மாருதி எர்டிகா மார்க்கெட்டிற்கு குறி... குடும்பத்தோட போற மாதிரி நெறையா கார்கள் வருது... எல்லாமே நல்லா இருக்கே!
இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது எஸ்யூவி (SUV) ரக கார்களைதான் அதிகமாக விரும்புகின்றனர். இருப்பினும் எம்பிவி (MPV) ரக கார்களுக்கான வரவேற்பு குறைந்தபாடில்லை. அதிகம் பேர் ஒன்றாக பயணம் செய்ய முடியும் என்பதால், எம்பிவி ரக கார்களையும் வாடிக்கையாளர்கள் அதிகமாக தேர்வு செய்து கொண்டுதான் உள்ளனர்.
நீங்கள் புதிதாக ஒரு எம்பிவி ரக காரை வாங்க திட்டமிட்டு கொண்டிருந்தால், உங்களுக்குதான் இந்த செய்தி. இந்தியாவில் புதிதாக விற்பனைக்கு வரவுள்ள எம்பிவி ரக கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

புதிய தலைமுறை கியா கார்னிவல் (New Generation Kia Carnival): கியா நிறுவனம் புதிய தலைமுறை கார்னிவல் காரை இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு (2024) விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஆனால் இது சாதாரண எம்பிவி கார் கிடையாது. இது சொகுசு எம்பிவி ரகத்தை சேர்ந்தது.
அதற்கு ஏற்ற வகையில் பல்வேறு அதிநவீன வசதிகளை இந்த கார் கொண்டிருக்கும். அத்துடன் விலையும் அதிகமாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) போன்ற கார்களுடன், புதிய தலைமுறை கியா கார்னிவல் போட்டியிடும்.

கியா எலெக்ட்ரிக் எம்பிவி (Kia Electric MPV): கியா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது இவி6 (Kia EV6) என்ற எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது. வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது.
வரும் 2025ம் ஆண்டிற்குள் இந்தியாவில் மேலும் 2 எலெக்ட்ரிக் கார்களை கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில் ஒன்று காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். மற்றொன்று எலெக்ட்ரிக் எம்பிவி ரகத்தை சேர்ந்தது. எனவே மக்களே குடும்பத்துடன் எலெக்ட்ரிக் காரில் பயணம் செய்ய தயாராகி கொள்ளுங்கள்.

நிஸான் எம்பிவி (Nissan MPV): நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் எம்பிவி ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இது ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காரின் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற கார்களுக்கு சிறந்த மாற்றாக இது இருக்கலாம்.
நிஸான் நிறுவனத்தின் இந்த புதிய எம்பிவி காரில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த புதிய எம்பிவி காரை ஓரளவிற்கு குறைவான விலையில் நாம் எதிர்பார்க்க முடியும்.
டாடா எம்பிவி (Tata MPV): எம்பிவி செக்மெண்ட்டில் இருந்து விலகியே உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நமக்காக வித்தியாசமான ஒரு காரை தயார் செய்து வருகிறது. ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் எம்பிவி செக்மெண்ட்டில் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) கார்களுக்கு இடைப்பட்ட ரகத்தில் இது இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எதிர்காலத்தில் இந்திய சந்தையில் புதிய எம்பிவி ரக கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், மேற்கண்ட கார்களை எல்லாம் பரிசீலனை செய்யலாம். அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களின் சௌகரியமான பயணங்களுக்கு எம்பிவி ரக கார்கள் மிகவும் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









