோட்டா நிறுவனம் புதியது ஓர் கார் தயாரிப்பை தொடங்க இருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. டொயோட்டா ஜிடி எச்2 ரேசிங் (Toyota GT H2 Racing) மாடலை வெளியீடு செய்ததன் வாயிலாக இந்த தகவல் வெளியாகி இருக்கின்றது. இது ஓர் கான்செப்ட் (Concept) மாடல் ஆகும்.

Toyota gr h2 racing concept

இந்த கார் எதிர்காலத்தில் '24 ஹவர்ஸ் ஆஃப் லீ மேன்ஸ்' (24 Hours of Le Mans) பந்தயத்தில் ஈடுபடுத்தப்படும் என கூறப்படுகின்றது. இது, பிரான்ஸின் லீ மான்ஸ் நகருக்கு அருகில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஸ்போர்ட்ஸ் கார் பந்தயமாகும். இது உலகின் மிகப் பழமையான ஆக்டிவ் எண்டூரன்ஸ் பந்தய நிகழ்வாகும்.

இந்த பந்தயத்தில் விரைவில் ஹைட்ரஜன் எஞ்ஜினில் இயங்கும் வாகனங்களுக்கு என பிரத்யேகமாக ஓர் பிரிவை புதிதாக தொடங்க இருப்பதாக 24 ஹவர்ஸ் ஆஃப் லீ மேன்ஸின் ஏசிஓ சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே டொயோட்டா நிறுவனம் ஜிடி எச்2 ரேசிங் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.

Toyota gr h2 racing concept front design

வரும் 2026ம் ஆண்டில் இருந்து இந்த பிரிவின்கீழ் ரேஸ் நடத்தப்பட இருக்கின்றது. இதில் தனது பங்களிப்பை டொயோட்டாவின் இந்த சூப்பபரான ரேஸ் கார் தனது பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றுமொரு சிறப்பு தகவலாக, விரைவில் 24 ஹவர்ஸ் ஆஃப் லீ மேன்ஸ் தனது நூற்றாண்டைக் கொண்டாட இருக்கின்றது.

இந்த கொண்டாட்டத்தை முன்னிட்டே ஹைட்ரஜன் வாகனங்களுக்கான பிரிவு தொடங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், 2030 ஆம் ஆண்டில் இருந்து முழுக்க முழுக்க ஹைட்ரஜனால் இயங்கும் வாகனங்கள் மட்டுமே ரேஸ்க்கு உட்படுத்தப்பட லீ மேன்ஸ் திட்டமிட்டிருக்கின்றது. சரி வாருங்கள் டொயோட்டாவின் ஜிஆர் எச்2 ரேஸிங் கான்செப்ட்டை பற்றி பார்க்கலாம்.

Toyota gr h2 racing concept side design

இந்த கார் பற்றிய கணிசமான தகவல்களே தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த காரில் ஹைட்ரஜன் மற்றும் ஹைபிரிட் சிஸ்டத்தில் இயங்கும் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆகையால், மைலஜ் நாம் எதிர்பார்ப்பதை மிக மிக அதிகமாக இருக்கும். 800கிமீ முதல் 1,000 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரலாம்.

காரில் பயன்படுத்தப்பட இருக்கும் ஹைட்ரஜன் சிலிண்டரைப் பொருத்து இதன் ரேஞ்ஜ் திறன் மாறுபடும். இந்த சூப்பர் கார் 5,100 மிமீ நீளம், 2,050 மிமீ அகலம் கொண்டதாக உருவாக்கப்பட்டு உள்ளது. இது எல்எம்பி1-எச் லீ மேன்ஸ் ப்ரோட்டோடைப்பைக் காட்டிலும் சற்று பெரிய உருவம் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Toyota gr h2 racing concept top view

பன்முக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட காராக இதனை நிறுவனம் வடிவமைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது. இப்போது வெறும் கான்செப்ட் மாடலாக மட்டுமே இதனை நிறுவனம் தயார் செய்திருப்பதால் அந்த காரின் முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக தெரிய வரவில்லை. அதேவேளையில் இப்போது பயன்பாட்டில் இருக்கும் சூப்பர் கார்கள் அனைத்தையும் தூக்கி சாப்பிடும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் ஹைட்ரஜன் ப்யூவல் செல் காரில் இயங்கும் காரை தயாரிப்பது இது முதல் முறையல்ல. இது மிராய் எனும் ஹைட்ரஜன் இயங்கும் காரை ஏற்கனவே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 800க்கும் அதிகமான ரேஞ்ஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, June 12, 2023, 9:04 [IST]
English summary
Toyota unveils gt h2 racing concept here is full details
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X