லட்ச லட்சமா கொடுத்து டாப் வேரியன்ட் வாங்க வேணாம்! வெறும் ரூ2700 போதும் இந்த வசதி உங்க கார்லயும் வந்துரும்!

பொதுவாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் அவ்வப்போது சில புதிய அம்சங்களை காரில் அறிமுகப்படுத்தும் மக்களின் தேவைகளை உணர்ந்து ஒரு அம்சம் காரில் அறிமுகப்படுத்தப்பட்டால் அது மக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும். இப்படியான அம்சங்களை அடுத்து மற்ற நிறுவனங்களும் தங்கள் காரில் உட்புகுத்தி விடும்.

இப்படியாகச் சமீபத்தில் மார்கெட்டில் டிரெண்டாகி வரும் அம்சம் வென்டிலேட்டட் சீட்கள் தான். காரில் என்னதான் ஏசி போட்டு பயணத்தாலும், கோடை காலங்களில் சிலர் காரின் சீட்டில் அமர்ந்து செல்லும் போது அவர்களுக்கு முதுகு மற்றும் அமர்ந்திருக்கும் பகுதியில் சீட் இருப்பதால் காற்று உட்புக முடியாததால் வியர்வை வரும்.

லட்ச லட்சமா கொடுத்து டாப் வேரியன்ட் வாங்க வேணாம்! வெறும் ரூ2700 போதும் இந்த வசதி உங்க கார்லயும் வந்துரும்!

இந்த பிரச்சனைக்குத் தீர்வாகத் தான் வென்டிலேட்டட் சீட் தயாரிக்கப்பட்டது. காரின் சீட்டின் சிறிது சிறிதாக ஓட்டை போடப்பட்டு, சீட்டின் உள்ள சிறிய மோட்டார் ஃபேன் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் காரின் ஏசியால் கிடைத்த குளிர்ந்த காற்றை இந்த ஃபேன் காரின் சீட் உள்ளேயும் எடுத்துச் செல்லும்.

இந்த ரக சீட்களை தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஆனால் இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் இந்த சீட்களை காரின் டாப் வேரியன்ட் அல்லது அதிக விலை கொண்டே வேரியன்ட்களில் மட்டுமே அறிமுகப்படுத்தி வருகின்றனர். பேஸ் வேரியன்டில் இப்படியான அம்சங்களை வழங்குவதில்லை.

சிலர் இந்த ஒரு வசதிக்காகவே டாப் வேரியன்ட் காரை வாங்கலாம் என யோசித்து வருகின்றனர். காரில் நீண்ட தூரம் பயணிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு இந்த சீட் நிச்சயம் பெரும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த ஒரு வசதிக்காக அதிக விலை கொடுத்து டாப் வேரியன்ட்டை வாங்க வேண்டுமா?

தேவையில்லை, வெளி மார்கெட்டில் இதே அம்சம் கொண்ட கார் கவர்கள் எல்லாம் கிடைக்கிறது. கூலிங் குஷன், கவர், கூலிங் சீட் கவர், கூலிங் சீட் கூலர் பேட் என்ற பெயர்களில் மார்கெட்டில் சீட்டில் அமர்ந்தாலும் கூலாக இருக்கும்படியான பல தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் வெறும் ரூ2700 என்ற விலையில் இதை ஆன்லைனிலேயே வாங்க முடியும்.

இப்படியாக ரூ2700 கொடுத்து வாங்கும் இந்த பொருளும், வென்டிலேட்டட் சீட் செய்யும் அதே வேலையைத் தான் செய்கிறது. அப்பொழுது ஏன் இந்த ஒரு அம்சத்திற்காக நீங்கள் டாப் வேரியன்டை வாங்க வேண்டும்? இந்த அம்சம் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் விரும்பிய காரில் இந்த அம்சம் இல்லை என்றால் இதை வெளி மார்கெட்டில் வாங்கி பொருத்திக்கொள்வது தான் லாபம்.

இந்த வென்டிலேட்டட் சீட் போல பல அம்சங்கள் வெளிமார்கெட்டில் குறைந்த விலையில் கிடைக்கிறது. அதில் தரமான தயாரிப்புகளைத் தேர்வு செய்து அதைப் பொருத்திக்கொண்டால் உங்களுக்கு லாபமாக இருக்கும். இந்த தகவல் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, March 10, 2023, 9:20 [IST]
English summary
Ventilated seat after market kit available at low price know details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+