பிளைட் டிக்கெட்டை விட ஜாஸ்தியா இருக்குதே! 52 கி.மீ க்கு ரூ4000 பில் போட்ட உபேருக்கு ஆப்பு வச்ச அரசு அதிகாரி!

பெங்களூர் ஏர்போர்ட்டில் இருந்து எலெக்ட்ரானிக் சிட்டி வரை செல்ல உபேர் ஆப் ரூபாய் 4000 பில் செய்ததால் அந்நிறுவனத்திற்குக் கர்நாடக மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரூபாய் நான்காயிரம் பில் செய்த ஸ்க்ரீன் ஷாட் ட்விட்டரில் ட்ரெண்டானதை எடுத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூர் விமான நிலையத்திலிருந்து எலெக்ட்ரானிக் சிட்டி வரை செல்ல ஒருவர் உபேர் கேப் ஒன்றை புக் செய்துள்ளார் அவருக்கு உபேர் நிறுவனம் ரூபாய் 4051 வரை கட்டணமாகக் காட்டியுள்ளது. இதை அவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார் இந்த ட்வீட் வைரலாக பரவியது பலர் இது குறித்து விவாதித்தனர்.

uber notice

அவர் பகிர்ந்திருந்த ஸ்கிரீன் ஷாட்டில் சுமார் 52 கிலோமீட்டர் பயணத்திற்கு உபேர் பிரீமியம் ரூபாய் 2584.59 மற்றும் உபர் எக்ஸெல் ரூபாய் 4051.15 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பகிர்ந்து அவர் பெங்களூர் விமான நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை செல்லும் உபேர் டாக்ஸிக்கான விலையைக் கிட்டத்தட்ட அவர் பயணம் செய்த விமான டிக்கெட்டின் விலைக்குச் சமமாக இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த ட்வீட் வைரலான நிலையில் கர்நாடக மாநில சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு துறை கமிஷனர் இந்த ராமப்பா உடனடியாக குறிப்பிட்ட ஆர்டிஓவிற்கு கேப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆர்டிஓ சார்பில் உபேர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

uber notice

இந்த நோட்டீஸில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட அதிகமான கட்டணம் வசூலித்ததற்கான காரணங்களைக் கூறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு உபேர் நிறுவனம் அளிக்கும் பதிலைப் பொறுத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கு பதிலளிக்க உபேர் நிறுவனத்திற்கு அவகாசம் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை அரசுகளுக்கு 2 கிலோமீட்டர் வரை சிறிய கேப்களுக்கு 75 ரூபாயும், பெரிய கேப்புகளுக்கு 4 கிலோமீட்டர் வரை ரூபாய் 150 கட்டணமாக வசூலிக்கலாம் என நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் உபேர் நிறுவனம் தற்போது இரண்டு கிலோ மீட்டருக்கு ரூபாய் 150 கட்டணமாக வசூலித்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கேப் அக்ரிகேட்டர் நிறுவனங்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே நீண்ட நாட்களாகச் சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் ஓலா,உபேர், ராப்பிடோ போன்ற நிறுவனங்களின் ஆட்டோ சேவைகளை அம்மாநில அரசு ரத்து செய்தது.

பின்னர் புதிய வரைமுறை வகுக்கப்பட்டுக் குறிப்பிட்ட குறைந்த விலையில் தான் ஆட்டோ சர்வீஸ்கள் அக்ரிகேடர்கள் இயக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கேப்களுக்கு அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் சர்ச்சை மீண்டும் இந்த சர்ச்சைக்குப் பிறகு மாநில அரசு கேப்களுக்கான கட்டணம் குறித்த முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கலாம்

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுவதும் கேப் சேவை நடத்துபவர்கள் பல நேரங்களில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட அதிகமாகக் கட்டணத்தை வசூலிக்கின்றனர். இந்த விவகாரத்தில் அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைத் தான் கட்டாயம் வசூலிக்க வேண்டும். இதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 2, 2023, 12:40 [IST]
English summary
Uber got notice from transport dept for charging 4000 bangalore airport to electronic city trip
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+