ரூ1 லட்சத்துக்கு கூட கார் விலை வரலாம்! நிதின்கட்கரி சொன்ன ஐடியாவா கரெக்டா ஃபாலோ பண்ணா போதும்!

இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறியுள்ளது. அமெரிக்கா, சீனாவிற்குப் பிறகு இந்தியாவில் தான் அதிகமான ஆட்டோமொபைல் விற்பனை நடக்கிறது முன்னதாக மூன்றாவது இடத்திலிருந்த ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3வது இடத்தை எட்டி பிடித்துள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரத்திற்கு இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது.

தற்போது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல புதிய தொழினுட்பங்களைப் பயன்படுத்தக் குறைவான விலையில் தரமான தயாரிப்புகளை வழங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்தியாவில் பல புதிய புதிய நிறுவனங்கள் தங்கள் தடத்தைப் பதித்து வருகின்றனர். ஏகப்பட்ட வகையான வாகனங்கள் தயாராகி விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் அதிகமான மக்கள் தொகை இருக்கின்றனர்.

ரூ1 லட்சத்துக்கு கூட கார் விலை வரலாம்! நிதின்கட்கரி சொன்ன ஐடியாவா கரெக்டா ஃபாலோ பண்ணா போதும்!

மக்கள் தொகையில் பலர் சொந்த வாகனம் இல்லாமல் இருப்பவர்கள். அவர்கள் எல்லாம் வாகனம் வாங்கினால் இந்தியா தான் உலகிலேயே நம்பர் ஒன் நிறுவனமாக இருக்கும். இருந்தாலும் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் சொந்தமாக வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். அதற்குப் பதிலாக பொது போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிதின்கட்கரி தற்போது இந்தியாவில் விற்பனையாகும் கார்களுக்கான விலையை வெகுவாக குறைக்க புதிய ஐடியா ஒன்றைக் கொடுத்துள்ளார். சமீபத்தில் மெட்டல் ரீசைக்கிளின் குறித்த ஒரு மாநாடு நடந்தது. 3 நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டு மெட்டல் ரீசைக்கிளின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.

அப்பொழுது அவர் இந்தியாவில் மத்திய அரசு ஆட்டோமொபைல் துறையை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளதாகவும் தற்போது உள்ள ரூ7.2 லட்சம் கோடி மதிப்பிலான சந்தையை ரூ15 லட்சம் கோடியாக மாற்றப்போவதாகவும், இதன் மூலம் 5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

தற்போது இந்தியாவில் காப்பர், அலுமினியம், மற்றும் ஸ்டீல்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை ஆட்டோமொபைல் துறையில் மெட்டல் ரீசைக்கிளிங் செய்வது மூலம் சரி செய்ய முடியும் மேலும் இதனால் வாகனங்களின் விலையும் வெகுவாக குறையும். எனக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் இப்படியாக மெட்டல் ரீசைக்கிளிங்கிற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ள ஸ்கிராப்பிங் சென்டர்கள் பெரும் அளவில் உதவிச் செய்யும். அதிலிருந்து கிடைக்கும் பாகங்களை மீண்டும் பயன்படுத்தினால் அதன் மூலம் தற்போது விற்பனையாகும் கார்களின் விலையை 30 சதவீதம் வரை குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு பல இடங்களில் ஸ்கிராப்பிங் மையங்களை உருவாக்கத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஸ்கிராப்பிங் மையங்கள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் வாகன ஓட்டிகள் பழைய வாகனங்களை வைத்திருந்தால் அதை ஸ்கிராப் செய்து விட்டு புதிய வாகனங்களை வாங்கும்பட்சத்தில் புதிய வாகனத்திற்குத் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்ததாதற்கான பணமும் வழங்கப்படும்.

அடுத்த நிதியாண்டில் இந்தியா முழுவதும் மொத்தம் 9 லட்சம் வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, February 6, 2023, 16:00 [IST]
English summary
Union minister Nitin Gadkari best idea is to make cars very cheap know the details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+