ஒன்னு ரெண்டு இல்ல மொத்தம் 3 கார்களின் விலை அதிரடியாக உயர்வு! ஹூண்டாய் எடுத்த திடீர் முடிவு!
ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ, டுஸான்மற்றும் வெர்னா ஆகிய கார்களுக்கான விலையை அதிகரித்துள்ளது. ரூபாய் 48 ஆயிரம் வரை இந்த கார்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. என்ன காரணங்களுக்காக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது? என்னென் கார்களுக்கு எவ்வளவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் கொரியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து இந்தியாவில் அதிக அளவிலான கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மக்கள் பலர் இந்நிறுவனத்தின் காரர்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் இந்தியாவிலேயே 2வதாக அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாறி வருகிறது.

இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஆண்டு தனது புதிய டுஸான் மற்றும் வென்யூ காரை அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டு துவக்கத்தில் தனது புதிய வெர்னா என்ற செடான் காரை அப்டேட் செய்து வெளியிட்டது. இந்நிலையில் தற்போது இந்த மூன்று கார்களின் விலையை ஹூண்டாய் நிறுவனம் ஏற்றியுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி ஹுண்டாய் டுஸான் அதிகமான விலை உயர்வை சந்தித்துள்ளது. இதன் பெட்ரோல் வேரியன்ட் ரூபாய் 42 ஆயிரம் வரையிலும், டீசல் வேரியன்ட் கார் ரூபாய் 47, 900 வரையிலும் தற்போது விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் டுஸான் கார் அப்டேட் செய்து வெளியாகும் போது ரூபாய் 27.69 லட்சம் என்ற விலையில் அறிமுகமானது. தற்போது புதுப்பிக்கப்பட்ட விலையுடன் சேர்த்து ரூ 29.01 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது என்ட்ரி லெவல் 2.0 லிட்டர் பெட்ரோல் 6 ஸ்பீடு ஆட்டோ பிளாட்டினம் ஏடி வேரியன்டிற்கான விலை தான்.
அறிமுகமாகும் போது ரூ 34.39 லட்சம் என்ற விலையில் அறிமுகமானது. தற்போது ரூபாய் 35.94 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் தான் அதிகமான விற்பனை உயர்வை சந்தித்துள்ள கார்களாகும். அடுத்ததாக விலை உயர்வில் இருப்பது ஹூண்டாய் வெர்னா மற்றும் வென்யூ கார் தான்.

ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா கார் கடந்த மார்ச் மாதம் தான் அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த கார் அறிமுகமாகும் போது ரூபாய் 10.89 லட்சம் என்ற விலையில் அறிமுகமானது. தற்போது இந்த காரின் விலை கொஞ்சம் அதிகமாகியுள்ளது என்ட்ரி லெவல் இ எக்ஸ் மேனுவல் 1.5 லிட்டர் இன்ஜின் கொண்ட வேரியண்ட் தற்போது ரூ 10.96 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த காரின் டாப் வேரியன்டான எஸ்எக்ஸ்(ஓ ) டிசிடி கியர் பாக்ஸ் உடன் கூடிய டர்போ பெட்ரோல் இன்ஜின் காரின் விலை அதே ரூ 17.37 லட்சம் என்ற விலையில் தான் விற்பனையாகி வருகிறது. இஎக்ஸ் வேரியண்டில் மட்டுமே இந்த விலை உயர்வு ரூபாய் 6 ஆயிரத்துக்கு கொஞ்சம் அதிகமாக அளவில் அதிகரித்துள்ளது.
ஹூண்டாய் வெர்னா சப்கான் பேட்டரி சிவி காரை பொறுத்தவரை மார்க்கெட்டில் மாருதி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அப்பொழுது ரூபாய் 7.53 லட்சம் என்ற விலையில் இந்த கார் அறிமுகமானது.
இந்த காரின் விலையும் தற்போது அதிகாரிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூபாய் 5000 வரை இந்த காரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட விலை உயர்வு எல்லாம் சேர்ந்து தற்போது இந்த 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் கொண்ட 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஹூண்டாய் வெர்னா கார் ரூபாய் 7.77 லட்சம் என்று ஷோரும் விலையில் விற்பனையாகி வருகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது டுஸான் எஸ்யூவி காரின் விலையை தான் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. மற்ற கார்களின் விலை விலையை மிக குறைவாக தான் அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பால் பெரிய அளவில் விற்பனையில் பாதிப்பு ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் இந்த விலை உயர்வுக்கான எந்த தெளிவான காரணங்களையும் குறிப்பிடவில்லை. இருந்தாலும் அந்நிறுவனத்திற்கு இந்த கார்களை தயாரிக்க ஆகும் செலவுகள் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த விலை உயர்வை அந்நிறுவனம் அறிவித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையான காரணம் தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிகமாக விற்பனையாகும் கார்களில் அதிக அளவு விலை உயர்வு இல்லை என்பதால் பெரிய அளவில் இதில் பாதிப்புகள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு இனி மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். பண்டிகை காலம் நெருங்குவதால் பலர் விலை உயர்வை அறிவிக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications
