ரீல்ஸ் ராணி வாங்கிய புதிய காரின் விலை இவ்ளோ அதிகமா! மக்களால அதிர்ச்சியில இருந்தே மீள முடியலைனா பாத்துக்கோங்க!
இன்ஸ்டாவில் நீங்கள் மிகவும் மும்பரமாக இருக்கும் நபர் என்றால் கட்டாயம் இவரை பற்றி அறிந்திருப்பீர்கள். இன்ஸ்டா போன்ற சமூக வலை தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக வலம் வந்துக் கொண்டிருக்கும் பிரபலங்களில் உர்ஃபி ஜாவட்-ம் ஒருவர் ஆவார். முற்றிலும் வித்தாயசமான மற்றும் மாறுபட்ட உடைகளை அணிவதில் உர்ஃபி பெயர் போனவராக இருக்கின்றார்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை போல் எந்தவொரு பொருளையும் மானம் காக்கும் ஆடையாக பயன்படுத்த முடியும் என கற்பிப்பவராகவும் உர்ஃபி வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். ஆமாங்க, இவர் ஆடையாக அணியாத பொருளே இருக்க முடியாது. பேப்பர்களை ஒட்ட வைக்கும் டேப் தொடங்கி செல்போன் வரை என பலவற்றை உர்ஃபி ஜாவத் ஆடையாக அணிந்திருக்கின்றார்.

வெள்ளி பேஸ்டைகூட ஆடையாக அணிந்து இவர் வலம் வந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, நூல், செய்தி தாள், பின்னப்பட்ட கூந்தல் (முடி) போன்றவற்றையும் ஆடையாக இவர் பயன்டுத்தி இருக்கின்றார். ஏன் வாட்சை (கைக் கடிகாரத்தை)கூட இவர் ஆடையாக அணிந்து பொது வெளியில் வலம் வந்திருக்கின்றார்.
இதுமாதிரியான வித்தியாசமான ஆடைகளை அணிந்து வலம் வரும் நபர் என்கிற காரணத்தினாலேயே பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நபராக உர்ஃபி காட்சியளிக்கின்றார். இவரே தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் மிக மிக விலை உயர்ந்த காரை வாங்கி இருக்கின்றார். இந்த காரின் கொள்முதலின் வாயிலாக அனைவரையும் கவனத்தையும் அவர் தன் பக்கம் திசை திருப்பி இருக்கின்றார்.

ஜீப் மெரிடியன் சொகுசு காரையே உர்ஃபி வாங்கி இருக்கின்றார். இது ஓர் 7 இருக்கைகள் வசதிக் கொண்ட எஸ்யூவி ரக வாகனம் ஆகும். இந்திய திரை நட்சத்திரங்களின் மிகவும் பிரியமான வாகன மாடல்களில் ஒன்றாக இது இருக்கின்றது. இத்தகைய ஓர் வாகனத்தையே தற்போது உர்ஃபியும் வாங்கி இருக்கின்றார்.
இதற்கு முன்னதாக அவர் நீல நிற ஜீப் காம்பஸ் காரை பன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த வாகனமே ஆகும். இருப்பினும், இதைக் காட்டிலும் அதிக ஆடம்பர வசதிகள் கொண்டதாக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் காராக மெர்டியன் காட்சியளிக்கின்றது.

இதனையே தற்போது தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்காக உர்ஃபி வாங்கி இருக்கின்றார். வெல்வெட் சிவப்பு நிற மெரிடியன் சொகுசு காரையே அவர் தற்போது வாங்கி இருக்கின்றார். இந்த நிறத்திற்கு ஏற்ப ஓர் வித்தியாசமான உடையை அணிந்த வண்ணம் அவர் வலம் வரும் காட்சிகளே தற்போது வெளியாகி உள்ளன.
மிகுந்த சொகுசு வசதிகளுக்கு பெயர்போன காராக ஜீப் மெரிடியன் காட்சியளிக்கின்றது. பனோரமிக் சன்ரூஃப், லெதர் இருக்கை கவர்கள், ஃப்ளோட்டிங் டைப் திரை, தானியங்கி காலநிலை கட்டுப்பாட்டு கருவி, வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை என பிரீமியம் அம்சங்களும் மிக தாராளமாக ஜீப் மெரிடியனில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுபோன்று இன்னும் பல சொகுசு வசதிகளை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இதன் விலையும் சற்று அதிகமானதாக காட்சியளிக்கின்றது. இதன் ஆரம்ப விலையே ரூ. 30.10 லட்சமாகக் காட்சியளிக்கின்றது. அதேவேளையில், இதன் உயர்நிலை தேர்வு ரூ. 37.15 லட்சமாக இருக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
இந்த காரில் ஜீப் நிறுவனம் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் மோட்டாரையே பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த காரில் பெட்ரோல் ஆப்ஷன் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், டிரான்ஸ்மிஷன் தேர்வாக 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications









