பாலா செஞ்சதுக்கு முன்னாடி உதயநிதி செஞ்சதுலாம் ஒன்னுமே கிடையாது.. அந்த மனசு இருக்கே அதுதான் சார் கடவுள்!

தமிழக மக்கள் கொண்டாடும் அளவிற்கு மாபெரும் வெற்றி படமாக மாமன்னன் மாறி இருக்கின்றது. இதுவே உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படம் என கூறப்படுகின்றது. அவரும் இதை ஏற்கனவே உறுதி செய்துவிட்டார். இது கடைசி படம் என்பதாலோ என்னவோ தரமான சம்பவத்தை இந்த படத்தில் உதயநிதி செய்திருக்கின்றார்.

அதேவேளையில் இந்த படத்தை எடுத்தவர் மாரி செல்வராஜ் என்பதாலும் தமிழக மக்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு மாமன்னனுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக திரைப்படத்தை தயாரித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மிக விலை உயர்ந்த பரிசை வழங்கி இருக்கின்றது.

Cook with comali bala gifts ambulance to village

மினி கூப்பர் சொகுசு காரையே ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாயிலாக உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்த கார் பரிசளிப்பு சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையுமே பேச வைக்கும் நிகழ்வாக மாறி இருக்கின்றது. குறிப்பாக, தமிழ் திரையுலகினர் மத்தியில் மிக ஆச்சரியமளிக்கும் சம்பவமாக இது மாறி இருக்கின்றது.

சமீபத்தில் விக்ரம் திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றதற்காக அப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்க்கு நடிகர் கமலஹாசன், விலையுயர்ந்த லெக்சஸ் இஎஸ்300எச் சொகுசு காரை பரிசாக வழங்கினார். இதற்கு அடுத்தபடியாக தமிழ் திரையுலகில் அரங்கேறும் மிகப் பெரிய விலை உயர்ந்த கார் பரிசளிப்பு சம்பவமாக மாரி செல்வராஜ்க்கு கார் பரிசளித்திருக்கும் சம்பவம் அமைந்திருக்கின்றது.

Kpy bala

இந்த சம்பவம் அரங்கேறிய இதே கால கட்டத்தில் சத்தமே இல்லாமல் கேபிஒய் பாலா ஓர் கார் பரிசளிப்பு சம்பவத்தை நிகழ்த்தி இருக்கின்றார். கார் என்றால் அது கார் அல்ல ஆம்புலன்ஸ் ரக காராகும். இதையே பாலா அன்பளிப்பாக வழங்கி இருக்கின்றார். ஆம்னி ரக ஆம்புலன்ஸையே அவர் வாங்கி கொடுத்திருக்கின்றார்.

சந்தையில் இப்போது அந்த வாகனம் விற்பனையில் இல்லை. மேலும், விலையும் மிக குறைவே. இருப்பினும், அதை பாலா எனும் ஓர் நபர் வாங்கிக் கொடுத்திருப்பது மிகப் பெரிய விஷயம் ஆகும். ஆனால், இதை பெரியளவில் யாரும் பேசவில்லை என்பதே வருத்தமளிக்கக் கூடியாதாக உள்ளதாக நெட்டிசன் சிலர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

பாலா ஆம்புலன்ஸ் பரிசளிப்புகுறித்த வீடியோ அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கின்றது. "இதுபோன்று ஓர் உயிர் காக்கும் வாகனத்தை பரிசளிக்க வேண்டும் என்பது தன்னுடைய வாழ்நாள் கனவு" என பாலா கூறி இருக்கின்றார். மேலும், இந்த ஆம்புலன்ஸ் ஓர் குக் கிராமத்தின் பயன்பாட்டிற்காகவே வழங்கப்பட்டு இருக்கின்றது.

அவசரம்னாலும் அந்த கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வருவதில் பெருத்த சிக்கல் என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே ஒட்டுமொத்த கிராமத்திற்கும் உதவும் விதமாக உயிர் காக்கும் வாகனத்தை பரிசாக பாலா வழங்கி இருக்கின்றார். பெட்ரோல் முதல் கொண்டு பாலாவே வழங்க இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ஊருக்கு நல்லது செய்ய பாலா இதை பரிசாக வழங்கி இருக்கின்றார். பாலாவின் இந்த செயலுக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பாலா இதுபோன்ற சமூக நல பணிகள் பலவற்றை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வாயிலாக பலரின் மனம் கவரும் நபராக அவர் மாறி இருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிக சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்கூட ஓர் ஆம்புலன்ஸை சமூக நல ஆர்வலருக்கு பரிசாக வழங்கி இருந்தார். அவர் வாங்கிக் கொடுத்தது புத்தம் புதிய மாருதி சுஸுகி ஈகோ ஆகும். இவரின் பரிசளிப்பு சம்பவத்தையே தூக்கி சாப்பிடும் பாலாவின் பரிசளிப்பு சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, July 3, 2023, 23:10 [IST]
English summary
Vijay tv fame bala gifted ambulance for village people
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+