ராயல் என்பீல்டுக்கு போட்டியா பைக்கை களமிறக்கிய நிறுவனம் செஞ்ச வேலைய பாத்தீங்களா! எல்லாரும் அரண்டு போயிருக்காக!

ராயல் என்பீல்டுக்கு போட்டியாக சமீபத்தில் பைக்கை அறிமுகம் செய்த பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று முன்னணி சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும் விதமாக கார் விற்பனையில் களமிறங்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் டிரையம்ப்-ம் ஒன்று. இந்த நிறுவனம் வெகு சமீபத்தில் இந்திய இருசக்கர வாகன உலகின் முன்னணி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ உடன் இணைந்து இரு புதுமுக மோட்டார்சைக்கிள்களை உருவாக்கியது. இரண்டும் டிரையம்ப்-இன் பிராண்டின்கீழ் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.

Triumph tr25 roadster concept

ஏற்கனவே அவை நாட்டில் விற்பனைக்கு வந்துவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் ஆகிய மோட்டார்சைக்கிள்களையே பஜாஜ் உடனான கூட்டணியில் டிரையம்ப் உருவாக்கியது. இரண்டும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையிலேயே டிரையம்ப் நிறுவனம் தன்னுடைய கான்செப்ட் (முன் மாதிரி) மாடல் காரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது. பஜாஜ் உடன் சேர்ந்து மலிவு விலை மோட்டார்சைக்கிள்களை உருவாக்கியதைப் போல் இந்த கான்செப்ட் காரை பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ உடன் இணைந்தே டிரையம்ப் தயார் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Triumph tr25 roadster concept rear style

டிரையம்ப் கார் உற்பத்தியில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. நிறுவனம் 1950ஸ் மற்றும் 1960ஸ்-களில் கார் உற்பத்தியில் பெயர்போன நிறுவனமாக விளங்கிக் கொண்டிருந்தது. 1984 ஆம் ஆண்டில் நிறுவனம் வாகன உற்பத்தியில் இருந்த ஓய்வு பெற்றது. அப்போதே கார் உற்பத்திகள் கைவிடப்பட்டன.

இந்த நிலையிலேயே மீண்டும் கார் உற்பத்தியை டிரையம்ப் கையில் எடுத்திருக்கின்றது. மக்கினா டிஆர்25 எனும் ரோட்ஸ்டர் ரக கான்செப்ட் கார் மாடலையே அது தயாரித்து இருக்கின்றது. இந்த வாகனம் முழுக்க முழுக்க நிறுவனத்தின் புகழ்பெற்ற ஜெப்பெக் டிரையம்ப் டிஆர்2, எம்விசி 575-க்கு மரியாதை செலுத்தும் விதமாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

Triumph tr2

உருவமும் அந்த காருடன் ஒத்துப்போவதை நம்மால் பார்க்க முடிகின்றது. அதேவேளையில், நவீன கால அம்சம் மற்றும் உருவாக்க யுக்தியை இதில் கையாண்டு இருப்பதால் எதிர்காலத்திற்கான வாகனமாக புதிய மக்கினா டிஆர்25 மாறி இருக்கின்றது. இந்த கான்செப்ட் கார் ஒருவர் மட்டுமே பயணிக்கின் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த காரை பார்க்கையில் கார் போலவே தெரியவில்லை. அது ஓர் கப்பல் போலவே தோற்றத்தில் பிரதிபலிக்கின்றது. இதற்கேற்பவே மக்கினா டிஆர்25-இன் பின் பக்க லுக்கும் அமைந்திருக்கின்றது. இத்துடன், சிசர் ரக கதவுகள், 3 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல் போன்ற மிகவும் குறைவான அம்சங்கள் மட்டுமே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Triumph tr25 roadster concept seat

டிரைவர் மட்டுமே இந்த காரில் பயணிப்பார் என்பதால் அவருக்கு தேவைப்படும் அம்சங்கள் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த வாகனம் ஓர் மின்சார வாகனம் ஆகும். பிஎம்டபிள்யூவின் பிரபல எலெக்ட்ரிக் கார் மாடலான ஐ3எஸ்-ஐ தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தளமே இந்த காரை தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

காரின் ஒட்டுமொத்த எடை சரிசமமாக அனைத்து பக்கத்திற்கும் பகிர்ந்துக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் ஒட்டுமொத்த எடை 1,095 கிலோவாகும். 42.2 kWh பேட்டரி பேக் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 500 கிமீ அதிகமான கிமீ ரேஞ்ஜை வழங்கும் என தெரிகின்றது.

மேலும், 184 பிஎஸ் மற்றும் 270 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டாரே மக்கினா டிஆர்25-இல் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. பின் வீலுக்கு மட்டுமே இதில் பொருத்தப்பட்டு இருக்கும் மின்சார மோட்டார் இயங்கும் திறனை வழங்கும். இதனால் மணிக்கு 185 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்.

மேலும், வெறும் 5.2 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை இதனால் எட்ட முடியும். இந்த காரின் உற்பத்தி பணிகள் எப்போது தொடங்கப்படும் என்கிற விபரம் வெளியிடப்படவில்லை. ஆகையால், இது விற்பனைக்கு வருவது பற்றிய தகவலை எங்களால் துள்ளியமாக கூற முடியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரையம்ப் பழையபடி கார் உற்பத்தியில் களமிறங்கி இருப்பது சில கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு வயிற்றைக் கலக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, ஃபெர்ராரி மற்றும் லம்போர்கினி போன்ற நிறுவனங்களுக்கு கான்செப்ட் மக்கினா டிஆர்25-இன் வெளியீடு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 15, 2023, 20:06 [IST]
English summary
Triumph tr25 concept ev unveiled here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X