மதம் பிடிச்ச யானை மாதிரி வரப்போகுது... டாடாவிற்கு செக் வைக்க களமிறங்கும் மஹிந்திரா கார்கள்!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கான (Electric Cars) வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே மஹிந்திரா (Mahindra) நிறுவனம் வரும் 2024ம் ஆண்டின் முதல் பாதியில், 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அப்டேட் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Updated Mahindra XUV400): இந்திய சந்தையில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி400. இதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் தயாராகி வருகிறது.

Mahindra XUV400

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் இந்த புதிய மாடலில், தற்போதைய மாடலில் வழங்கப்படுவதை காட்டிலும் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதிகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகவும் தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 34.5 kWh மற்றும் 39.4 kWh பேட்டரிகள் ஆகும்.

Mahindra XUV300

இதில் 34.5 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச், 375 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் 39.4 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 456 கிலோ மீட்டர்கள் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. வசதிகள், டிசைன் ஆகிய அம்சங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டாலும் இந்த பேட்டரி ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார், 15.99-19.19 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் புதிய வசதிகள் மற்றும் டிசைன் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலின் விலை இதைக்காட்டிலும் சற்று அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 இவி (Mahindra XUV300 EV): இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது. இதன் டிரைவிங் ரேஞ்ச் 350 கிலோ மீட்டர் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 இவி எலெக்ட்ரிக் கார் ஆகியவை, இந்திய சந்தையில் தற்போது முன்னணியில் இருந்து டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 24, 2023, 23:39 [IST]
English summary
Upcoming mahindra electric cars updated xuv400 xuv300 ev
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+