நட்புக்காக படத்துல வர்ற மாதிரி காசை மூட்டையில் கொட்டினாலும் இந்த காரை உடனே வாங்க முடியாது! தவம் இருக்கணும்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire). இதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை டொயோட்டா நிறுவனம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் ஆரம்ப விலை 1.19 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். டிஎன்ஜிஏ-கே (TNGA-K) பிளாட்பார்ம் அடிப்படையில், 2023 டொயோட்டா வெல்ஃபையர் கார் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) இந்த கார் கிடைக்கும். அவை ஹை-க்ராண்டு (Hi Grand) மற்றும் விஐபி கிரேடு (VIP Grade) ஆகும்.

Toyota Vellfire

டொயோட்டா வெல்ஃபையர் காரின் இந்த புதிய மாடலுக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே இதன் காத்திருப்பு காலம் (Waiting Period) மிகவும் அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் புதிய டொயோட்டா வெல்ஃபையர் காருக்கான காத்திருப்பு காலம் 10 மாதங்கள் வரை உள்ளது.

அதாவது நீங்கள் இன்றைய தினம் புதிய டொயோட்டா வெல்ஃபையர் காரை முன்பதிவு செய்தால், 10 மாதங்கள் கழித்துதான் உங்களுக்கு கார் டெலிவரி செய்யப்படும். இந்த காத்திருப்பு காலமானது, நீங்கள் தேர்வு செய்யும் நிறம், வேரியண்ட், உங்களின் ஊர் மற்றும் டீலர்ஷிப் ஆகியவற்றை பொறுத்து சற்று மாறுபடலாம்.

2023 Toyota Vellfire

எனவே உங்களுக்கு அருகில் உள்ள டீலர்ஷிப்பை நீங்கள் அணுகுவது, இன்னும் தெளிவான தகவல்களை பெற உங்களுக்கு உதவி செய்யலாம். செயல்திறனை பொறுத்தவரையில், 2023 டொயோட்டா வெல்ஃபையர் காரில், 2.5 லிட்டர், ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 190 பிஹெச்பி பவர் மற்றும் 240 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 19.28 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டா நிறுவனம் தெரிவிக்கிறது. எனவே புதிய டொயோட்டா வெல்ஃபையர் காரை நீங்கள் வாங்கினால், உங்களுக்கு அதிக மைலேஜ் கிடைக்கும் என்பதுடன், சொகுசான பயணமும் கிடைக்கும். கூடவே இந்த காரில் நிறைய பேர் பயணம் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டொயோட்டா வெல்ஃபையர் காரானது, சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில், மற்றொரு எம்பிவி ரக காரையும் டொயோட்டா நிறுவனம் பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. அது டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) கார் ஆகும்.

மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் அடிப்படையில்தான், டொயோட்டா ரூமியான் உருவாக்கப்பட்டுள்ளது. டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்களின் கூட்டணியில் பல்வேறு கார்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி கொண்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக விற்பனைக்கு வரவுள்ள கார்களில் ஒன்றுதான் டொயோட்டா ரூமியான்.

தற்போதைய நிலையில் இந்த கார் பொது பார்வைக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. ஆனால் கூடிய விரைவில் டொயோட்டா ரூமியான் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டொயோட்டா ரூமியான் காரின் விலை (Price) எவ்வளவு? என்பது அப்போதுதான் தெரியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) போன்ற கார்களுடன் எம்பிவி செக்மெண்ட்டில் மிகவும் வலுவாகதான் உள்ளது. இந்த சூழலில் விற்பனைக்கு வந்துள்ள வெல்ஃபையர் காரும், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ரூமியான் காரும் எம்பிவி செக்மெண்ட்டில் டொயோட்டா நிறுவனத்தை மேலும் வலுவாக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 9, 2023, 23:57 [IST]
English summary
Toyota vellfire waiting period all details here
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+