நடுவுல ஒரு மாசம் மட்டும்தான் இடைவெளி.. இந்தியாவின் செடான் பிரிவை அலங்கரிக்க இத்தன கார்கள் வர போகுதா!

இப்போதான் 2023 ஆம் ஆண்டு தொடங்கியதைப் போல் இருக்கு, அதுக்குள்ள இந்த வருஷமே முடிய போகுது. இடையில் கொஞ்சம் நாட்கள் மட்டுமே இருக்கின்றன. துள்ளியமாக கூற வேண்டுமென்றால் 51 நாட்கள் இடைவெளி மட்டுமே நடப்பாண்டு முடிவடைவதற்கு இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் அடுத்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய கார்கள் பற்றிய தகவல் வெளி வர தொடங்கி இருக்கின்றது.

குறிப்பாக, வரும் 2024 ஆம் ஆண்டில் சில செடான் ரக கார்களின் வருகை அதிகாரப்பூர்வமாகவும், அதிகாரப்பூர்வமற்ற நிலையிலும் உறுதியாகி செய்யப்பட்டு இருக்கின்றது. அந்த செடான் கார்களில் டாப் 8 மாடல்களைப் பற்றிய முக்கிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

New sedans

மாருதி சுஸுகி டிசையர் (New Maruti Suzuki Dzire): இந்தியர்கள் பலரின் பிரியமான செடான் ரக கார் மாடலாக மாருதி சுஸுகியின் டிசையர் இருக்கின்றது. இந்த கார் அதிகம் வாடகை வாகன சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. பராமரிப்பு செலவு குறைவு, லாபம் அதிகம் என்கிற காரணத்தினால் இந்த காரை கேப் டிரைவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இதுதவிர தனிநபர் பயன்பாட்டு பிரிவிலும் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கார் மாடலின் புதிய வெர்ஷனையே விரைவில் மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இது நான்காம் தலைமுறை டிசையர் என கூறப்படுகின்றது. காம்பேக்ட் செடான் பிரிவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக இது இருக்கின்றது.

Maruti dzire

இந்த நான்காம் தலைமுறை டிசையரின் வருகை இந்த வரவேற்பை மேலும் பலமடங்கு அதிகமாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சற்று மாற்றப்பட்ட வெளிப்புற தோற்றம், ஸ்போர்ட் அம்சமங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பிரீமியம் இன்டீரியர் என பல புதுமைகளுடன் இந்த கார் விரைவில் இந்தியாவை களம் காண இருக்கின்றது.

இந்த காருடன் சேர்த்து ஸ்ட்ராங் ஹைபிரிட் வசதிக் கொண்ட ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார் மாடலையும் மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் ரூ. 7 லட்சம் தொடங்கி ரூ. 9.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. அறிமுகமானது 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Honda amaze

புதிய ஹோண்டா அமேஸ் (New Honda Amaze): இந்தியாவின் மற்றுமொரு பெஸ்ட் செல்லிங் காம்பேக்ட் செடான் ரக கார் மாடலாக ஹோண்டாவின் அமேஸ் இருக்கின்றது. இந்த காரின் அறிமுகமும் 2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டிற்குள்ளாகவே எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 7.5 லட்சம் தொடங்கி ரூ. 10 லட்சம் வரையிலான விலையில் இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

நான்காம் தலைமுறை அமேஸ் காரே இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், அதிகபட்ச அப்டேட்டுகள் இந்த அமேஸில் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், புதிய அமேஸ் 4 மீட்டருக்கும் குறைவான நீளம், சிஎன்ஜி ஆப்ஷன் என பல எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த காரில் டீசல் ஆப்ஷன் கிடைப்பது இந்த முறையும் சந்தேகமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

Skoda superb

ஸ்கோடா சூப்பர்ப் (Skoda Superb): இந்த கார் தன்னுடைய அறிமுகத்திற்காக 2023இறுதியை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆமாங்க, அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்கு பின்னர் எப்போது வேண்டுமானாலும் இந்த செடான் கார் விற்பனக்குக் களமிறக்கப்படலாம் என கூறப்படுகின்றது. இது அதன் மறுவருகை என்பது குறிப்பிடத்தகுந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த கார் சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டது. பிஎஸ் 6.2உமிழ்வு விதியின் காரணமாகவே இந்த கார் வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிட்ரோன் சி3எக்ஸ் (Citroen C3X): இந்தியாவில் பிரெஞ்சு நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான சிட்ரோன், தற்போதைய நிலவரப்படி சி3, இசி3 (எலெக்ட்ரிக் கார்), சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி, சி5 ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகிய கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே நிறுவனம் சிட்ரோன் சி3எக்ஸ் எனும் புதுமுக செடான் ரக காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

