மாருதிய அடிச்சு ஓரங்கட்ட திட்டம் போடும் டொயோட்டா! வரிசையா இத்தனை கார் வரப்போகுதா?

டொயோட்டா நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் தரமான எஸ்யூவி கார்களை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. இந்த கார்களின் பட்டியலை தான் இங்கே காணப் போகிறோம்.

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் சிறப்பான கார்களை விற்பனை செய்து வரும் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது மாருதி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் புதிய பல கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் பல எஸ்சிவிக்கார்களை அறிமுகப்படுத்தப் போகிறது அதன் பட்டியலை காணலாம்.

upcoming toyota suvs

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஹைபிரிட்: இந்த கார் நீண்ட நாட்களாக சிறப்பான விற்பனையில் இருக்கும் முழு சைஸ் எஸ்யூவி காராகும். இந்த ஃபார்ச்சூனர் காரில் மைல்டு ஹைபிரிட் கொண்ட ஜிடி சீரியஸ் டீசல் இன்ஜின் கார் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன் புதிய தலைமுறை காரில் வருகிறதா இல்லை தற்போது உள்ள ஃபார்ச்சூனர் காரிலேயே இந்த ஆப்ஷன் கொண்டு வரப்பட உள்ளதா? என்ற விபரம் தெரியவில்லை. இந்த மைல்டு ஹைபிரிட் வெர்ஷன் ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. புதிய ஃபார்ச்சூனர் கார் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

upcoming toyota suvs

டொயோட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி: டொயோட்டா நிறுவனம் தனது இவிஎக்ஸ் என்ற முதல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் 2025-ம் ஆண்டு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் டொயோட்டா நிறுவனத்துடன் பகிரப்பட்டு இந்தியாவில் டொயோட்டாவில் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும். இந்த கார் சிங்கிள் மற்றும் டூயல் மோட்டார் செட்டப் உடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முழு சார்ஜில் 550 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

டொயோட்டோ கொரோலா கிராஸ் 7-சீட்டர்: டொயோட்டா நிறுவனம் கொரோலா கிராஸ் காரை 7 சீட்டர் காராக சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் இந்தியாவிற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டு 2026 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் டொயோட்டா நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் அமைக்க உள்ள மூன்றாவது புதிய ஆலையில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

upcoming toyota suvs

இந்த கார் டிஎன்ஜிஏசி பிளாட்பார்மில் உருவாக்கப்பட உள்ளது. இந்த பிளாட்பார்மில் தான் தற்போது இன்னோவா ஹைகிராஸ் கார் உருவாக்கப்படுகிறது. இதன் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மூன்று வரிசை சீட்டுகள் கொண்ட பிரீமியம் எஸ்யூவி காராக விற்பனைக்கு வரும்.

டொயோட்டா அர்பன் டைசர்: மாருதி நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காரை டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் டைசர் என்ற பெயரில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காரில் ஃபிராங்க்ஸ் காரில் உள்ள அதே அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜினை பொறுத்தவரை 1.2லிட்டர் நேச்சுரல் பெட்ரோல் மற்றும் 1.0லிட்டர் டர்போ இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் இருக்கும். இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டதாக இருக்கும்.

upcoming toyota suvs

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ: டொயோட்டா நிறுவனத்தின் லேண்ட் க்ரூஸர் கார் இந்தியாவில் பிரபலமாக காராக இருக்கிறது. லேண்ட்க்ரூஸர் 300 காரை இந்தியாவில் பலர் வாங்கியுள்ளார்கள். அதேபோல லேண்ட்க்ரூஸர் பிராடோ கார் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்தியாவிற்காக இந்த கார் வரும்போது இதன் இன்ஜின் முதல் இதன் வடிவமைப்பு வரை பல மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

டொயோட்டா லேண்ட் ஹோப்பர்: இந்த கார் டொயோட்டாவின் லேண்ட் க்ரூஸர் பிராடோ காரின் காம்பேக்ட் வெர்ஷன் ஆக இந்த ஹோப்பர் கார் உருவாகிறது. இந்த கார் தற்போது சர்வதேச மார்க்கெட்டிற்கே வரவில்லை. தயாரிப்பு நிலையில் தான் இதுவரை இருக்கிறது. இந்தியாவில் தற்போது மாருதி நிறுவனம் விற்பனை செய்து வரும் ஜிம்னி காருக்கு போட்டியாக இந்த கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் இதுவரை சிறப்பான எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யவில்லை என்றாலும் இந்நிறுவனத்திடம் சர்வதேச அளவில் பல சிறப்பான கார்கள் இருக்கிறது. இந்த கார்கள் எல்லாம் இந்த வந்தால் மாருதி நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி கூட விற்பனையை பெருகும் வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, October 20, 2023, 21:21 [IST]
English summary
Upcoming toyota suvs 6 models 2 hybrids 1 ev
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X