"கேபில் ரொமான்ஸ் பண்ண அனுமதியில்லை"ன்னு போர்டு வச்ச டிரைவர்! வீடியோ எடுத்தவருக்கு நேர்ந்த "அவமானம்"
உபேர் டிரைவர் ஒருவர் தனது காரில் காதல் ஜோடிகள் "ரொமான்ஸ்" செய்ய அனுமதியில்லை என காருக்குள்ளேயே அறிவிப்பு ஸ்டிக்கரை ஓட்டியிருந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்துக் கேட்டவரை உபேர் டிரைவர் பங்கமாகக் கலாய்த்த சம்பவமும் நடந்துள்ளது.
இன்று கேப்களில் பயணிப்பது சாதாரணமாக மாறிவிட்டது. குறிப்பாகப் பெருநகரங்களில் கடுமையான டிராஃபிக் இருப்பதால் பலர் கேப்களில் பயணிப்பதையே அதிகம் விரும்புகின்றனர். கேபை செல்போனில் புக் செய்தால் போதும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே கேப் வரும். நீங்கள் செல்ல வேண்டிய இடம் வரை அந்த கேப்பை பயன்படுத்திக்கொள்ளலாம், டிராஃபிக், பஸ்களில் கூட்டம் இப்படியான தலைவலியில்லாமல் கேப்பை நாம் பயன்படுத்தமுடியும்.

கேப்களில் பயணிக்கும் போது பொதுவாக டிரைவர்கள் நம்மை சில விஷயங்களைப் பின்பற்றச் சொல்லுவார்கள். பயணத்தின் போது நாம் அதைப் பின்பற்றினால் தான் கேப்பில் பயணிக்க முடியும். உதாரணமாக சீட் பெல்ட் அணிவது. நீங்கள் கேப்பில் பயணிக்கும் போது டிரைவர் கட்டாயம் உங்களை சீட்பெல்ட் அணியச் சொல்லிக் கேட்டுக்கொள்வார். அது தான் உங்களுக்கும் பாதுகாப்பானது.
ஆனால் சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்று கேப் டிரைவர் ஒருவர் காரில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பலரைக் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த காரில் பயணித்த பயணி ஒருவர் இந்த ஸ்டிக்கரை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. பலர் இதை குபீர் சிரிப்புகளுடன் பகிர்ந்துவருகின்றனர்.
இந்த வீடியோ வைரலானது காரணம் இந்த ஸ்டிக்கர் மட்டுமல்ல இந்த வீடியோவில் வீடியோ எடுத்த பயணியும், கேப் டிரைவரும் பேசியது தான். அதற்கு முன்னர் இந்த காரிலிருந்து அறிவிப்பு ஸ்டிக்கர் குறித்துப் பார்த்து விடுவோம். இந்த காரில் அவர் "இந்த கேபில் ரொமான்ஸ் செய்ய அனுமதியில்லை" எனக் குறிப்பிட்டார். அதாவது காதலர்கள் இந்த காரில் ஏறினால் ரொமான்ஸ்களில் ஈடுபடக்கூடாது என எழுதியிருந்தார். இதைப் பார்க்கும் போதே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா?
இதே போல இந்த வீடியோவை எடுத்தவருக்கும் வித்தியாசமாக இருந்துள்ளது. இதை வீடியோ எடுத்தவர் இதை எடுத்துக்கொண்டிருக்கும் போதே நல்லவேளையாக நான் எனது கேர்ள் பிரண்ட் உடன் இந்த கேபில் வரவில்லை எனக் கூறினார். இதைக் கேட்டதும் கேப் டிரைவர் பின்னாடி வீடியோ எடுத்தவரைப் பார்த்து "உங்களுக்கு கேர்ள் பிரண்டெல்லாம் இருக்கிறதா?" எனக் கேட்டு பயணியை மரணபங்கமாக கலாய்த்தார்.
இந்த வீடியோ தி காய் வித் ஒயிட் பியர்டு என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.பலர் இந்த வீடியோவை பகிர்ந்து அவர்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேப்களில் காதல் ஜோடிகள் செல்லும் போது சில்மிஷங்களில் ஈடுபடுவது அதிகமாகிவிட்டது. ஆனால் அவர்களுக்கு கேப் என்பது ஒரு பொது இடம் எனத் தெரிவதில்லை. கேப்பில் காதல் ஜோடிகள் போக கேப் டிரைவரும் இருக்கிறார். இதனால் இவ்வாறு காதல் ஜோடிகள் சில்மிஷத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் மற்றும் அவர்களது பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications