பெட்ரோல் செலவே கிடையாது! இந்தியாவிற்கு அடுத்து வரப்போற 10 எலெக்ட்ரிக் கார் இது தான்!
இந்தியாவில் மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் எலெக்ட்ரிக் காரர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதன்படி இந்தியாவில் அடுத்து வெளியாக உள்ள 10 புதிய எலக்ட்ரிக் காரர்கள் குறித்த விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் எல்லாம் தற்போது எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. டாடா மஹிந்திரா உள்ளிட்ட இந்தியாவை மையமாக கொண்டு செயல்படும் நிறுவனங்கள் கூட எலெக்ட்ரிக் கார்களை தான் விரும்பி தயாரித்து வருகின்றனர். எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்கள் தான் மிகப்பெரிய மார்க்கெட்டை பிடிக்க போகிறது என கணிக்கப்படுகிறது. இதன்படி அடுத்த வெளியாக உள்ள 10 எலெக்ட்ரிக் கார்களை காணலாம்.

டாடா நிறுவனம்: டாடா நிறுவனம் இந்தியாவில் அடுத்ததாக பஞ்ச், கர்வ், ஹாரியர் ஆகிய இவி கார்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. இதில் ஒவ்வொரு காரும் ஒருமுறை சார்ஜ் போட்டால் 500 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல் காராக பஞ்ச் இவி கார் தான் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து கர்வ் இவி மற்றும் ஹாரியர் இவி ஆகிய கார்கள் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பஞ்ச் இவி கார் டாடா நெக்ஸான் இவி காருக்கு கீழே பொசிஷன் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் சற்று பிரீமியம் அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

கியா எலக்ட்ரிக்: கியா நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் ஆர்வி என்ற காரை இந்தியாவிற்காக தயாரித்து வருகிறது இந்த கார் 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா கார்னிவெல் காரின் எலெக்ட்ரிக் காரான இவி9 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் 2025 ஆம் ஆண்டு தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் சிங்கிள் சார்ஜில் 541 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என சான்று வழங்கப்பட்டுள்ளது. அல்ட்ரா ஃபாஸ்ட் 800 வேர்ல்ட் சார்ஜிங் அம்சம் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதை 15 நிமிடம் சார்ஜ் போட்டால் போதும் 239 கிலோமீட்டர் பயணிக்க முடியும்.

மாருதி மற்றும் டொயோட்டா: ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி நிறுவனம் தனது இவிஎக்ஸ் என்ற முதல் எலக்ட்ரிக் காரின் கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியது. அதன் மேம்பட்ட வெர்ஷனை கடந்த மாதம் ஜப்பானில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் இடபிள்யூ எக்ஸ் என்ற பெயரில் அந்நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. இதன் புரொடக்ஷன் மாடல் 2024 ஆம் ஆண்டு தயாராகி 2025 ஆம் ஆண்டு மக்களுக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் 5 சீட்டர் கொண்ட காராக விற்பனைக்கு வர உள்ளது. இந்த காரின் பேட்டரியை பொருத்தவரை ஒரு தடவை சார்ஜ் போட்டால் 550 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் டொயோட்டாவின் 27பிஎல் பிளாட்பார்மில் உருவாக்கப்பட உள்ளது. இதன் டொயோட்டா ரீபேட்ஜ் வெர்ஷனும்வெளியான அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

மஹிந்திரா நிறுவனம்: மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி.இ8 என்ற எலெக்ட்ரிக் காரை 2024 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிஇ.05 என்ற எலக்ட்ரிக் காரை 2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது. தொடர்ந்து பல எலெக்ட்ரிக் கார்கள் இந்நிறுவனங்களால் வெளியிடப்படவுள்ளன.
இதில் எக்ஸ்யூவி.இ8 கார் இந்தியாவில் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவதை நம்மால் காண முடிகிறது. இது எக்ஸ்யூவி 700 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் பிஇ ரேஞ்ச் எலெக்ட்ரிக் கார்களை மகேந்திரா எஸ்யூவி எலக்ட்ரிக் கார்களாக அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

ஹோண்டா இவி: ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் 2030-ம் ஆண்டிற்குள் 5 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் காரணமாகவே எலவேட் காருக்கு ஹைபிரிட் வெர்ஷன் இதுவரை வெளியாகவில்லை. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வெர்ஷன் 2026-ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 500 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மார்க்கெட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி. மற்றும் மாருதி மற்றும் அதன் டொயோட்டா வெர்ஷன், டாடா கர்வ் இவி ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிகப்பெரிய அளவில் மவுசு இருக்கிறது. மக்கள் பலர் எலெக்ட்ரிக் காரர்களை விரும்பி வாங்கி வரும் நிலையில் பல முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் காரில் அதிக கவனம் செலுத்தி வருவது நிச்சயம் மிகப்பெரிய எதிர்காலத்தை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications









