இந்த வாரம் அறிமுகமாகபோகும் 5 வாகனங்கள் இது தான்! ஒவ்வொன்னும் வேற லெவல்ல இருக்குது!

இந்த வாரம் இரண்டு பைக்குகள், இரண்டு ஸ்கூட்டர்கள், மற்றும் ஒரு புதிய கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாக போகிறது. அப்படியாக என்னென்ன வாகனங்கள் எல்லாம் இந்திய மார்க்கெட் இந்த வாரம் அறிமுகமாக போகிறது என்ற விரிவான விபரங்களை இங்கே விரிவாக காணலாம் வாருங்கள்.

கோகோரோ கிராஸ் ஓவர்: தைவானை தலைமை இடமாகக் கொண்ட நிறுவனம் கோகோரோ. இந்நிறுவனம் இந்தியாவில் இந்த வாரம் கிராஸ் ஓவர் அட்வெஞ்சர் ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் வாகனத்தின் அறிமுகம் நாளை இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Upcoming vehicle december 2023

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 7.5 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டு இன்டர்ட்சேஞ்சபிள் பேட்டரி பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிங்கிள் சார்ஜில் 100 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியா சோனட் ஃபேஸ்லிஃப்ட்: கியா நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட தனது சோனட் காரை வரும் 14ஆம் தேதி சர்வதேச அளவில்லையே இந்தியாவில் தான் முதன்முறையாக அறிமுகப்படுத்துகிற.து இந்த கார் இந்திய சாலைகளில் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவதை நம்மால் காண முடிந்தது. இந்த காரின் முன் பக்கம் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது.

Upcoming vehicle december 2023

முக்கியமாக சி வடிவ எல்இடி டிஆர்எல் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில் மற்றும் ஹெட்லைட்டுகள், புதிய பம்பர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இது போக இந்த காரில் புதுமையாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் அப்டேட் செய்யப்பட்ட பின்பக்க பம்பர் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியன இடம்பெறுகிறது.

இதுபோக அப்டேட் செய்யப்பட்ட செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோலும் இதில் உள்ளன. பாதுகாப்பு அம்சங்களுக்காக 6 ஏர் பேக்குகள் அடாஸ் தொழில்நுட்பம் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் இதில் உள்ளன. மேலும் இந்த காரின் இன்ஜினில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டீசல் மேனுவல் வேரியன்ட் இந்த காரில் மீண்டும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கலாம்.

Upcoming vehicle december 2023

சிம்பிள் டாட் ஒன்: சிம்பிள் எனர்ஜி நிறுவனம் குறைந்த பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்த திட்டமிட்டது. அதன்படி வரும் 15ஆம் தேதி டாட் ஒன் என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. ரூபாய் 1லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்த ஸ்கூட்டர் அறிமுகமாக உள்ளது. ஏற்கனவே மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் ஓலா எஸ்1எக்ஸ் ஸ்கூட்டருக்கு போட்டியாக இந்த ஸ்கூட்டரும் அறிமுகமாகிறது .

இந்த ஸ்கூட்டர் அறிமுகமாக பின்பு மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும்போது அதிக எண்ணிக்கையில் ஸ்கூட்டர் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15ம் தேதி இந்த ஸ்கூட்டர் அறிமுகமானாலும் வாடிக்கையாளர் டெலிவரி 2024 ஆம் ஆண்டு தான் இருக்கும் என தெரிகிறது. தற்போது விற்பனையாகி வரும் சிம்பிள் 1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சற்று குறைவான எனர்ஜியில் இருக்கும் என தெரிகிறது.

Upcoming vehicle december 2023

யமஹா ஆர் 3 மற்றும் எம்டி-03: யமஹா நிறுவனம் நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆர் 3 மற்றும் எம்டி 03 ஆகிய இரண்டு பைக்குகளை வரும் 15ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இரண்டு பைக்குகளும் வெளிநாட்டிலிருந்து முழுமையாக கட்டமைக்கப்பட்ட பைக்காக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

இதன் இன்ஜினை பொருத்தவரை 321 சிசி பேரலல் டிவின் சிலிண்டர் லிக்யூட் கூல்டு இன்ஜினாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் பைக் என்பதால் மிக அதிக விலையில் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிசம்பர் மாதம் துவங்கியுள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை எல்லாம் அதிகமாக அறிமுகப்படுத்தி வருகின்றன. இதனால் இந்த டிசம்பர் மாசம் வாகன விற்பனை அதிகமாகும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் மட்டும் ஏகப்பட்ட வாகனங்கள் அறிமுகமாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, December 11, 2023, 15:02 [IST]
English summary
Upcoming vehicle december 2023 india launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X