இந்த கார் மோதினதுக்கா டிராக்டர் ரெண்டு துண்டாச்சு.. எல்லாரும் இந்த காரை வாங்கி குவிக்க போறாங்க!

மஹிந்திரா (Mahindra and Mahindra) நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்று தார் (Thar) எஸ்யூவி. இந்த கார் அதிக உறுதியானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், ஒரு டிராக்டரையே இரண்டு துண்டாக பிளக்கும் அளவிற்கு அதிக உறுதியானது என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டீர்கள்.

சமீபத்தில் மஹிந்திரா தார் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் டிராக்டருடன் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்திலேயே டிராக்டரை அது ரெண்டு துண்டாக உடைத்திருக்கின்றது. மிக வேகமாக வந்து மோதியதன் காரணத்தினால், அதன் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் டிராக்டர் இரண்டு துண்டுகளாக உடைந்திருக்கின்றன. பிஸ்கட்டைபோல இரண்டு துண்டாக அது உடைந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

Tractor breaks into two

அதேவேளையில், இதை ரெண்டு துண்டாக்கிய மஹிந்திரா தார் காரை பார்க்கையில் அந்த அளவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இல்லை. ஏனெனில், டிராக்டருடன் ஒப்பிடுகையில் அது சந்தித்து இருக்கும் சேதம் சற்று குறைவுதான். ரெண்டு துண்டாக டிராக்டர் உடைந்திருக்கும்நிலையில், தார் காரின் முகப்பு பகுதி மட்டுமே சேதமடைந்திருக்கின்றது.

முகப்பு பகுதி முழுவதுமாக உருக்குலைந்து போயிருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. இந்த விபத்திற்கு டிராக்டர் தவறான வழியில் வந்ததே காரணம் என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அதிக வேகத்தில் வந்த மஹிந்திரா தார் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது மோதி இருக்கின்றது.

இந்த கோர விபத்தின்போதே டிராக்டர் மிகக் கொடூரமாக உருக்குலைந்திருக்கின்றது. குஜராத் மாநிலம் உனா-பவ்நகர் நெடுஞ்சாலையிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. சுமார் மாலை 7.30 மணி அளவில் விபத்து அரங்கேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் டிராக்டரில் வந்தவருக்கு மிக மோசமான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

அவரை மீட்ட சக வாகன ஓட்டிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கின்றனர். அதேவேளையில், மஹிந்திரா தார் காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றனர். எந்தவித பெரிய காயமும் இன்றி அவர்கள் தப்பி இருக்கின்றனர். இதற்கு தார் காரின் அதிக உறுதியான கட்டமைப்பே காரணமாக இருக்கின்றது.

இந்த கார் பாதுகாப்பு தரத்தில் ஐந்துக்கு நான்கு ஸ்டார்கள் ரேட்டிங்கைப் பெற்ற வாகனம். இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்ற காரணத்தினாலேயே மிக மோசமான விபத்தைச் சந்தித்த போதிலும் தார் காரில் இருந்தவர்கள் பத்திரமாக இருந்திருக்கின்றனர். இதுபோன்று இந்த கார் பேராபத்துகளில் இருந்து தன்னுடைய பயணிகளைப் பாதுகாப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் தார் கார் சார்ந்த அரங்கேறிய விபத்துகளில் பயணிகள் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன விபத்துகளின் எண்ணிக்கைத் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு வாகன ஓட்டிகள் போக்குவரத்து மதிக்காததே முக்கிய முக்கிய காரணமாகும். தற்போதைய தார்-டிராக்டர் விபத்து நிகழ்விற்கும் போக்குவரத்து விதிமீறலே காரணமாக உள்ளது. ஆகையால், அனைவரும் கட்டாயம் போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் மட்டுமே விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 10, 2023, 15:16 [IST]
English summary
Tractor breaks into two due to thar collision
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+