இந்தியாவில் இத்தன செடான் கார்கள் விற்பனைக்கு வரப்போகுதா... மாருதி முதல் டொயோட்டா வரை!
இந்திய சந்தையில் பல்வேறு புதிய செடான் ரக கார்கள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன. இதில், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள செடான் ரக கார்கள் குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. சரி, வாருங்கள். இனி நேரடியாக செய்திக்குள் செல்லலாம்.
புதிய-தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் (New-Gen Maruti Suzuki Dzire): புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில் புத்தம் புதிய 1.2 லிட்டர் இஸட்-சீரிஸ் மைல்டு-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த கார் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அனேகமாக இந்திய சந்தையில் வரும் 2024ம் ஆண்டின் 2வது பாதியில், புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார் விற்பனைக்கு வரலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் (New-Gen Skoda Superb): 4வது தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் கார் கடந்த நவம்பர் மாதமே உலகளாவிய அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. இதை தொடர்ந்து வரும் 2024ம் ஆண்டின் முதல் பாதியில் ஸ்கோடா சூப்பர்ப் காரின் புதிய தலைமுறை மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா கேம்ரி ஃபேஸ்லிஃப்ட் (Toyota Camry Facelift): டொயோட்டா கேம்ரி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சமீபத்தில்தான் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து வரும் 2024ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2025ம் ஆண்டின் தொடக்கத்திலோ டொயோட்டா கேம்ரி ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் (New-Gen Honda Amaze): உலகளாவிய அளவில் வரும் 2024ம் ஆண்டு, புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் கார், பொது பார்வைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் புதிய தலைமுறை அமேஸ் காரை முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யும்.
புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் உள்ளிட்ட கார்களுடன், இது விற்பனையில் போட்டியிடும். சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹோண்டா நிறுவனத்தின் செடான் ரக கார்களின் சாயலை, புதிய தலைமுறை அமேஸ் காரில் நாம் எதிர்பார்க்க முடியும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்குதான் தற்போது அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் நாங்கள் இந்த செய்தியில் கூறியுள்ள கார்களின் வருகைக்கு பின்னர், செடான் செக்மெண்ட் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








