Upcoming Midsize SUV கார்கள் மீதுதான் எல்லாரோட கண்ணும் இருக்குது! ஒன்னொன்னும் தரமா இருக்குதே!

இந்தியாவில் மிட் சைஸ் எஸ்யூவி கார்களுக்கு மிகப்பெரிய மார்கெட் இருக்கிறது. இன்று கார் வாங்கும் மக்கள் பலர் எஸ்யூவி ரக கார்களை தான் அதிகம் தேர்வு செய்கின்றனர்.
அதுவும் குறிப்பாக மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கு தான் பயங்கரமான போட்டி இருக்கிறது.

இந்நிலையில் இந்தாண்டு விற்பனைக்கு வரவுள்ள புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை பற்றிக் காணலாம். டாடா, ஹோண்டா, கியா மற்றும் சிட்ரோன் ஆகிய நிறுவனங்கள் தங்கள் கார்களை வெளியிடத் தயாராகி வருகின்றனர். முழு விபரங்களை ஒவ்வொன்றாகக் காணலாம் வாருங்கள்.

Upcoming Midsize SUV Cars

சிட்ரோன் சி3 ஏர்கிராஸ்: சிட்ரோன் நிறுவனம் தனது சி3 ஏர்கிராஸ் காரை இந்த மாத இறுதியில் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த கார் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன் கொண்டது.

இந்த காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்களுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் சி3 காம்பேக்ட் ஹேட்ச்பேக் காரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கும். இந்த காரும் சி3 கார் தயாராகும் அதே சிஎம்பி பிளாட்ஃபார்மில் தான் தயாராகிறது.

Upcoming Midsize SUV Cars 2023

ஹோண்டா மிட் சைஸ் எஸ்யூவி: ஹோண்டா நிறுவனம் தனது புதிய மிட் சைஸ் எஸ்யூவி காரை இன்னும் ஒரு சில மாதங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது. இது ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் மார்கெட்டில் உள்ள ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம். ஹோண்டா சிட்டி 5ம் தலைமுறை கார் தயாராகும் அதே பிளாட்ஃபார்மில் தான் இந்த காராகும் தயாராகவுள்ளது. இந்த கார் பார்க்க ஹேண்டாவின் சிஆர்-வி, டபிள்யூ ஆர்வி கார்களை போல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Upcoming Midsize SUV Cars 2023

இந்த காரின் உட்புற கட்டமைப்பு சிட்டி காரை விட மேம்படுத்தப்பட்ட முறையில் இருக்கும். இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே முதலில் இருக்கும் என்றும், பின்னர் 1.5 லிட்டர் ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின் மற்றம் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகியவை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்: இந்தாண்டு மத்தியில் கியா நிறுவனம் தனது செல்டோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. செல்டோஸ் தற்போது இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் 2வது மிட்-சைஸ் எஸ்யூவி காராக இருக்கிறது.

இதனால் இந்த காரின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த காருக்கு கடும் போட்டியைச் சமீபத்தில் அறிமுகமான மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா கார் கொடுத்து வருகிறது. இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படும். இது 160 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்: டாடா நிறுவனம் தனது சஃபாரி மற்றும் ஹாரியர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் வெளிப்புற தோற்றம் பார்க்க ஹாரியர் இவி போலவே வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஆனால் உட்புறத்தில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. சமீபத்தில் தான் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த கார்களின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிட்-சைஸ் செடான் கார்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகமாகி இருப்பதால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசை கட்டி தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த செக்மெண்டில் இருக்கும் போட்டி பல புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதில் காண முடிகிறது. நீங்கள் இந்த செக்மெண்டில் கார் வாங்கினால் எந்த காரை வாங்குவீர்கள்?

More from DriveSpark

Article Published On: Tuesday, April 18, 2023, 14:20 [IST]
English summary
Upcoming midsize suv cars from tata honda kia and citroan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X