குடும்பத்தோட போற மாதிரி 7 சீட்டர் கார்களை களமிறக்கும் கியா... உல்லாச கப்பல்ல மெதக்கற மாதிரி அனுபவம் கிடைக்கும்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). இந்த நிறுவனம் இந்திய சந்தையில் வரும் 2024ம் ஆண்டு 2 புதிய 7 சீட்டர் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அந்த 2 கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா இவி9 (Kia EV9): இது 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். வரும் 2024ம் ஆண்டின் இறுதியில், கியா இவி9 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

Kia EV9

எனவே முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டே விற்பனை செய்யப்படும். இதன் காரணமாக கியா இவி9 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை மிகவும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் ஏற்கனவே கியா இவி6 (Kia EV6) என்ற எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது.

இந்த வரிசையில் இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலில் கியா இவி9 எலெக்ட்ரிக் காரும் இணையவுள்ளது. அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) உள்பட பல்வேறு அதிநவீன வசதிகளை எல்லாம் இந்த எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 Kia Carnival

மறுபக்கம் இதன் டிரைவிங் ரேஞ்ச் சுமார் 540 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிங்கிள் மோட்டார் மற்றும் ட்யூயல் மோட்டார் செட்-அப்களில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 7 சீட்டர் ஆப்ஷன் மட்டுமல்லாது, 6 சீட்டர் ஆப்ஷனிலும் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

புதிய தலைமுறை கியா கார்னிவல் (New-Gen Kia Carnival): இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த கியா கார்னிவல் கார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. இருப்பினும் இதன் புதிய தலைமுறை மாடலை வரும் 2024ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு கியா நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்த புதிய தலைமுறை மாடலில், முந்தைய மாடலை காட்டிலும், உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் 200 பிஎஸ் பவர் மற்றும் 440 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் (Turbo Diesel Engine) ஆப்ஷன், தக்க வைக்கப்படலாம்.

இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 7 சீட்டர் ஆப்ஷன் மட்டுமல்லாது, 9 சீட்டர் ஆப்ஷனிலும் புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் கியா நிறுவனத்தால் பூர்த்தி செய்ய முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா இவி9 மற்றும் புதிய தலைமுறை கியா கார்னிவல் ஆகிய 2 கார்களுமே சற்று விலை உயர்ந்ததாகவே இருக்கும். ஆனால் அதற்கேற்ப சொகுசான பயணம் கிடைக்கும் என்பது உறுதி. எனவே விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை, சொகுசான பயணத்தை வழங்க கூடிய 7 சீட்டர் கார்கள் வேண்டும் என எதிர்பார்க்க கூடிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு இவை மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 30, 2023, 23:57 [IST]
English summary
Upcoming kia 7 seater cars ev9 new gen carnival
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+