ரெனால்ட் களமிறக்கும் புது எலெக்ட்ரிக் கார் விலை இவ்ளோதானா! இந்த குளிர்லயும் டாடாக்கு வேர்த்து கொட்டியிருக்கும்
2023ம் ஆண்டு நிறைவடைந்து, 2024ம் ஆண்டிற்குள் காலடி எடுத்து வைக்கவுள்ளோம். புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், 2024ம் ஆண்டில் ரெனால்ட் (Renault) நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster): புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து வரும் 2024ம் ஆண்டில் இந்த கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக 2024ம் ஆண்டின் மத்தியில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக இந்த காரின் ஆரம்ப விலை 12 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 20 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ரெனால்ட் எலெக்ட்ரிக் கார் (Renault Electric Car): டாடா (Tata), மஹிந்திரா (Mahindra) போன்ற நிறுவனங்களை தொடர்ந்து, ரெனால்ட் நிறுவனமும் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தீவிரமாக தயாராகி வருகிறது. இது இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

இதன் டிரைவிங் ரேஞ்ச் அனேகமாக 225 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். இந்திய சந்தையில் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV), சிட்ரோன் இசி3 (Citroen eC3), டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் டாடா டிகோர் இவி (Tata Tigor EV) போன்ற கார்களுக்கு போட்டியாக இந்த கார் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அனேகமாக இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது. இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான், அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும்.
ரெனால்ட் ஜோஹர் (Renault Jogger): இது எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) மற்றும் கியா கேரன்ஸ் (Kia Carens) ஆகிய கார்களுக்கு போட்டியாக ரெனால்ட் ஜோஹர் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் வழங்கப்படவுள்ள அதே இன்ஜின் மற்றும் வசதிகள் ஆகியவைதான் ரெனால்ட் ஜோஹர் காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரெனால்ட் ஜோஹர் காரானது, 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
எனவே புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் என்ன விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறதோ அதை காட்டிலும் 1 லட்ச ரூபாய் அதிகமான விலையில் ரெனால்ட் ஜோஹர் கார் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த 3 கார்களும் வரும் 2024ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3 கார்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், ரெனால்ட் நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் 2024 மிகச்சிறந்த ஆண்டாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








