தம்பி கேட்ட மூட்றா! இந்த 2 கார்களுக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்! டொயோட்டா இன்னோவாலாம் என்ன ஆகப்போகுதோ!

கியா (Kia) நிறுவனம் வரும் 2024ம் ஆண்டு இந்திய சந்தையில் 2 ஐசி இன்ஜின் (IC Engine) கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள அந்த 2 கார்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் (Kia Sonet Facelift): இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்று கியா சொனெட். இதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல் வரும் 2024ம் ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Kia Sonet

அதற்கு முன்னதாக 2024 கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளன. இந்த படங்களை எல்லாம் வைத்து பார்க்கையில், உட்புறம் மற்றும் வெளிப்புறம் என 2 அம்சங்களிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசதிகளை பொறுத்தவரையில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரியர் ஏசி வெண்ட்கள், முன் பகுதியில் வெண்டிலேட்டட் இருக்கைகள், சன்ரூஃப் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்பட பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் உள்ளிட்ட வசதிகள் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படலாம். அதே நேரத்தில் சற்று விலை உயர்ந்த டாப் வேரியண்ட்களில் அடாஸ் (ADAS) பாதுகாப்பு வசதி வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இன்ஜினில் எந்த மாற்றங்களும் செய்யப்பட வாய்ப்புகள் இல்லை. தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள், புதிய மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படவுள்ளது.

2024 Kia Carnival

புதிய கியா கார்னிவல் (New Kia Carnival): 2024 கியா கார்னிவல் காரின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன. டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கூட இது தொடர்பான செய்தியை வாசகர்களுக்கு வழங்கியிருந்தது. சர்வதேச சந்தைகளில் பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டாலும் கூட, இந்திய சந்தையில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) ஆகிய கார்களுடன், 2024 கியா கார்னிவல் கார் போட்டியிடும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 2024 சொனெட் மற்றும் 2024 கார்னிவல் ஆகிய கார்களின் வருகைக்கு பின்னர், கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. ஏனெனில் இவை இரண்டும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தியுள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 31, 2023, 23:58 [IST]
English summary
Upcoming kia cars sonet facelift 2024 carnival all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+