துணிவு, வாரிசைவிட இந்த மாசம் இந்த ரிலீஸ்க்கு தான் எதிர்பார்ப்பு எகிறி போய்டுச்சு!

இந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏகப்பட்ட புதிய கார்கள் அறிமுகமாகவுள்ளன. எலெக்ட்ரிக் கார் முதல் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் கார்கள் வரை ஏகப்பட்ட கார்கள் வெளியாகவுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

2023ம் ஆண்டு துவங்கிவிட்டது, ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தங்கள் வாகனங்களை வரிசையாக அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றனர். மார்கெட்டில் பல்வேறு செக்மெண்டில் பல கார்கள் இந்தாண்டு வெளியாகவுள்ளன. அதிலும் குறிப்பாக இந்த ஜனவரி மாதமே ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு ஜாக்பாட் தான். ஆட்டோ எக்ஸ்போ நடக்கிறது. இதனால் ஏராளமான புதிய கார்கள் அறிமுகமாகவுள்ளன. அதன்படி இந்த ஜனவரியில் வெளியாகவுள்ள கார்களை பற்றிக் காணலாம் வாருங்கள்.

துணிவு, வாரிசைவிட இந்த மாசம் இந்த ரிலீஸ்க்கு தான் எதிர்பார்ப்பு எகிறி போய்டுச்சு!

மாருதி ஜிம்னி

மக்கள் பெரிதும் இந்த காரை எதிர்பார்த்து வருகின்றனர். மாருதி நிறுவனம் இந்த ஜிம்னி காரை 5 டோர் உடன் அதிக வீல் பேஸ் கொண்ட ஆஃப்ரோடு லைஃப் ஸ்டைல் காராக விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கார் ஏற்கனவே 3 டோர் வெர்ஷன் காராக இந்தியாவில் தயாராகி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. தற்போது அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு 5 டோர் காராக இந்தியாவிற்கும் வரவுள்ளது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் விற்பனைக்கு வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி

மஹிந்திரா நிறுவனம் கடந்தாண்டே தனது எக்ஸ்யூவி 400 காரை பொது பார்வைக்கு அறிமுகப்படுத்தி விட்டது. ஆனால் இந்த காரின் விலை குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.இந்த கார் இந்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பேட்டரியை பொருத்தவரை 39.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பொருத்த்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 456 கி.மீ மைலேஜை வாரி வழங்குகிறது. இந்த கார் மார்கெட்டில் உள்ள டாடா நெக்ஸான் இவி, எம்ஜி ஸிஎஸ் இவி ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது.

சிட்ரோன் சி3 இவி

சிட்ரோன் நிறுவனத்தின் சி3 கார் மிகவும் பிரபலமான காராக இருக்கிறது. இந்த சி3 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் கார் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 50 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 350 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 136 பஎஸ் பவரையும் 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதே காரில் குறைவான பேட்டரி பேக் வெர்ஷனும் இருக்கும் எனவும் இது 300 கி.மீ ரேஞ்சை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மார்கெட்டில் உள்ள டியாகோ இவி, டிகோர் இவி மற்றும் விரைவில் வெளியாகவுள்ள பஞ்ச்இவி கார் ஆகியவற்றிற்குப் போட்டியாகக் களம் இறங்குகிறது.

பிஎம்டபிள்யூ 7 சிரீஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஐ7

பிஎம்டபிள்யூ நிறுவனம் 7 சிரீஸ் செடான் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் அதிகமான சொகுசு மற்றும் தொழிற்நுட்பம் அம்சங்கள் நிறைந்தது. இந்த கார் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் எஸ் கிளாஸ், ஆடி நிறுவனத்தின் ஏ8எல் ஆகிய காருக்கு போட்டியாக இந்த காரை களம் இறக்குகிறது. இந்த காரில் 31.3 இன்ச் 8கே சினிமா ஸ்கிரின் காரின் ரூஃப்பில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. பெர்ஃபமென்ஸ் தரும் 4.4லிட்டர் வி 8 எம்760ஐ இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 543 பிஎச் பிவரை வெளிப்படுத்தும். அடுத்தாக 3.0 லிட்டர் இன்லைன் 6 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது299 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

இதே காரின் எலெக்டிரிக் வெர்ஷனாக பிஎம்டபிள்யூ ஐ7 காரும் இந்த மாதமே வெளியாகிறது. இந்த காரில் 101.7 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 590-625 கிலோ மீட்டர் தூரத்தை முழு சார்ஜில் பயணிக்கும் திறன் கொண்டது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, January 2, 2023, 19:48 [IST]
English summary
Upcoming cars launch in Jan 2023 with more expectations
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+