புதுசா போர்ஷே காரை வாங்க எத்தனை பேர் ரெடி? 2024இல் வரிசையா 4 போர்ஷே கார்கள் வருது!!

போர்ஷே (Porsche) அதன் 75 ஆண்டுகால நிறைவை உலகில் பல்வேறு பகுதிகளில் கொண்டாடி வருகிறது. இதே மகிழ்ச்சியில், இந்திய மார்க்கெட்டில் வருகிற 2024ஆம் ஆண்டில் 4 புது கார்களை போர்ஷே அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. அவை என்னென்ன என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மக்கான் இவி (Macan EV): போர்ஷேவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார் இதுவாகும். சர்வதேச சந்தையில் வெளியீடு செய்யப்பட்ட சில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், உடனடியாக அடுத்த 2024இல் இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் 100kWh பேட்டரி பேக் இரு மோட்டார்களுடன் வழங்கப்படுகிறது.

upcoming porsche cars to india

இவற்றின் மூலமாக அதிகப்பட்சமாக 612 எச்பி மற்றும் 1,000 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது. பின் சக்கரங்கள் மூலமாக இயங்கும் மக்கான் இவி இதுவரையில் வெளிவந்ததிலேயே உற்சாகமான பயணத்தை வழங்கக்கூடிய போர்ஷே காராக விளங்குகிறது. 270 கிலோவாட்ஸ் வரையிலான சார்ஜர்களை உபயோகித்து இந்த எலக்ட்ரிக் காரை சார்ஜ் செய்ய முடியும்.

பனமேரா ஜிடிஎஸ் (Panamera GTS): இந்தியாவில் 3ஆம் தலைமுறை போர்ஷே பனமேரா கார் கடந்த 2023 நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, பனமேராவின் செயல்திறன்மிக்க வெர்சனான பனமேரா ஜிடிஎஸ் விற்பனைக்கு வருகிறது. ரூ.2 கோடி என்ற அளவிலான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய போர்ஷே கார் இதுவாகும்.

upcoming porsche cars to india

மக்கான் இவி-ஐ போல், இதன் அறிமுகமும் வருகிற 2024ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. பனமேரா ஜிடிஎஸ் காரில் 4 லிட்டர் ட்வின்-டர்போ வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. வழக்கமான பனமேரா காருடன் ஒப்பிடுகையில், இந்த ஜிடிஎஸ் வெர்சன் தோற்றத்திலும் மெருக்கேற்றப்பட்டதாக இருக்கும். இந்தியாவில் இந்த காருக்கு மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி63 எஸ் இ-பெர்ஃபார்மன்ஸ் 4-டோர் கூபே விற்பனையில் போட்டியாக இருக்கும்.

கயேன்னே, கயேன்னே கூபே ஜிடிஎஸ் (Cayenne, Cayenne Coupe GTS): பனமேரா காரை போன்று, கயேன்னே கார்களையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர போர்ஷே திட்டமிட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் வெர்சன் மற்றும் ஜிடிஎஸ் வெர்சன் என இரண்டும் ஒரே நேரத்தில் 2024ஆம் ஆண்டின் 2ஆம் பாதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

upcoming porsche cars to india

புதிய டைகன் (New Taycan): போர்ஷேவின் 4-கதவுகளை கொண்ட எலக்ட்ரிக் காரான டைகன் சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்கிரேட் செய்யப்பட்டது. இந்தியாவில் டைகன் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் டைகன் கிராஸ் டூரிஸ்மோ ஃபேஸ்லிஃப்ட் கார்கள் வருகிற 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இவற்றில் 79.2 kWh, 83.7 kWh மற்றும் 93.4kWh என வெவ்வேறு விதமான பேட்டரி ஆப்ஷன்கள், வாங்கும் வேரியண்ட்டை பொறுத்து வழங்கப்பட உள்ளன. ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டினால் இந்த எலக்ட்ரிக் கார்களின் ரேஞ்ச் அதிகரித்து இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அதேபோல், புதிய டைகன் கார்களில் பவர் அவுட்-புட்டும் 326 எச்பி-இல் இருந்து 625 எச்பி வரையில் அதிகரித்து இருக்கலாம்.

upcoming porsche cars to india

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை நான்கும் தான் போர்ஷே நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் 2024இல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் கார்களும். போர்ஷே ஒரே வருடத்தில் 4 கார்களை அறிமுகம் செய்வது கொஞ்சம் அரிதுதான். ஆதலால், இவை நான்கில் ஏதேனும் ஒன்று திட்டமிட்டப்படி அறிமுகம் செய்யப்படாமல் போனாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, December 28, 2023, 13:07 [IST]
English summary
Upcoming porsche cars to indian market check full list here
மேலும்... #போர்ஷே #porsche
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X