இது காரா? இல்ல உல்லாச கப்பலா? போட்டி நிறுவனங்களை மண்டை காய வைத்த டொயோட்டா! புக்கிங் தொடங்கியது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire). இது மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்று. தற்போதைய நிலையில் இந்தியாவில் டொயோட்டா வெல்ஃபையர் காரின் விலை (Price), 96.55 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த சூழலில் 4வது தலைமுறை வெல்ஃபையர் காரை டொயோட்டா நிறுவனம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, சர்வதேச அளவில் பொது பார்வைக்கு கொண்டு வந்தது. இந்த புதிய மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளை, இந்தியாவில் உள்ள ஒரு சில டொயோட்டா டீலர்ஷிப்கள் ஏற்க தொடங்கியுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள பழைய மாடல் டொயோட்டா வெல்ஃபையர் காரின் ஸ்டாக்குகள் மிகவும் குறைவாக மட்டுமே இருப்பதாக தெரிகிறது. எனவே பழைய மாடலுக்கு முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களை, டொயோட்டா டீலர்கள் புதிய மாடலுக்கு முன்பதிவு செய்யும்படி வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இது அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு என்பதால், டீலர்கள் அவர்களாகவே ஒரு தொகையை புக்கிங்கிற்கு நிர்ணயம் செய்திருப்பதாகவும் தெரிகிறது. இதன்படி 2 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரையிலான தொகையை, புதிய டொயோட்டா வெல்ஃபையர் காருக்கு டீலர்கள் நிர்ணயம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சர்வதேச அளவில், டொயோட்டா வெல்ஃபையர் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 2.5 லிட்டர் பெட்ரோல், 2.5 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் மற்றும் 2.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் ஆகும். இதில் 2.5 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன்தான், இந்திய சந்தைக்கான மாடலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா நிறுவனத்தை பற்றிய வேறு செய்திகளை பொறுத்தவரையில், தற்போதைய நிலையில் அதன் இன்னோவா ஹைக்ராஸ் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இதன் மாருதி சுஸுகி வெர்ஷன் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) என்ற பெயரில் இந்த கார் வரவுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மாருதி சுஸுகி இன்விக்டோ கார் வரும் ஜூலை 5ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை காட்டிலும் சற்று அதிகமான விலையில், மாருதி சுஸுகி இன்விக்டோ விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து, 2023 டொயோட்டா வெல்ஃபையர் கார்கள் டெலிவரி செய்யப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த காருக்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு இது நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