Citroen c3x

இந்த கார் இந்தியாவில் மிட்சைஸ் செடான் ரக கா5 ர்களுக்கு போட்டியாக இருக்கும். இதே கார் மாடலில் மின்சார வெர்ஷனையும் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐசிஇ வெர்ஷனில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர், டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனே எதிர்பார்க்கப்படுகின்றது.

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series): பிஎம்டபிள்யூ அதன் புகழ்பெற்ற லக்சூரி செடான் ரக கார் மாடலான 5 சீரிஸின் லேட்டஸ்ட் வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க திட்டுமிட்டு இருக்கின்றது. 2024 இறுதிக்குள் இந்த காரின் இந்திய அறிமுகம் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரை பெட்ரோல், டீசல் என இரண்டு விதமான ஃப்யூவல் ஆப்ஷனில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது, பிஎம்டபிள்யூ.

Bmw 5 series

இத்துடன், 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் இந்த காரில் அது வழங்க இருக்கின்றது. ஆகையால், சொகுசு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் விஷயத்தில் இந்த கார் மிக உயரிய நிலை காராக இருக்கும் என தெரிகின்றது. 70 லட்சம் ரூபாய் தொடங்கி ரூ. 80 லட்சம் வரையிலான விலையில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.

ஆடி ஏ6 ஃபேஸ்லிஃப்ட் (Audi A6 facelift): இந்த சொகுசு செடான் ரக காரும் இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் மத்திய பகுதிக்குள் அறிமுகமாக இருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் ஏ6-ஐக் காட்டிலும் மிக மிக அதிக வசதிகள் கொண்டதாக வெர்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2.0 லிட்டர் மைல்டு ஹைபிரிட் டர்போ பெட்ரோல் மோட்டார் தேர்வுடன் மைல்டு ஹைபிரிட் அம்சமும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது.

Audi a6

மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் (Mercedes-Benz E-Class): சொகுசு செடான் கார் விரும்பிகள் பலரின் பிரியமான கார் மாடலாக பென்ஸ் இ கிளாஸ் இருக்கின்றது. இதன் புதிய தலைமுறையே அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வர இருக்கின்றது. சூப்பர் ஸ்கிரீன்கள், புதிய 48 வோல்டு மைல்டு ஹைபிரிட் அம்சம் என ஏகப்பட்ட வசதிகளுடன் இந்த கார் இந்தியாவைக் களம் காண இருக்கின்றது. இதன் வருகை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய போர்ஷே பனமேரா (New Porsche Panamera): இந்த கார் ரூ. 1.6 கோடி தொடங்கி ரூ. 2.8 கோடி விற்பனைக்கு வரும் என தெரிகின்றது. இதன் விலைக்கு ஏற்ப சிறப்பம்சங்களும் மிக மிக அதிகமாக இருக்கும். புதிய மாடுலர் ஸ்போர்ட் டூல்கிட் பிளாட்பாரத்தை பயன்படுத்தியே இந்த பைக்கை போர்ஷே தயாரித்து இருக்கின்றது.

Porsche panamera

போர்ஷே மற்றும் பென்ட்லீ கூட்டணியில் தயார் செய்யப்பட்ட கட்டுமானத தளமே இந்த பிளாட்பாரம் ஆகும். பெட்ரோல் மோட்டார் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதிகளுடன் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரால் வெறும் 3.1 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செடான் ரக கார்களுக்கு டிமாண்ட் குறைந்துக் கொண்டே வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சொகுசு காரை அதிகம் விரும்புவோர் மத்தியில் இந்த செடான் ரக கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. நாம் இந்த பட்டியலில் பார்த்த அனைத்தும் பிரீமியம் வசதிகள் நிறைந்த செடான் ரக கார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, November 10, 2023, 15:29 [IST]
English summary
Upcoming sedan cars list in india in 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X