2030 வரையில் அடுத்து வர போகும் மாருதி கார்கள் ஒவ்வொன்றும் பயங்கரமா இருக்கு! எலக்ட்ரிக் கார் பற்றிய பேச்சே இல்ல

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம். ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கில் கார்களை அசால்ட்டாக விற்பனை செய்யும் இந்த நிறுவனம் அடுத்ததாக சந்தையில் அறிமுகப்படுத்த பல்வேறு புதிய கார்களை லைன்-அப்பில் வைத்துள்ளது. 2031ஆம் ஆண்டு வரையில் ஒன்றன்பின் ஒன்றாக விற்பனைக்குவர உள்ள புதிய மாருதி சுஸுகி கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

கிராண்ட் விட்டாரா 3-வரிசை இருக்கை வெர்சன்: மாருதி சுஸுகி நிறுவனம் கிராண்ட் விட்டாரா காரை கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தியது. மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை போன்று நன்கு நீளமானதாக கிராண்ட் விட்டாரா வடிவமைக்கப்பட்டாலும், இருக்கைகளின் எண்ணிக்கை குறைவு தான்.

upcoming maruti suzuki cars

நன்கு சவுகரியமாக அமர வேண்டுமெனில், கிராண்ட் விட்டாராவில் 5 பேர் மட்டுமே பயணிக்க முடியும். இதனை கருத்தில் கொண்டு, 3 வரிசைகளில் இருக்கைகளை கொண்ட கிராண்ட் விட்டாரா காரை உருவாக்கும் திட்டத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த காரின் அறிமுகம் எப்போது இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியவில்லை. இந்த புதிய மாருதி கார் ஹூண்டாய் அல்கஸார், மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களுக்கு விற்பனையில் போட்டியாக இருக்கும்.

இரு ஹேட்ச்பேக் கார்கள்: என்னத்தான் புதுசு, புதுசா எஸ்யூவி ரக கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து வெளிவந்தாலும், இந்த நிறுவனத்தின் அடையாளமே ஆல்டோ, ஸ்விஃப்ட் போன்ற ஹேட்ச்பேக் ரக கார்கள் தான். இதன் காரணமாகவே, ரூ.10 இலட்சத்திற்குள் இரு ஹேட்ச்பேக் கார்களை அடுத்த 10 வருடங்களுக்கு உள்ள விற்பனைக்கு அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது.

upcoming maruti suzuki cars

புதிய எம்பிவி கார்: மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து தற்சமயம் 3 விதமான எம்பிவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எர்டிகா, இன்விக்டோ மற்றும் எக்ஸ்.எல்6 என்பன அவை ஆகும். இதில் இன்விக்டோ மற்றும் எக்ஸ்.எல்6 எம்பிவி கார்கள் விலைமிக்கவை ஆக விளங்குகின்றன.

இருப்பினும், இவை இரண்டிற்கு மத்தியில் ஒரு புதியதொரு எம்பிவி ரக காரை மாருதி சுஸுகி நிறுவனம் கொண்டுவர உள்ளதாம். அதாவது, விலையில் இன்விக்டோவை விட அதிகமாகவும், எக்ஸ்.எல்6 காரை விட குறைவாகவும் இது இருக்கும் என கூறப்படுகிறது. விற்பனையில் கியா கேரன்ஸுக்கு இந்த எம்பிவி கார் விற்பனையில் போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

upcoming maruti suzuki cars

புதிய மைக்ரோ எஸ்யூவி: சிறிய அளவிலான கார்களை வாங்குவோரின் இரசனையும் ஹேட்ச்பேக்குகளில் இருந்து எஸ்யூவிக்கு மாறி வருகிறது. இந்தியாவில் இத்தகைய கார் மார்க்கெட்டை 2021இல் டாடாவின் பஞ்ச் துவங்கி வைத்தது. அதன்பின் இந்த 2023ஆம் வருடத்தில் ஹூண்டாய் தனது எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது.

ஆனால், இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகியில் இருந்து இந்த கார் பிரிவில் எந்த மாடலும் இல்லை. மாருதி சுஸுகி இக்னிஸ் ஹேட்ச்பேக் கார் ஓரளவிற்கு பார்ப்பதற்கு எஸ்யூவி போல் உள்ளது, அவ்வளவுதான். ஆனால், இக்னிஸ் கார்களின் விற்பனையும் பெரியதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. இதனால், விரைவில் மைக்ரோ எஸ்யூவி கார் ஒன்றை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்ப்படுகிறது.

upcoming maruti suzuki cars

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2031ஆம் ஆண்டு வரையில் மாருதி சுஸுகி அடுத்ததாக அறிமுகப்படுத்தவுள்ள கார்களை பார்த்தோம். நீங்கள் ஒன்றை கவனீத்தீர்களா? இந்த வரிசையில் ஒரு எலக்ட்ரிக் கார் கூட இல்லை. ஏனெனில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் வருங்கால எலக்ட்ரிக் கார்கள் பற்றிய விபரங்கள் எதுவும் பெரியதாக இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, November 25, 2023, 15:04 [IST]
English summary
Upcoming maruti suzuki cars in india check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X