அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர! தமிழகத்திற்கு வர போகும் உலக புகழ்பெற்ற மின்சார கார் உற்பத்தி நிறுவனம்!
உலக புகழ்பெற்ற மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா (Tesla) இந்தியாவில் கால் தடம் பதிக்கப் போவதாக கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இப்போது வரை நிறுவனத்தின் சிங்கிள் ஷோரூம்கூட நாட்டில் திறக்கப்படவில்லை. மேலும், ஒரு கார் மாடல்கூட விற்பனைக்கும் கொண்டு வரப்படவில்லை. இந்த நிலை டெஸ்லா கார் காதலர்களை மிகப் பெரிய சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது என்றே கூறலாம்.
இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே உலக அளவில் டெஸ்லா நிறுவனத்திற்கு போட்டியாக கருதப்படும் மற்றுமொரு உலக புகழ் மின்சார கார் உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய கால் தடத்தைப் பதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எந்த நிறுவனம்? அதன் உற்பத்தி ஆலை எந்த மாநிலத்தில் அமைய இருக்கின்றது என்பது குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமானக வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ (VinFast Auto) இருக்கின்றது. இந்த நிறுவனமே வெகு விரைவில் இந்தியாவில் அதன் அத்தியாத்தைத் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இடி ஆட்டோ-வும் இதுகுறித்து தற்போது செய்தி வெளியிட்டு இருக்கின்றது.
அது வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில், வின்ஃபாஸ்ட் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அதன் உற்பத்தி ஆலையைத் தொடங்க இருப்பதாகவும், அந்த ஆலை தமிழ்நாடு அல்லது குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஏதேனும் ஓர் மாநிலத்தில் அமைய இருப்பதாகவும் அது தெரிவித்து இருக்கின்றது.

இந்த தகவல் உள்நாட்டு மின் வாகன உற்பத்தியாளர்களுக்கும், டெஸ்லாவிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. உலக அளவில் மிகவும் வேல்யூவான கார் உற்பத்தி நிறுவனங்களில் வின்ஃபாஸ்ட் ஆட்டோ மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த நிலையிலேயே உலகின் மிகப் பெரிய மின்சார வாகன ஹப்பாக (மையமாக) மாறி வரும் இந்தியாவில் கால் தடம் பதிக்க திட்டமிட்டு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் கால் தடம் பதித்த கியா (Kia) நிறுவனம் இந்தியாவில் வீரநடைப் போட்டுக் கொண்டிருக்கின்றது. மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் வரிசையில் கியாவும் ஒன்றாக மாறி இருக்கின்றது.
இந்த அளவிற்கு சூப்பரான வரவேற்பை கியா இந்தியாவில் பெறுவதற்கு, அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிகம் தரம்மிக்கவையாகவும், அதேவேளையில், செலவழிக்கும் பணத்திற்கு உகந்த வாகனமாகவும் இருப்பதுமே காரணமாக இருக்கின்றது. இந்த அளவு சூப்பரான வரவேற்பை இந்தியாவில் வின்ஃபாஸ்ட் களமிறங்கும் எனில், அதுவும் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போதே நிறுவனத்தின் இந்திய வருகை குறித்த பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில் உள்ளது. ஆகையால், எந்த தகவலும் தெளிவாக தெரியாத நிலையே இப்போது தென்படுகின்றது. இருப்பினும், அந்த நிறுவனத்தின் பட்டியலில் தமிழ்நாடு மற்றும் குஜராத் இந்த இரண்டு மட்டுமே இருப்பதாக கூறப்படுகின்றது. 2017 ஆம் ஆண்டில் டெஸ்லாவிற்கு போட்டியாக தொடங்கப்பட்ட நிறுவனமே வின்ஃபாஸ்ட் ஆட்டோ ஆகும்.
ஆனால், இப்போது உலகின் மூன்றாம் நிறுவனமாக அது உருவெடுத்திருக்கின்றது. முதல் நிறுவனமாக டெஸ்லாவும், இரண்டாவது நிறுவனமாக டொயோட்டாவும் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனங்களின் இடத்தை அவற்றிடம் இருந்து தட்டி பறிக்க வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்திய வருகை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் கால் தடம் பதிக்கும் எனில் பிரீமியம் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி, எம்ஜி மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மிகப் பெரிய போட்டியாளனாக இருக்கும். இப்போதைய நிலவரப்படி இந்திய மின்சார வாகன உலகின் தலைவனாக டாடா மோட்டார்ஸ் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கும் வின்ஃபாஸ்டின் வருகை தலைவலியை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








