டிரைவிங் பழக மாதவனின் மகன் பயன்படுத்தியது இந்த காரா! எந்த ஸ்கூல்னு சொல்லுங்க ஒரு அப்ளிகேஷனை நாமும் போட்றலாம்!
இந்தியாவின் முன்னணி நடிகர்களில் மாதவன்-ம் ஒருவர் ஆவார். இவருக்கு தமிழ் ரசிகர்கள் 'மேடி' எனும் செல்லப் பெயரும் உண்டு. இவரை போலவே மிகவும் அழகானவராக அவரது மகன் வேதாந்த் மாதவன் இருக்கின்றார். இவர் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை இருப்பினும் இவருக்கு ரசிகர்கள் மிக ஏராளம்.
பெரும்பாலான நடிகர்களின் வாரிசுகள் திரைப்படங்கள் அல்லது திரையுலகம் சார்ந்த பணிகளையே தொடர்வார்கள். உதாரணமாக, நடிகர் தனுஷின் குடும்பத்தில் உள்ள பெரும்பாலானி நபர்கள் திரை பின்னணியைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர் மட்டுமா, விஜய் தொடங்கி ஜீவா வரை என பலர் திரைப் பின்னணியைக் கொண்டவர்களே ஆவார்கள்.

ஆனால், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், அப்படியான நபர் அல்ல. தன்னுடைய தந்தை இந்திய திரை உலகத்தில் மிகப் பெரிய அளவில் நல்ல பெயரைக் கொண்டிருந்தாலும், அவர் திரையுலகம் பக்கம் ஒதுங்கவே இல்லை. அதேவேளையில், மாதவனுக்கு மிகப் பெரிய அளவில் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.
வேதாந்த் மாதவன் ஓர் விளையாட்டு வீரர் ஆவார். இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பல்வேறு பெருமைகளை அவர் தேடிக் கொடுத்திருக்கின்றார். இவர் மிக சிறந்த நீச்சல் வீரர் என்பது குறிப்பிடத்தகுந்தது. 58-வது மிலோ/ மாஸ் மலேசியா இன்விடேஷனல் ஏஜ் குரூப் ஸ்விம்மிங் சேம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கு பெற்ற இவர் ஒட்டுமொத்தமாக 5 மெடல்களை வாங்கி இந்தியாவிற்கு பெருமிதம் சேர்த்தார்.

இத்தகைய ஓர் நபரே தற்போது கார் ஓட்டும் பயறிசியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். அவர் தன்னுடைய கார் ஓட்டும் பயிற்சிக்காக போர்ஷே நிறுவனத்தின் புகழ்பெற்ற கெயன்னே காரை பயன்படுத்தி இருக்கின்றார். இந்த கார் மணிக்கு 270க்கும் அதிகமான கிமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
"என்ன ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்கு போர்ஷே காரா?.. நம்ம ஊருல இருக்க பெரும்பாலான ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் ஆல்டோவை விட்ட வேற காரை பார்ப்பதே பெரிய விஷயமாச்சே" என கேக்குறீங்களா. வேதாந்த் மாதவன் ஓட்டுநர் பயிற்சியை மேற்கொண்டது இந்தியாவில் அல்ல. துபாயிலேயே இந்த கார் ஓட்டும் பயிற்சியில் அவர் ஈடுபட்டு இருக்கின்றார்.
கலதாரி மோட்டார் டிரைவிங் சென்டர் ஓட்டுநர் பயிற்சி மையத்திலேயே கார் ஓட்ட அவர் பழகிக் கொண்டிருக்கின்றார். அவ்வாறு கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போத இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இதனை கலதாரி மோட்டார் டிரைவிங் சென்டர் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றது.
இந்த வீடியோவே தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறி இருக்கின்றது. குறிப்பாக, நம்ம ஊரில் உள்ள பெரும்பாலான டிரைவிங் ஸ்கூல்களில் ஆல்டோ, 800, வேகன்ஆர், ஸ்விஃப்ட் அல்லது டிசையர் இந்த கார்களையே பார்க்க முடியும். மற்ற கார்களை பார்ப்பது மிக மிக அரிது.
இந்த மாதிரியான வெளிநாடுகளில் மிக மிக விலையுயர்ந்த கார்கள் டிரைவிங் பயிற்சிக்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதுவே பலரின் ஆச்சரியத்திற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, துபாய் போன்ற இன்னும் பல நாடுகளில் விலை உயர்ந்த வாகனங்கள் பயிற்சிக் கொடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
வேதாந்தின் தந்தையான நடிகர் மாதவன் இடத்தில் பல புகழ்பெற்ற வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. யமஹா வி-மேக்ஸ், பிஎம்டபிள்யூ கே 1200 ஜிடிஎல், டுகாட்டி டியாவல் மற்றும் இந்தியன் ரோட்ஸ்டர் போன்ற அரிய வகை இருசக்கர வாகனங்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போர்ஷே கெயன்னே என்பது பலரின் கனவு சூப்பர் காராக இருக்கின்றது. இத்தகைய காரையே வேதாந்த் மாதவன் பயிற்சிப் பெறுவதற்காக பயன்படுத்தி இருக்கின்றார். இப்படி ஒரு சூப்பர் கார் இந்தியாவிலும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயன்படுத்தப்படும் எனில் அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு என்றே பலர் அந்த ஸ்கூலில் அப்ளிகேஷனை போட வாய்ப்பு உண்டு.


Click it and Unblock the Notifications








