27 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா கார்! விலை இவ்ளோதானா! டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியதால் மக்கள் படையெடுக்கறாங்க!
இந்திய சந்தையில் தற்போது மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் பல்வேறு கார்களுக்கு, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் வருகை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகியவைதான், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் மிக முக்கியமான போட்டியாளர்கள் ஆகும். இந்த சூழலில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் சிஎன்ஜி (CNG) மாடல் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

வசதிகள் தாராளமா இருக்கு!
டொயோட்டா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் சிஎன்ஜி மாடலிலும் வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை. வசதிகளை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் கூடிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
பவர் அவுட்புட்!
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் சிஎன்ஜி மாடலில், 1.5 லிட்டர், 4 சிலிண்டர், K-சீரிஸ் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 99 பிஹெச்பி பவரையும், 136 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இதன் பவர் அவுட்புட் 87 பிஹெச்பி மற்றும் 121.5 என்எம்-ஆக குறைந்து விடும்.

இவ்ளோ மைலேஜ் கிடைக்குமா!
பவர் அவுட்புட் சற்று குறைகிறதே என நீங்கள் கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டாம். ஏனெனில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி மாடல் மைலேஜை (Mileage) வாரி வழங்கும். அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவிற்கு 26.6 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே அதிக மைலேஜை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய மாடல் சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
சூப்பரான விலையா இருக்கே!
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி மாடல் S மற்றும் G என மொத்தம் 2 வேரியண்ட்களில் கிடைக்கும். இதில், ஆரம்ப நிலை S வேரியண்ட்டின் விலை (Price) 13.23 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டான G வேரியண்ட்டின் விலை 15.29 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.
படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்!
இந்த சூழலில், இந்தியா முழுவதும் உள்ள டொயோட்டா நிறுவனத்தின் டீலர்ஷிப்களுக்கு அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் சிஎன்ஜி மாடல் தற்போது வர தொடங்கியுள்ளது. ஏராளமான வசதிகள் இருப்பதுடன், சிறப்பான மைலேஜையும் வழங்குவதால், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அத்துடன் இந்த காருக்கு டொயோட்டா நிறுவனம் சிறப்பான விலை நிர்ணயத்தையும் செய்துள்ளது.
எனவே அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி மாடல் பற்றி விசாரிப்பதற்காக டொயோட்டா ஷோரூம்களுக்கு வாடிக்கையாளர்கள் பலர் படையெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியிருப்பதை அடுத்துதான், டொயோட்டா, மாருதி சுஸுகி (Maruti Suzuki), டாடா (Tata), ஹூண்டாய் (Hyundai) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு சிஎன்ஜி கார்களை களமிறக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








