அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க

நேற்றைய தினம் செய்யப்பட்ட 2023 மத்திய பட்ஜெட் தாக்கலில் வாகனங்களுக்கான வரியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படும் வாகனங்களுக்கு வரி பலமடங்கு உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இந்திய தயாரிப்பு வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரி உயர்த்தப்பட்டது.

சிபியூ வாயிலாக (completely built up) இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் காஸ்ட் இன்சூரன்ஸ் மற்றும் ஃப்ரைட் மதிப்பு 40,000 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக இருக்கும் எனில் அவற்றிற்கு 60 சதவீதம் சுங்க வரியாக வசூல் செய்யப்பட்டு வந்தது. அதேவேளையில் இந்த வாகனங்கள் 3,000 சிசிக்கும் குறைவான பெட்ரோல் அல்லது 2,500 சிசி டீசல் வாகனமாக இருத்தல் வேண்டும்.

பட்ஜெட்

இவ்ளோ ஏத்திட்டாங்களா!!

இவற்றிற்கே இந்த வரி பொருந்தும். இந்த வரி விதிப்பையே தற்போது மத்திய அரசு உயர்த்தி இருக்கின்றது. பழைய வரியில் இருந்து பத்து சதவீதம் வரை தற்போது உயர்வு செய்யப்பட்டு உள்ளது. அதாவது, 60 சதவீத சுங்க வரியில் இருந்து 70 சதவீதமாக சுங்க வரி உயர்த்தப்பட்டு இருக்கின்றது. சிபியூ வாகனங்களுக்கு மட்டுமல்ல எஸ்கேடி வாகனங்களுக்கான சுங்க வரி விகிதமும் உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

செமி க்னாக்கட் டவுன் வாகனங்களுக்கான வரி

செமி க்னாக்கட் டவுன் (Semi Knocked Down) வாகனங்களுக்கு முன்னதாக 30 சதவீதம் சுங்க வரியாக வசூல் செய்யப்பட்டது. தற்போது இது 35 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கின்றது. ஆனால், சிகேடி (completely knocked down ) செய்யப்படும் வாகனங்களுக்கான வரியில் மத்திய அரசு எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை. அதே பத்து சதவீத சுங்க வரி விதிப்பே செய்யப்படுகின்றது.

பட்ஜெட்

இதைபத்தி எதுவுமே சொல்லல

இதேபோல், சிபியூ செய்யப்படும் வாகனங்கள் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக இருக்கும் எனில் இதற்கான வரி எவ்வளவாக இருக்கும் என்பது பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. அநேகமாக அதே 100 சதவீத சுங்க வரி விதிப்பே இப்போதும் கடைபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது இந்த வரி விதிப்பு முறையே மத்திய அரசு 40 ஆயிரம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சிபியூ வாகனங்களுக்கு விதித்து வருகின்றது.

சொகுசு வாகனங்களின் விலை பலமடங்கு அதிகரிக்கபோகுது

மத்திய அரசின் புதிய வரி விதிப்பு கொள்கையால் சொகுசு வாகனங்களின் பலமடங்கு உயரும் என அஞ்சப்படுகின்றது. இந்தியாவில் கடந்த சில வருடங்களாக சொகுசு கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையிலேயே சுங்க வரியை உயர்த்தி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் விளைவாக விரைவில் இறக்குமதி செய்து விற்பனைக்கு வழங்கப்படும் சொகுசு வாகனங்களின் விலை உயர்வதோடு, அதன் விற்பனையும் பாதிப்படையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பட்ஜெட்

அதேவேளையில், நாட்டிலேயே வைத்து உற்பத்தி செய்யப்படும் சொகுசு வாகனங்களின் விலையில் இந்த சுங்க வரி உயர்வு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிகின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதன் எஸ் கிளாஸ் மேபேக் காரை எஸ்கேடி வாயிலாகவும், ஜிஎல்பி மற்றும் இக்யூபி கார்களை சிபியூ வாயிலாகவும் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அரசின் வரி உயர்வு நடவடிக்கையால் இந்த கார்களின் விலை விரைவில் உயர இருக்கின்றது.

முன்னாடி தெரிஞ்சிருக்கும் போலிருக்கே

அதேவேளையில், இந்த சொகுசு கார் உற்பத்தியாளர் அதனுடைய 95 சதவீத தயாரிப்புகளின் உற்பத்தியை உள்ளூர் மயமாக்கி இருக்கின்றது. எனவே இதன் விற்பனையில் புதிய வரி உயர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. பிஎம்டபிள்யூ, ஆடி, ஹூண்டாய் மற்றும் கியா போன்ற நிறுவனங்களும் அதன் குறிப்பிட்ட சில சொகுசு கார் மாடல்களை சிபியூ, சிகேடி வாயிலாக நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

அவற்றின் விலையில் மாற்றம் ஏற்பட இருப்பது உறுதி. இந்த நிலை சொகுசு கார் விரும்பிகளைத் தற்போது பலமடங்கு வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. பெரும் பணக்காரர்கள் இனி எந்தவொரு புதிய அதிக விலைக் கொண்ட ஆடம்பர வாகனத்தை வேண்டும் என்றால் அதற்கு பெரும் தொகையை அரசு வரியாக செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாகி உள்ளது. இது ஆடம்பர கார் விரும்பிகளுடன் சேர்த்து சொகுசு வாகன தயாரிப்பாளர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Union govt made check for luxury car buyers
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X