நாம நினைச்ச மாதிரியில்ல! மாருதியால டொயோட்டா இவ்வளவு சம்பாதிக்குதா? இது கொல மாஸா இருக்குதே!
மாருதி நிறுவனத்தில் உள்ள ஒப்பந்தத்திற்கு பிறகு டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை மாருதி நிறுவனத்தால் அதிகமாகி இருப்பதாக தற்போது அறிக்கை வெளியாகி உள்ளது. சர்வதேச அளவில் மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனங்களுக்கிடையே தங்கள் வாகனங்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் இருக்கிறது. இதன்படி இரு நிறுவனங்களும் வாகனத்தை பகிர்ந்து வரும் நிலையில் இப்படியாக ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவாக காணலாம் வாருங்கள்.
சர்வதேச அளவில் மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்களும் தங்கள் வாகனங்களை பரிமாற்றம் செய்து ரிபேட்ஜ் செய்து வேறு வேறு பெயர்களில் இந்தியாவில் விற்பனை செய்யலாம் என ஒப்பந்தம் செய்துள்ளன.

அதன் படி இரு நிறுவனங்களும் தங்களது தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் லாபம் கிடைக்கும் என்ற நோக்கில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இரு நிறுவனங்களும் தங்கள் கார்களை பகிர்ந்து வருகின்றன. இரு நிறுவனங்களும் பல கார்களை தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
மாருதி நிறுவனத்தின் பழைய எர்டிகா கார் டொயோட்டா நிறுவனத்தின் கிளன்ஸா என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது. டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹை கிளாஸா கார் மாருதி நிறுவனத்தின் இன்விக்டோ என்ற பெயரில் விற்பனையாகிறது. மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் டொயோட்டோ நிறுவனத்தின் ரூமியான் என்ற பெயரில் ரிப்பேர் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இப்படியாக இரு நிறுவனங்களும் மாறி மாறி தங்கள் கார்களை பகிர்ந்து வரும் நிலையில் டொயோட்டோ நிறுவனம் இந்த பகிர்வால் மிகப்பெரிய லாபம் அடைந்துள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது. இந்த 2003 ஆம் காலண்டர் ஆண்டின் படி டொயோட்டா நிறுவனம் செய்துள்ள மொத்த விற்பனையில் 40 சதவீத கார்கள் மாருதி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ரீபேட்ஜ் வெர்ஷன் மூலம் நடந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு காலண்டர் ஆண்டில் மொத்தம் 1.60 லட்சம் கார்களை மட்டுமே டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த 2023 காலண்டர் ஆண்டில் இதுவரை முடிந்த 8 மாத விற்பனையில் டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே 1.5 லட்சம் கார்களை விற்பனை செய்து விட்டது. மிக விரைவில் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் இதுவரை செய்யாத அளவிற்கு அதிகமான கார்களை விற்பனை செய்து புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் தனது தடத்தை இன்னும் பெரிதாக்க முயற்சி செய்து வருகிறது. இன்னும் சிறு சிறு நகரங்களில் தங்கள் பங்களிப்பை விரிவு படுத்துவதற்காக முடிவு செய்துள்ளது. டொயோட்டா நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் 600 டீலர்களை வைத்துள்ளது. இதை மேலும் விரிவுபடுத்தி டொயோட்டா கார்களின் விற்பனையை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது.
டொயோட்டா நிறுவனத்திடம் தற்போது விற்பனையாகும் கார்களிலேயே டொயோட்டா கிளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய இரண்டு கார்கள் மட்டுமே சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இதில் டொயோட்டோ கிளான்ஸ் கார் மாருதியின் பலேனோ காரை ரீபேடஜ் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல இரு நிறுவனங்களும் சேர்ந்து தயாரித்த காரை மாருதி நிறுவனம் கிராண்ட் விட்டாரா என்ற பெயரிலும் டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரேடர் என்ற பெயரிலும் விற்பனை செய்து வருகிறது.
டொயோட்டா கிளான்ஸா காரை பொருத்தவரை ரூபாய் 6.81 லட்சம் என்ற விலையில் துவங்கி அதிகபட்சமாக ரூபாய் 10 லட்சம் வரை என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரைப் பொறுத்தவரை ரூபாய் 10.73 லட்சம் என்ற விலையில் துவங்கி 19.74 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தான் தனது ரூமியான் என்ற எம்பிவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது இது மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரின் ஆகும் மூன்று வரிசை சீட்டர் கொண்ட இந்த எம்பி கார் ரூபாய் 10.29 லட்சம் என்ற விலையில் துவங்கி ரூபாய் 13.68 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதில் சிஎன்ஜி ஆப்ஷனும் இருக்கிறது.
இதுபோக டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிளாஸ் மற்றும் இனோவா கிரைஸ்டா என்ற இரண்டு எம்பிவி கார்களை விற்பனை செய்து வருகிறது இந்த இரண்டு காலிலும் ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் இருக்கிறது. இந்த கார்கள் ரூபாய் 19.67 லட்சம் முதல் ரூபாய் 30.26 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டொயோட்டா நிறுவனத்திடம் ஹைரைடரைக்கு மேலாக ஒரு எஸ்யூவி காரர் என்றால் அது பார்ச்சூனர் எஸ்யூவி காராக தான் இருக்கிறது. இது மிகப்பெரிய எஸ்யூவிக்காக விற்பனையாகி வருகிறது. இந்த கார் ரூபாய் 33 லட்சம் முதல் ரூபாய் 50.74 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுபோக டொயோட்டா நிறுவனம் ஹெலிக்ஸ் பிக்கப் டிரக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரூபாய் 30.40 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்பார்க் கருத்து: டொயோட்டா மற்றும் மாருதி ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தால் மாருதி நிறுவனம் தான். ஹைபிரிட் தொழில்நுட்பு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பத்தை பெற்று லாபம் பெறுகிறது என பலரால் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனம் தனது விற்பனை அறிக்கையின் மூலம் டொயோட்டா நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை சந்தித்து வருவதை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








