புதுசா கார் வாங்கப்போறீங்களா? இந்த 5 காரை பாருங்க! இனி தான் வரப்போகுது! வெயிட் பண்ணீ வாங்குனா செம ஒர்த்!
இந்தியாவில் அடுத்த ஒரு சில மாதங்களில் புதிய மற்றும் பழைய மாடலை அப்டேட் செய்து வரிசையாக சில எஸ்யூவி கார்கள் அறிமுகமாகவுள்ளன. மாருதி, ஹூண்டாய், டாடா, கியா, ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் தலா ஒரு காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கார்களின் பட்டியலைக் கீழே விரிவாகக் காணலாம் வாருங்கள்.
மாருதி சுஸூகி ஜிம்னி: மாருதி நிறுவனம் தனது ஜிம்னி என்ற லைஃப் ஸ்டைல் ஆஃப்ரோடு எஸ்யூவி காரை ஜூன் மாதம் முதல் வாரத்தில் அறிமுகமாகிறது.இந்த காரை அறிமுகப்படுத்துவது மூலம் மாருதி நிறுவனத்தில் ஃப்ரான்க்ஸ், பிரெஸ்ஸா, மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய எஸ்யூவியுடன் இதுவும் இணைக்கிறது. இந்த கார் மார்கெட்டில் மஹிந்திரா தார் காருக்கு போட்டியாக களம் இறங்குகிறது. ரூ11 முதல் ரூ15 லட்சம் வரை விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் எக்ஸ்டர்: ஹூண்டாய் நிறுவனம் தனது எஸ்யூவி லைன் அப்களான வென்யூ, கிரெட்டா, அல்காஸர், டுஸான் வரிசையில் தற்போது எக்ஸ்டர் என்ற புதிய மைக்ரோ எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கார் ஜூலை மாதம் 10ம் தேதி அறிமுகமாகவுள்ளது. இந்த கார் ரூ 6-9.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் மார்கெட்டில் உள்ள டாடா பஞ்ச் காருக்கு போட்டியாக களம் இறங்குகிறது
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்: இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார் இது. இந்த கார் இந்தாண்டு இறுதியில் மிகப்பெரிய அப்டேட்டை பெற்று வெளியாகவுள்ளது. அப்டேட்ட செய்யப்பட்ட கார் ஆங்காங்கே டெஸ்டிங் செய்யப்படும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த கார் அப்டேட்டில் பல பிரிமியம் அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் ரூ8-15 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்: கியா நிறுவனமும் தனது செல்டோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இருக்கிறது. இந்த கார் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் மார்கெட்டில் உள்ள ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் ரூ10.89 லட்சம் முதல் ரூ19.65 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
ஹோண்டா எலிவேட்: ஹோண்டா நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு எஸ்யூவி காரின் விற்பனையில் களம்இறங்கவுள்ளது. இதற்காக மிட்-சைஸ் எஸ்யூவியான எலிவேட் என்ற காரை வரும் ஜூன் மாதம் 6ம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் ரூ10.50 லட்சம் முதல் ரூ20 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மார்கெட்டில் கிரெட்டா, கிராண்ட் விட்டாரா, செல்டோஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது.

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு அதிகமான டிமாண்ட் இருக்கும் நிலையில் பல நிறுவனங்கள் இந்த செக்மெண்டை குறி வைத்து கார்களை களம் இறக்குகிறது. 2023ம் வருடத்தின் இரண்டாம் அரையாண்டு பண்டிகைகள் நிறைந்த ஆண்டாக இருப்பதால் கார் விற்பனை அதிகமாக இருக்கும் அதை இந்நிறுவனங்கள் குறி வைத்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி மார்கெட் பெரியதாகியுள்ள நிலையில் பல புதிய கார்களை கார் தயாரிப்பு நிறுவனங்கள் களம் இறக்கியுள்ளன. இந்த டிரெண்டை பார்க்கும் போது அடுத்த 10 ஆண்டுகளுக்கு எஸ்யூவி கார்களுக்கு தான் மவுசு இருக்கும் போல தெரிகிறது. விரைவில் சாலைகளிலிருந்து செடான் மற்றும் சிறிய ரக கார்கள் காணாமல் போனாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை!


Click it and Unblock the Notifications









