டொயோட்டா எம்பிவி காரின் விலை இவ்வளவு கம்மியா? குடும்பத்துக்கு ஒன்னு வாங்கி போடலாம் போலயே!
டொயோட்டா நிறுவனம் ரூமியான் என்ற எம்பிவி ரக காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரின் ரீபேஜ்டு வெர்ஷன் ஆகும். இந்த கார் விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில் இது இதன் விலை குறித்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதை விரிவாக காணலாம் வாருங்கள்.
டொயோட்டா நிறுவனம் தனது ரூமியான் காரை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இந்த கார் இந்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வாடிக்கையாளர் புக்கிங்கும் டெலிவரியும் விரைவில் துவங்க உள்ளது. இந்த ரூமியான் காரை மாருதி நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையாகும். எம்பிவி காரான எர்டிகா காரின் ரீபேட்ஜ் வெர்ஷனாக வெளியிடப் போகிறது.

டொயோட்டா நிறுவனத்தின் இந்த ரூமியான் கார் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் விற்பனையாகி வருகிறது. தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த காரும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள காரை போலவே இருக்கிறது. இந்த 7 சீட்டர் எம்பிவி கார் எர்டிகா காரே அதே நேரம் இதற்கு போட்டியாக களத்தில் உள்ளது. மாருதி எர்டிகா காரை விட சற்று ப்ரீமியமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த காரின் மத்தி வரிசையில் கேப்டன் சீட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாருதி நிறுவனத்திற்கும் டொயோட்டா நிறுவனத்திற்கும் சர்வதேச அளவில் கார்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் ஒன்று உள்ளது. இதன்படி இந்த இரு நிறுவனங்களும் தங்கள் கார்களையும் தொழில்நுட்பத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர். அதன் அடிப்படையில் தான் இந்த எர்டிகா ரூமியான் காரும் பகிர்ந்து கொள்ளப்படுகிறன. இதே போல டொயொட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை ரீபேட்ஜ் செய்து மாருதி நிறுவனம் இன்போ என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

டொயோட்டா ரூமியான் காரை ஒப்பிடும்போது மாருதி எர்டிகா காரில் இருந்து சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அதன் பம்பர் பகுதி மாற்றப்பட்டுள்ளது. புதிய டிசைன் கொண்ட இரண்டு டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன . பாக் லேம்ப்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. காரில் உள்ள அம்சங்கள் பெரும்பாலும் எர்டிகா காரில் உள்ள அதே அம்சங்கள் தான் இந்த காரிலும் உள்ளன.
டொயோட்டா காரில் 7 இன்ச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆப்பிள் கார் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், நான்கு ஏர் பேக்குகள் இபிடி, இஎஸ்பி உடன் கூடிய ஏபிஎஸ், ஸ்டியரிங் மவுண்டட் கண்ட்ரோல் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், சவுண்ட் சிஸ்டம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட் ரெஸ்ட்டுகள் ஆகியன இந்த காரில் உள்ளன.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் மைல்டு ஹைபிரிட் கே15 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 103 எச்பி பவரையும் 137 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது மொத்தம் ஐந்து ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் விற்பனைக்கு வருகிறது.
இந்த கார் குறித்த தற்போது எதிர்பார்க்கப்படும் விலை விபரம் வெளியாகி உள்ளது. இந்த கார் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும்போது ரூபாய் 8. 99 லட்சம் முதல் ரூபாய் 13.30 லட்சம் என்ற விலைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை மிகவும் குறைவான விலையாக இருப்பதால் மக்கள் மத்தியில் இந்த காருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரை பார்க்கும்போது 8.64 லட்சம் முதல் 13.08 லட்சம் என்ற ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த இரு கார்களும் கிட்டத்தட்ட ஒரே விலையில் தான் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இருந்தாலும் டிசைன் அளவில் மாருதி எர்டிகா கார் சிறப்பாக இருப்பதால் அந்த காரின் விற்பனையை ரூமியான் கார் தட்டிச் செல்லுமா என்பது சந்தேகம்தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா மற்றும் மாருதி நிறுவனங்களிடையே சர்வதேச அளவில் தங்கள் கார்களை பகிர்ந்து கொள்ளும் அழகு ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது அதன்படி இரு நிறுவனங்களும் கால்களை பகிர்ந்து கொள்கின்றனர் இந்த கார் பகிர்வு ஒப்பந்தத்தில் டொயோட்டாவை விட மாருதி நிறுவனம் தான் அதிக பலனை பெற்றுள்ளது மாருதி நிறுவனம் இந்த ஒப்பந்த மூலம் சாங் ஹைபிரிட் இன்ஜினை தங்கள் காருக்கு பெற்று அதன் விற்பனையை அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications









