ரொம்ப எல்லாம் செலவு ஆகாது!! இந்த பவர்ஃபுல் கார்களுள் ஒன்றை வாங்கி ஏரியாவில் மாஸ் காட்டுங்க!
இன்றைய காலத்தில் கார்களை வாங்குவோர், காரின் தோற்றன் அழகாக இருக்க வேண்டும் என நினைக்கும் அதேநேரம், கார் ஆற்றல்மிக்கதாகவும் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதாவது, குறைந்த வேகத்தில் இயங்கக்கூடிய காரில் அதிக வேகத்தில் இயங்குவதை விட, அதிவேகத்தில் இயங்கக்கூடிய காரில் குறைவான வேகத்தில் இயங்கவே பெரும்பாலானோர் ஆசைப்படுகின்றனர்.
இதற்காக அவர்கள் தேர்வு செய்வது டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனை ஆகும். இந்தியாவில் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கக்கூடிய 5 கார்களை பற்றி இனி பார்க்க போகின்றோம். இவை ரூ.15 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. வாருங்கள் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஹூண்டாய் ஐ20 என்-லைன்: ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் கார்களை மார்க்கெட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருந்தே கார் நிறுவனம் சிந்திக்க ஆரம்பித்துவிட்டன. இந்த வரிசையில் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி மற்றும் மாருதி சுஸுகி பலேனோ ஆர்.எஸ் உள்ளிட்டவை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஆனால் தற்போதைக்கு, ஹூண்டாய் ஐ20 என்-லைன் என்ற ஒரேயொரு பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார் மட்டுமே விற்பனையில் உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 டர்போ ஸ்போர்ட்: எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் ஏற்கனவே டர்போ ஸ்போர்ட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இருப்பினும், கூடுதல் பவர் அவுட்புட்டை எதிர்பார்ப்பவர்களுக்காக எக்ஸ்யூவி300 டர்போஸ்போர்ட் காரை மஹிந்திரா அறிமுகப்படுத்தியது. இந்த காரில் 1.2 லிட்டர் எம் ஸ்டால்லயன் TGDi டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஹூண்டாய் வென்யூ என்-லைன்: வென்யூ காரின் ஸ்போர்டி வெர்சன் தான் வென்யூ என்-லைன் ஆகும். ஸ்போர்டி வெர்சன் என்பதை நியாயப்படுத்துவதற்காக சற்று ஆற்றல்மிக்க டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த ஹூண்டாய் காரில் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ்: கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஃப்ரான்க்ஸ் காரின் மூலமாக மீண்டும் தனது 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் கொண்டுவந்துள்ளது. ஃப்ரான்க்ஸ் மாடலுக்காக சற்று ட்யூன் செய்யப்பட்டுள்ள இந்த என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 99 பிஎச்பி மற்றும் 147 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

சிட்ரோன் சி3: பிரெஞ்சு ஸ்டைல் காரான சிட்ரோன் சி3-இல் அதிகப்பட்சமாக 110 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க் திறன் வரையில் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த சிட்ரோன் டர்போ காரின் மற்றொரு முக்கியமான சிறப்பம்சமாக காரின் எடை பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த காரின் விலை வெறும் 1055 கிலோ மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டர்போ கார்களை வாங்குவோர் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இதனால் தான் இவ்வாறான டர்போ பெட்ரோல் என்ஜின் கார்கள் சமீப காலங்களில் வெகுவாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இத்தனைக்கும் இந்த லிஸ்ட்டில் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் போன்ற ஆற்றல்மிக்க சொகுசு கார்களை சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









