வரிசை கட்டி வராங்க! அடுத்தடுத்து வரப்போற வேற லெவல் கார்கள் இதான்!
2023ம் ஆண்டு துவங்கி மொத்தமே 3 மாதங்கள் கூட இன்னும் முடியவில்லை ஏகப்பட்ட புதிய கார்கள் அறிமுகமாகிவிட்டது. இன்னும் இந்தாண்டு பல மாதங்கள் பாக்கியிருக்கும் நிலையில் சில முக்கியமான கார்கள் அறிமுகம் உறுதியாகியுள்ளது.
பல நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை களம் இறக்கவுள்ளனர். இந்த பதிவில் நாம் இதுவரை உறுதியாகியுள்ள விரைவில் வெளியாகப்போகும் கார்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

புதிய ஹூண்டாய் வெர்னா - Hyundai Verna
வரும் 21ம் தேதி ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை வெர்னா காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கார் சென்சூயல் ஸ்போர்ட்டினேஸ் டிரைவ் ஃபிலாஸஃபியில் உருவாக்கப்பட்டுள்ளது. குலோபல் எலெகன்ட்ரா காரின் பல டிசைன் மொழிகள் இந்த காரில் இருகு்கிறது. இந்த காரின் உட்புற கட்டமைப்பில் இந்த செக்மெண்டிலேயே இல்லாத பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 160 பிஎஸ் பவருடன் பொருத்தப்பட்டுகிறது.
மாருதி சுஸூகி ஃபிராங்க்ஸ் - Maruti Suzuki Fronx
மாருதி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவிலேயே ஃபிராங்க்ஸ் காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் காம்பேக்ட் எஸ்யூவி கூபே கார். பலோனோ காரின் சாயலில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் அடுத்த மாதம் விற்பனைக்காக அறிமுகமாகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளனர். இது மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இந்த காரின் முகப்பு தோற்றம் கிராண்ட் விட்டாரா காரின் டிசைனிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா மிட்-சைஸ் எஸ்யூவி - Honda Mid-Size SUV
ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய மிட் சைஸ் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அமேஸ் காரின் ஃபிளாட்ஃபார்மிலேயே இந்த கார் தயாரிக்கப்படுகிறது. இந்தாண்டின் மத்தியில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இதன் இன்ஜினை பொருத்தவரை புதிய தலைமுறை சிட்டி காரின் 1.5 லிட்டர் பெட்ரோல், மற்றும் 1.5 லிட்டர் ஸ்டிராங்க் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின்கள் பொருத்தப்படவுள்ளன. இந்த காரில் புதிய எலெக்ட்ரானிக் ஆக்கிடெக்ஷர் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
மாருதி சுஸூகி ஜிம்னி - Maruti Suzuki - Jimny
மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் களம் இறங்கப்போகும் கார் மாருதி சுஸூகி ஜிம்னி, இந்த கார் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கார் இந்தியாவில் வரும் மே அல்லது ஜூன் மாதம் விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இந்த கார் 4 வீல் டிரைவ் உடன் விற்பனைக்கு வருகிறது.
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் - Kia Seltos Facelift
கியா நிறுவனம் தனது செல்டோஸ் காரை இந்த வருடத்தின் மத்தியில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் காஸ்மெட்டிஸ் அப்டேட் மட்டுமல்ல அடாஸ் தொழிற்நுட்பமும் சேர்ந்து வரும் என எதிர்பார்க்கலாம். இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் மற்ம் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.
டாடா பஞ்ச் சிஎன்ஜி - Tata Punch CNG
டாடா நிறுவனம் தனது பஞ்ச் சிஎன்ஜி காரை இந்தாண்டு இறுதியில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்த காரை அந்நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ட்வின் சிலிண்டர் அரேஞ்ச்மென்ட் உடன் பூட் ஸ்பேஸ் குறையாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் - Creta Facelift
ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்தாண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் முற்றிலுமாக மாற்றி டிசைன் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கம், பின்பக்கம், உட்புற கட்டமைப்புகளில் ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்படவுள்ளன. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications








