எல்லாராலையும் இந்த காரோட உட்பக்கத்த பார்க்க முடியாது.. 1.55 கோடி ரூபா காரின் உட்பக்கத்தை காணும் வாய்ப்பு!
இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றாக டொயோட்டா வெல்ஃபையர் இருக்கின்றது. இது ஓர் எம்பிவி ரக கார் மாடல் ஆகும். குடும்பத்துடன் தாராளமான இட வசதி உடன் வெளியூர் பயணிக்க ஏற்ற கார் மாடல் இதுவாகும்.
நவீன தொழில்நுட்ப அம்சம் மற்றும் லக்சூரி அம்சம் என அனைத்திலும் மிக மிக சிறந்த டொயோட்டா காராக இது இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இந்திய செல்வந்தர்களின் பிரியமான கார் மாடலாக டொயேட்டா வெல்ஃபையர் காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலுக்கு பணக்காரர்கள் மத்தியில் மட்டுமில்லைங்க திரை நட்சத்திரங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக, மோலிவுட் திரைப் பிரபலங்கள் பலரின் விருப்பமான கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இந்த காரின் விலை மிக மிக அதிகம் என்பதால் நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே எட்டக் கூடிய கனியாக டொயோட்டா வெல்ஃபையர் காட்சியளிக்கின்றது. இதன் ஒற்றை யூனிட்டின் விலையே ரூ. 1.55 கோடி ஆகும்.
இதனால்தான் பலருக்கு இந்த கார் எட்டக் கனியாக இருக்கின்றது. இந்த நிலையிலேயே, இந்த காரின் உட்பக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றிய வீடியோவை யுட்யூபர் வெளியிட்டு இருக்கின்றார். அவர் வெளியிட்டு இருப்பது புதிதாக அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் 2024 டொயோட்டா வெல்ஃபையர் ஆகும்.

மிக சிறப்பான நிலையில் இந்த காரை டொயோட்டா நிறுவனம் அப்டேட் செய்திருக்கின்றது. 2023 டொயோட்டா வெல்ஃபையரைப் போலவே 2024 வெல்ஃபையரின் வெளிப்பக்கமும் பார்க் மிகுந்த பிரீமியமான லுக்கில் காட்சியளிக்கின்றது. மிக கணிசமான மாற்றமே இதில் செய்யப்பட்டு இருக்கின்றது. பெரிய கிரில் காரின் முகப்பு பகுதியில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஆறு தடிமனான ஸ்லேட்டுகளை அடுக்கி வைத்ததைப் போன்ற ஓர் க்ரில்லே காரின் முகப்பு பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன் ஸ்பிளிட் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லைட், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமிரா உள்ளிட்டவை காரின் முகப்பு பகுதியில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, எல்இடி பனி மின் விளக்கு, பம்பர் சேர்த்து வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதன் பக்கவாட்டு பகுதியைப் பொருத்த வரை எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதேபோல் எஞ்சின் விஷயத்திலும் நிறுவனம் மாற்றத்தைச் செய்யவில்லை. 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இரண்டும் இணைந்து 193 பிஎஸ் மற்றும் 240 என்எம் டார்க்கை வெளியேற்றும். கியர்பாக்ஸை பொருத்த வரை இ-சிவிடி-யே வழங்கப்பட்டு இருக்கின்றது. டொயோட்டா வெல்ஃபையரின் உட்பக்கம் சொகுசு கப்பல்களுக்கு இணையானதாகக் காட்சியளிக்கின்றது. பிரீமியம் தர லெதர் போர்வை இதன் இருக்கைகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், டேஷ்போர்டில் மிருதுவான மெட்டீரியலிலான போர்வைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தால் இதன் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இவற்றுடன் சேர்த்து 14 அங்குல அளவிலான பெரிய திரை இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இது தொடுதிரை வசதிக் கொண்டதாகும்.
இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாக இது வேலை செய்யும். இதுபோன்று இன்னும் பல அம்சங்களை இந்த காரில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், அடாஸ் தொழில்நுட்பம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, வெண்டிலேட் மற்றும் ஹீட் ஆகும் வசதிக் கொண்ட இருக்கை, எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் ஸ்டியரிங் வீல் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
பொதுவாக எம்பிவி ரக கார்களில் மூன்றாவது வரிசை இருக்கையில் அமர்பவர்களுக்கு பெரிய அளவில் வசதி இருக்காது. ஆனால், இந்த காரின் மூன்றாவது வரிசை இருக்கைகள் மிகுந்த சொகுசான மற்றும் லக்சூரி ரைடு அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது. இதனால்தான் பல தொழிலதிபர்கள் இந்த காரை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மிக மிக விலை உயர்ந்த டொயோட்டா காராக வெல்ஃபையர் காட்சியளிக்கின்றது. இந்த காரை அனைவராலும் பார்த்துவிட முடியாது. இந்த நிலையிலேயே அதன் உட்பக்கத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்கிற நோக்கில் யுட்யூபர் அதன் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications









