இவங்க வளந்துட கூடாதுனு நினைக்குதோ! டொயோட்டாக்கு இந்த 2கார்களை மட்டும் தர மாட்டோம்.. மாருதி சுஸுகி திட்டவட்டம்!

மாருதி சுஸுகி (maruti Suzuki) - டொயோட்டா (Toyota), இந்த நிறுவனங்களும் இந்தியாவில் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த இணைவின்கீழ் இரு நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளை பகிர்ந்துக் கொண்டு இருக்கின்றன. அந்தவகையில், மாருதி சுஸுகியின் தயாரிப்புகள் சிலவற்றை டொயோட்டாவும், டொயோட்டாவின் தயாரிப்புகள் சிலவற்றை மாருதி சுஸுகியும் ரீ-பேட்ஜ் செய்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில்கூட மாருதி சுஸுகி நிறுவனம் டொயோட்டாவின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி ரக காரை ரீ-பேட்ஜ் செய்து விற்பனைக்குக் களமிறக்கியது. இது தற்போது சந்தையில் மாருதி சுஸுகி இன்விக்டோ எம்பிவி எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Suzuki jimny

இதேபோல், மாருதி சுஸுகியின் தயாரிப்பான பலினோவை கிளான்ஸா என்கிற பெயரிலும், எர்டிகாவை ரூமியன் என்கிற பெயரிலும் ரீ-பேட்ஜ் செய்து டொயோட்டா விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. இவை அனைத்தும் நல்ல வரவேற்பை நாட்டு மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுதவிர, இவர்கள் இருவரும் இணைத்து புதிய கார்களை தயாரித்தும் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.

அந்தவகையில் மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டாவின் கூட்டணியில் தயாரான கார் மாடலே மாருதி சுஸுகி பிராண்டின்கீழ் கிராண்ட் விட்டாரா என்கிற பெயரிலும், டொயோட்டா பிராண்டில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் என்கிற பெயரிலும் விற்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு பலதரப்பட்ட செயல்களில் இரு நிறுவனங்கள் ஈடுபட்டு வரும்நிலையில், மாருதி சுஸுகி நிறுவனம் திடீரென அதிர்ச்சி குண்டை போட்டு இருக்கின்றது.

Suzuki swift

அதாவது, தன்னுடைய புகழ்பெற்ற கார் இரண்டை மட்டும் டொயோட்டா உடன் பகிர்ந்துக் கொள்ளப் போவதில்லை என்கிற தகவலே வெளியாகி இருக்கின்றது. ஜிம்னி மற்றும் ஸ்விஃப்ட் ஆகியவையே அவை ஆகும். அதேசமயம், இந்த இரு கார் மாடல்களையும் ரீ-பேட்ஜ் செய்து விற்பனைக்குக் கொண்டு வருவதில் மிக தீவிரமாக டொயோட்டா இருக்கின்றது.

இருப்பினும், இந்த கார்களை தரப் போவதில்லை என்பதில் மாருதி சுஸுகி உறுதியாக இருக்கின்றது. டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மாடலுக்கு அடுத்தபடியாக மிக மலிவான விலையில் 4X4 வசதிக் கொண்டதாக ஜிம்னியை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என்கிற திட்டத்தில் இருக்கின்றது. ஆனால், இரு மாடல்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதால் அதனை பகிர்ந்துக் கொள்ளப் போவதில்லை என மாருதி சுஸுகி தெரிவித்து இருக்கின்றது.

டொயோட்டாவின் ஃபார்ச்சூனர், இன்னோவா ஆகிய கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், அந்த நிறுவனம் இந்தியாவில் மிகவும் உறுதியாக இடம் பிடிக்க அதன் ரீ-பேட்ஜ் செய்த மாடல்களே பெரும் உதவியாக இருக்கின்றது. இந்த நிலையை மேலும் வலுவாக்கும் நோக்கிலேயே ஜிம்னி மற்றும் ஸ்விஃப்டையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது டொயோட்டா.

ஆனால், இந்த எண்ணத்திற்கு முற்று புள்ளி வைத்துள்ளது மாருதி சுஸுகி. மஹிந்திராவின் தார் கார் மாடலுக்கு போட்டியாக இந்தியாவில் மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வந்த கார் மாடலே ஜிம்னி ஆகும். இதற்கும் நல்ல வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஜுன் மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டும் 15,476 யூனிட்டுகள் வரை விற்பனையாகின என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக ஸ்விஃப்ட் இருக்கின்றது. பல ஆண்டுகளாக ஹேட்ச்பேக் கார் பிரிவில் இந்த கார் மாடல் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதனால்தான் டொயோட்டா இந்த கார் மாடலை தன்னுடன் இணைத்துக் கொள்ள விரும்புகின்றது. இதன் வாயிலாக நிறுவனம் சந்தையில் இன்னும் பலமான விற்பனையைப் பெற முடியும் என நம்புகின்றது. இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல்கள் 25 சதவீதத்தை பிடித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டொயோட்டா-மாருதி சுஸுகி கூட்டணியின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வந்த கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக அர்பன் க்ரூஸர் மற்றும் கிராண்ட் விட்டாராவை ஆகியவை இருக்கின்றன. இவை மைலேஜ் தருவதில் மிக சிறந்த கார் மாடல்களாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, December 29, 2023, 21:03 [IST]
English summary
Toyota wants incorporate jimny and swift but maruti rejects here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+