டொயோட்டா தனக்கு நல்லது என நினைத்து மாருதி காரின் விற்பனையை அதிகப்படுத்த முயற்சி!

டொயோட்டா நிறுவனம் மத்திய அரசுக்கு ஹைபிரிட் கார்களுக்கான வரியை குறைக்க சொல்லி கடிதம் எழுதியுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ஆட்டோ மொபைல்களுக்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது. வாகனத்தின் வகையை பொறுத்து வரிவிதிப்பு மாறுபடுகிறது. ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு வகையான வரி விதிப்பு போடப்படுகிறது. இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் ஹைபிரிட் கார்களுக்கான வரியை குறைக்க சொல்லி மத்திய அரசுக்கான ஆலோசனை வழங்கும் நிதி அயோக் அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது.

Toyota Hybrid Car Tax Cut

டொயோட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் விக்ரம் குளாட்டி இந்த கடிதத்தை கடந்த 20ஆம் தேதி நிதி அயோக் அமைப்பிற்கு எழுதினார். அதில் அவர் ஹைபிரிட் கார்களுக்கான வரியை 11 சதவீத புள்ளிகளும் பிளக்ஸ் ஹைபிரிட் வாகனங்களுக்கான வரியை 14 புள்ளிகளும் பெட்ரோல் காரை விட குறைவாக வைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது பெட்ரோல் வாகனங்களுக்கு 48 சதவீதமும் ஹைபிரிட் வாகனங்களுக்கு 43 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது எலெக்ட்ரிக் வாகனங்களை பொருத்தவரை மாசு ஏற்படுத்தாத வாகனம் என்பதால் இதற்கு 5 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஹைபிரிட் மற்றும் பிளக்ஸ் ஹைபிரிட் வாகனங்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என டொயோட்டா நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Toyota Hybrid Car Tax Cut

அந்நிறுவனம் வைத்துள்ள கோரிக்கையின் படி ஹைபிரிட் வாகனங்களுக்கான வரியை 37 சதவீதமாகவும் பிளக்ஸ் ஹைப்ரிட் வாகனங்களுக்கான வரியை 34 சதவீதமாகவும் குறைக்க வேண்டும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹைபிரிட் மற்றும் பிளக்ஸ் ஹைபிரிட் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு பெட்ரோல் வாகனங்களை விட குறைவான மாற்று தான் ஏற்படுத்துவதால் இந்த நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இநிறுவனம் தனது ஹைபிரிட் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது நமக்கு கண்கூடாக தெரிகிறது. இந்நிறுவனத்திடம் உள்ள ஹைபிரிட் தொழில்நுட்பத்தை தான் மாருதி நிறுவனமும் பகிர்ந்து வருகிறது. மத்திய அரசு இதற்கு செவி சாய்த்து ஹைபிரிட் வாகனங்களுக்கான வரியை குறைத்தால் இதன் மூலம் டொயோட்டா மற்றும் மாருதி ஆகிய இரு நிறுவனங்களும் மிகப்பெரிய அளவில் பலன் அடையும்.

Toyota Hybrid Car Tax Cut

இதனால் ஹைபிரிட் மற்றும் பிளக்ஸ் ஹைபிரிட் வாகனங்களின் விலை கணிசமான அளவு குறைய வாய்ப்புள்ளது. ஐந்து முதல் ஆறு சதவீதம் என்பது காரின் விலையை ரூபாய் 50,000 வரை குறைக்க உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் பல ஹைபிரிட் வாகனங்களை விரும்பி வாங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான மாசுவையும் வாகனமாக மாறிய பின்பு ஏற்படுத்தாது என்பதால் அது மிகக் குறைவான வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்படுகிறது. தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 5 சதவீதம் தான் வரி விதிக்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. டீசல் வாகனங்களுக்காண வரி மேலும் அதிகமாகவே வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் இப்படியாக வரிவிதிப்பை குறைக்க சொல்லி வைத்திருக்கும் கோரிக்கையை நிறுவனத்தின் விற்பனையை அதிகப்படுத்தும் ஒரு தந்திரம் தான். டொயோட்டா நிறுவனம் தன் நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் மாருதி நிறுவனத்திற்கும் கார்களை தயாரித்து வருவதால் மார்க்கெட்டில் மாருதி நிறுவனத்தின் கார்களின் விலையும் குறைய வாய்ப்பு உள்ளது

More from DriveSpark

Article Published On: Monday, October 23, 2023, 17:31 [IST]
English summary
Toyotas request to reduce taxes on hybrid cars to central govt
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X