உங்க கிட்ட எவ்வளவு கோடி பணம் இருந்தாலும் சரி இந்த காரை வாங்க வெயிட் பண்ணி தான் ஆகனும் ஏன் தெரியுமா?

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார்களுக்கான காத்திருப்பு காலம் குறித்த தகவல் எல்லாம் தற்போது வெளியாகி உள்ளது. இதன்படி சில கார்களுக்கு சுமார் ஒரு ஆண்டிற்கும் மேலாக காத்திருப்பு காலம் இருக்கிறது. டொயோட்டா நிறுவன கார்களின் விற்பனை சமீப காலமாக அதிகரித்துள்ளதால் இந்த காத்திருப்பு காலமும் அதிகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டொயோட்டா நிறுவனம் கடந்த சில மாதங்களாக தனது விற்பனையை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் ஆகிய கார்களின் வருகைக்குப் பிறகு இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை என்பது அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் குறைந்த விலை காராக கிளான்ஸா கார்.

toyota waiting period nov 2023

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை பொறுத்தவரை ஒரு முழு சைஸ் எஸ்யூவி காராக விற்பனையாகி வருகிறது. இந்த கார் நீண்ட காலமாக சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கும் நிலையில் விரைவில் இந்த காரின் மைல்டு ஹைபிரிட் வேரியன்ட் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் காரின் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் மைலேஜ் அதிகரிக்கப்படும். இந்த 7 சீட்டர் காரில் சில வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் நான்கு மாதம் வரை இருக்கிறது.

அடுத்ததாக இன்னோவா கிரைஸ்டா காரை பொறுத்தவரை அப்டேட் செய்யப்பட்ட கிரைஸ்டா கார் தற்போது இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இருந்தாலும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் வந்த பிறகு இந்த காருக்கான மவுசு கொஞ்சம் குறைந்துவிட்டது என்று சொல்லலாம். இந்த காருக்கு தற்போது 8 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது.

toyota waiting period nov 2023

அடுத்ததாக புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை பொறுத்தவரை சுமார் 12 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு காலம் இருக்கிறது. இந்த கார் இந்த ஆண்டு துவக்கத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இந்த காருக்கு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்கின்றது. பலர் விரும்பி வாங்கி வருகின்றனர்.

குறிப்பாக இந்த காரின் ஹைபிரிட் வேரியன்ட் மக்கள் அதிகம் விரும்பி வருகின்றனர். இதனால் இந்த காரின் விற்பனை அதிகமாக இருக்கிறது. அந்நிறுவனம் எதிர்பார்த்ததை விட அதிக விற்பனையில் இருப்பதால் அது தயாரிப்பு குறைவாக இருக்கிறது. இதனால் காத்திருப்பு காலம் அதிகமாக உள்ளது.

toyota waiting period nov 2023

இதே நிலைமைதான் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காருக்கும் இருக்கிறது. இந்த காரும் அறிமுகம் ஆகும்போது டொயோட்டா நிறுவனம் இந்த அளவுக்கு விற்பனையாகும் என நினைக்கவில்லை. அர்பன் க்ரூஸர் கார் எதிர்பார்த்த அளவு விற்பனையை பெறாததால் இந்த காரும் விற்பனையை குறைவாக தான் பெறும் என கருதினார்கள். ஆனால் அவர்கள் நினைத்ததை விட விற்பனை பலமுடன் அதிகமாக இருப்பதால் தற்போது இந்த கார்கான காத்திருப்பு காலமும் 12 மாதங்களுக்கும் மேலாக உள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் காரை மாருதி நிறுவனம் ரீபேட்ஜ் செய்து இன்விக்டோ என்ற பெயரில் தற்போது தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அதேபோல அர்பன் க்ரூஸர் ஹைரைடர் என்ற காரையும் மாருதி நிறுவனம் கிராண்ட் விட்டாரா என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த இரு கார்களும் கர்நாடக பிடதியில் உள்ள டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்பு ஆலையில் தான் மாருதி பெயரில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது.

toyota waiting period nov 2023

தற்போது vx, vx(o) zx மற்றும் zx (o) விற்பனை ஆகிறது இதில் zx மற்றும் zx (o)ஆகிய வேரியன்ட்களுக்காக புக்கிங் தற்போது நடக்கவில்லை. vx, vx(o) வேரியன்ட்களுக்காக புக்கிங் நடக்கிறது.அதே நேரம் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் G மற்றும் GX வேரியன்ட்கள் தற்போது 4 முதல் 6 மாதம் வரை காத்திருப்பு காலம் கொண்டதாக இருக்கிறது.

இந்த கார் போது 18.8 லட்சம் முதல் 19.7 லட்சம் என்ற விலையில் விற்பனை பெட்ரோல் வெர்ஷினில் விற்பனையாகி வருகிறது. ஹைபிரிடை பொருத்தவரை ரூபாய் 25.3 லட்சம் முதல் 27.3 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த விலை எல்லாம் எக்ஸ் ஷோரூம் விலைதான் ஆன்ரோடு விலை அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய அறிமுகமாக மாருதி நிறுவனத்தின் பிரான்ஸ் காரின் டொயோட்டா ரிபேட்ஜ் வெர்ஷன் கார்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா நிறுவனம் மெல்ல மெல்ல இந்தியாவில் தனது காலடி தடத்தை பலமாக பதித்து வருகிறது. இதற்கு மாருதி நிறுவனத்துடன் இந்நிறுவனம் செய்த ஒப்பந்தமும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் நீண்ட நாட்களாக காரர்களை தயாரித்து விற்பனை செய்து வந்தாலும் சமீபத்தில் நிறுவனம் பெரிய அளவில் குறைந்த விலை கார்களை அறிமுகம் செய்யாததால் விற்பனை அதிக அளவில் இல்லை, இருந்தாலும் மாருதி நிறுவனத்துடன் தற்போது போட்டுள்ள ஒப்பந்தத்தால் நிறுவனத்தின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. இது போக இன்னோவா ஹைகிராஸ் காரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 21, 2023, 16:42 [IST]
English summary
Toyota waiting period nov 2023 innova glanza hyryder fortuner
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X