தீபாவளிக்கு போனஸ் வர பணத்தை வச்சு இதுல ஒரு காரை வாங்க இப்பவே பிளான் போடுங்க! செம ஒர்த்தா இருக்கும்!
வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் வரிசையாக பல்வேறு கார்கள் அறிமுகமாக காத்திருக்கின்றன. பண்டிகை காலம் நெருங்குவதால் பல நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்தை குறிவைத்து தங்கள் கார்களின் அறிமுகத்தை திட்டமிட்டுள்ளனர். அதன்படி வரும் செப்டம்பர் மாதம் அறிமுகமாக உள்ள டாப் 4 எஸ்யூவி கார்களை பற்றி காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் நெருங்கி விட்டது. குறிப்பாக ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வரிசையாக பண்டிகைகள் வருகிறது. பொதுவாக இந்தியாவில் பண்டிகை காலங்களில் தான் வாகன விற்பனை அதிகமாக இருக்கும். இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் பண்டிகை காலத்தை குறிவைத்து தங்கள் புதிய தயாரிப்புகளை களம் இறங்குவார்கள். இதனால் விற்பனை மேலும் அதிகமாகும் என அவர்கள் கணிப்பார்கள்.

அதன்படி இந்தியாவில் இந்த செப்டம்பர் மாதம் பண்டிகை காலத்தை ஒட்டிய மாதம் என்பதால் இந்த மாதத்தில் பல நிறுவனங்கள் தங்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். அதன்படி டாடா முதல் ஹோண்டா வரை இந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள டாப் 4 எஸ்யூவி கார்களின் பட்டியலை காணலாம் வாருங்கள்.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்: டாடா நிறுவனம் தனது நெக்ஸான் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த கார் இரண்டாவது முறையாக அப்டேட்டை பெறுகிறது. இந்த முறை அப்டேட்டில் இந்த காரின் வெளிப்புறம் மற்றும் உட்புற பகுதிகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக டாடா கர்வ் காரின் வடிவமைப்பு இன்ஸ்பயர் செய்யப்பட்டு இந்த கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்த காரில் ஏற்கனவே இருந்த 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.இதன் கியர் பாக்ஸை பொறுத்தவரை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிஏ ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளது . அதை நேரம் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6ஸ்பீடு ஏஎம்டி அகிய கியர் பாக்ஸ்கள் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
புதிய அப்டேட்டில் புதிதாக ஸ்டியரிங் வீல், கெபாசிட்டி கண்ட்ரோல், மாற்றியமைக்கப்பட்ட டேஷ் போர்டு மற்றும் சென்ட்ரல் கன்சோல், பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, ஏர்பேக்குகள் என பல அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட்: டாடா நெக்ஸான் காரின் இவி வெர்ஷன் ஏற்கனவே விற்பனையில் இருக்கிறது. இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் தற்போது அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. டாடா நெக்ஸான் இவி கார் தான் தற்போது பயணிகள் காரிலேயே சிறந்த விற்பனையாகும் இவி காராக இருக்கிறது.
டாடா நெக்ஸான் இவி பெட்ரோல், டீசல் கார் எப்படி அப்டேட் செய்யப்படுதோ, அதேபோல இவி காரும் அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். ஆனால் ஏற்கனவே இவி காரில் உள்ள பேட்டரி, ரேஞ்ச் பெர்ஃபார்மன்ஸ் எல்லாம் மாற்றப்படாமல் அப்படியேதான் இருக்கும் என தெரிகிறது.
ஹோண்டா எலவேட்: நீண்ட நாட்களுக்கு பிறகு எஸ்யூவி செக்மெண்டில் தனது புதிய தயாரிப்பை களம் இறக்க தயாராகி வருகிறது. அதன்படி எலவேட் என்ற மிட் சைஸ் காரை வரும் செப்டம்பர் 4 தேதி அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த நிறுவனம் தயாரிக்கும் ஹோண்டா சிட்டி கார் தயாராகும் அதே பிளாட்பார்மில் தான் இந்த காரும் தயாரிக்கப்படுகிறது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 121 பிஎஸ் பவரையும் 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.
சிட்ரோன் சி3 ஏர்கிராஸ்: சிட்ரோன் நிறுவனம் தனது சி3 ஹேட்ச்பேக் காரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக சி3 ஏர்கிராஸ் என்ற மிட் சைஸ் காரை களம் இறக்க முடிவு செய்துள்ளது. இந்த கார் வரும் செப்டம்பர் மாதம் தான் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது. இந்த காரைப் பொறுத்தவரை 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆகிய ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த கார் சி3 ஹேட்ச்பேக் கார் தயாரிக்கப்படும் அதே சிஎம்பி பிளாட்பார்மில் தான் உருவாக்கப்படுகிறது. இதன் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 110 பிஎஸ் பவரையும் 390 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்களின் விற்பனை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் பல நிறுவனங்கள் தங்களை செய்து கார்களை தான் விற்பனைக்கு களம் இறக்க தயாராகி வருகின்றன. அதன் அடிப்படையில் வரும் பண்டிகை காலத்தை குறிவைத்து செப்டம்பர் மாதம் 4 முக்கியமான எஸ்யூவி காரர்கள் களமிறங்குகிறது. இந்த காரை வாங்க நீங்கள் தயாரா?


Click it and Unblock the Notifications









