ஒன்னில்ல ரெண்டு குடும்பமே ஒன்னா போகலாம்... இதுபோல ரெண்டு காரை விற்பனைக்கு கொண்டு வரபோகுதா டொயோட்டா!
முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா (Toyota) இந்தியாவில் வெகு விரைவில் அதிக இருக்கைகள் வசதிக் கொண்ட இரு கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா (Toyota) இந்தியாவில் இரு அதிக இருக்கைகள் வசதிக் கொண்ட காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிறுவனத்தின்கீழ் ஏற்கனவே இன்னோவா ஹைகிராஸ், இன்னோ க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர் மற்றும் ருமியன் உள்ளிட்ட கார் மாடல்கள் அதிக இருக்கைகள் வசதிக் கொண்ட வாகனமாக விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இவற்றின் வரிசையிலேயே வெகு விரைவில் புத்தம் புதிய இரு அதிக இருக்கைகள் கொண்ட கார்களை டொயோட்டா இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டிலும் 7 இருக்கைகள் ஆப்ஷன் வழங்கப்பட இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு கார்களும் அதிக பிரீமியம் வசதிகள் மற்றும் இட வசதியைக் கொண்டதாக இருக்கும் என்றும் இப்போது வெளியாகி உள்ள தகவல்கள் கூறுகின்றன.
டொயோட்டா கொரல்லா கிராஸ் 7 சீட்டர் எஸ்யூவி (Toyota Corolla Cross 7-Seater SUV): டொயோட்டா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக கொரல்லா இருக்கின்றது. இந்த காரின் 7 சீட்டர் எஸ்யூவி ரக காரையே இந்தியாவில் டொயோட்டா விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த காரை டிஎன்ஜிஏ-சி பிளாட்பாரத்தில் வைத்தே உருவாக்க இருக்கின்றது. இந்த காரில் இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலில் காணப்படக் கூடிய அம்சங்கள் சில இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஹைகிராஸில் வழங்கப்படும் அதிக மைலேஜை வழங்கக் கூடிய ஹைபிரிட் டெக்னாலஜிக் கொண்ட எஞ்ஜின் மற்றும் பல அம்சங்கள் அதில் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆகையால், இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்த தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் (Next-Gen Toyota Fortuner): இந்தியாவில் டொயோட்டா கார்களுக்கு சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, அரசியல்வாதிகள் மத்தியில் இந்த காருக்கு டிமாண்ட் மிக தரமான நிலையில் உள்ளது. இந்த நிலையிலேயே புதிய தலைமுறை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெளிப்புற தோற்றம், உட்புற தோற்றம் மற்றும் சிறப்பம்சம் ஆகியவற்றில் மிகப் பெரிய மாற்றத்துடன் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி வைத்து பார்க்கையில் இந்த காரின் முன் பக்கத்தில் பெரிய அளவிலான க்ரில், எல்இடி ஹெட்லைட், எல் வடிவ பகல் நேரத்தில் ஒளிரும் லைட்டுகள் என ஏகப்பட்ட அம்சங்கள் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
இந்த காரை லேண்ட் க்ரூஸரை தழுவி அது உருவாக்கி இருக்கின்றது. மேலும், இந்த காரும் நிறுவனத்தின் டிஎன்ஜிஏ-எஃப் பிளாட்பாரத்தை பயன்படுத்தியே உருவாக்கப்பட்டு வருகின்றது. இதிலும், நிறுவனம் மாடர்ன் ஹைபிரிட் தொழில்நுட்ப அம்சத்தை சேர்க்க இருக்கின்றது. 2.8 லிட்டர் டீசல் எஞ்ஜின் உடனேயே ஹைபிரிட் அம்சத்தையும் டொயோட்டா வழங்க இருக்கின்றது.
இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் இந்த காரில் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் போன்ற அதிநவீன கால சிறப்பம்சங்கள் பல இடம் பெற இருப்பதாகவும் தெரிவிக்கின்றன. ஆனால், இதனை டொயோட்டா இன்னும் உறுதி செய்யவில்லை. இதேபோல், இந்த கார்கள் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற விபரமும் வெளியிடப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கூடிய விரைவில் டொயோட்டாவின் இந்த இரு புதிய கார்களும் இந்திய சந்தையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவை விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் அல்கஸார், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 மற்றும் டாடா சஃபாரி உள்ளிட்ட கார் மாடல்களுக்கு அது போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









