சிஎம்-பிஎம் கார்கூட ரயில்வே ஸ்டேஷனுக்குள்ள நுழைஞ்சதுல்ல.. பிளாட்பாரத்தில் காரை ஓட்டி வந்த மர்மநபரால் பரபரப்பு!
இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் அதிகரித்துக் காணப்படுகின்றது. எங்கு இருக்கின்றோம், என்ன நடக்கிறது என்பதை எல்லாம் கண்டுகொள்ளாமல் செல்போனை எடுத்து உடனே ரீல்ஸ் எடுத்து அதை அப்ளோடு செய்து விடுகின்றனர் இன்றைய கால இளைஞர்கள். இதுமாதிரியான ரீல்ஸ் பிரியர்கள் சிலர் தங்களின் ரீல்ஸ் வீடியோவிற்காகவே கடுமையான தண்டனைகளுக்கு ஆளாகி இருக்கின்றனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
புனித ஸ்தலங்களில் ரீல்ஸ் எடுத்ததற்காக வாழ்நாளின் பெரும் பகுதியை ஜெயிலில் கழிக்கும் அளவிற்கு தண்டனையைப் பெற்றவர்களும் இந்த உலகத்தில் இருக்கின்றனர். இதுமட்டுமா, ரீல்ஸ்காக வீடியோ எடுக்கபோய் தங்களின் உயிரையே பறி கொடுத்தவர்களும் உள்ளனர். இதேபோல், கடுமையான அபராதம், வாகனங்களை இழத்தல் போன்ற சிக்கல்களுக்கும் ரீல்ஸ் மன்னர்கள் ஆளாகி இருக்கின்றனர்.

இதுமாதிரியான செய்திகள் தினந்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கின்ற வேளையிலும் பலர் திருந்தியதாக தெரியவில்லை. இந்த நிலையிலேயே ரயில் நிலையத்தில் ஓர் நபர் காரை ஓட்டி வருவது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ரயில் நிலையங்களுக்குள் வாகனங்கள் நேரடியாக நுழைய அனுமதி இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்த மாதிரியான சூழலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த ரயில் நிலையத்தில் கார் ஒன்று எப்படி நுழைந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. வீடியோ வைரலானதை அடுத்தே ரயில்வே போலீஸாருக்கே இந்த நிகழ்பு பற்றி தெரிய வந்திருக்கின்றது. மேலும், கவனத்திற்கு வந்த அடுத்த மணி நேரமே சம்பவம்குறித்து வழக்கு பதிந்து, காரை ஓட்டி வந்த நபரை தேடும் நபராக அறிவித்திருக்கின்றனர்.

ஒரு ரீல்ஸ் வீடியோவிற்காக ஆசைப்பட்டு தற்போது அந்த நபர் பெரும் சிக்கலில் சிக்கி இருக்கின்றார். ரயில் நிலையங்களில் தனிநபர் வாகனங்கள் இயங்க அனுமதி இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆகையால், அவர் ஓட்டி வந்த கார் பறிமுதல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரக காரையே அந்த இளைஞர் ரயில் நிலையத்திற்குள் ஓட்டி வந்தார் என்பது கவனிக்கத்தகுந்தது.
சற்று காஸ்ட்லியான கார் இது ஆகும். ரூ. 15 லட்சம் தொடங்கி ரூ. 22 லட்சத்திற்கும் அதிகமான விலையில் இந்த கார் விற்கப்பட்டு வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இத்தகைய விலை உயர்ந்த காருக்கே இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவால் ஆபத்தான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதேவேளையில், காருக்குக் கடுமையான அபராதம் விதித்து அத்துடன் அவ்வாகனம் விடுவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
Reel made by taking a car to Platform 1 at Agra Cantt Railway Station Reel uploaded on social platform As soon as it came to notice RPF filed a case asked for details of car from RTO after which case would be registered by name @agrapolice @RPF_INDIA @rpfner pic.twitter.com/NVSOScxhi5
— Amir qadri (@AmirqadriAgra) March 15, 2023
ஆனால், இதுவரை என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற தகவலை காவல்துறை வட்டாரம் தெரிவிக்கவில்லை. சம்பந்தப்பட்ட ரயில் நிலைய காவலர்கள் இப்போதைக்கு அந்த மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருவதாக மட்டுமே தெரிவித்திருக்கின்றனர். உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா கான்டினென்டல் ரயில் நிலையத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
நடைமேடை 1-லேயே இளைஞர் ரீல்ஸை எடுத்து உள்ளார். பொதுவாக ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகள் மக்கள்நடமாடுவதற்கு மட்டுமே ஏற்றவையாக இருக்கின்றன. வாகனங்கள் இயங்க அவை உகந்தவை அல்ல. சில நேரங்களில் மனிதர்கள் நடந்துச் செல்லும்போதே ரயில் நிலையங்களில் சருக்கிவிடுவதை நாம் கண்டிருக்கின்றோம்.
இந்த மாதிரியான ஓர் நடைமேடையில் வாகனங்கள் இயக்குவது என்பது பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய செயல் ஆகும். டயருக்கு போதுமான கிரிப் கிடைக்காது என்பதால், சிறிது கூடுதல் வேகத்தில் ஆக்சலரேசனை அழுத்தினாலும், அது மிகப் பெரிய விபத்தை ஏற்படுத்திவிடும். இதை அறியாமலே ரீல்ஸ் மோகத்தில் மர்ம நபர் இந்த செயலை செய்திருக்கின்றார்.
தற்போது ஆர்டிஓ அலுவலகத்தில் கார் பதிவெண்ணைக் கொண்டு முகவரி உள்ளிட்ட விபரங்களைக் கண்டறியும் பணியில் ஆக்ரா கான்டினென்டல் காவல்நிலைய காவலர்கள் களமிறங்கி இருக்கின்றனர். விரைவில் அந்த மர்ம நபரை அவர்கள் மடக்கிப் பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரம்மஜீத் சிங் கர்டம் எனும் ஃபேஸ்புக் பக்கமே இந்த வீடியோவை பகிர்ந்திருக்கின்றது.
இதே அக்கவுண்ட் அமைச்சரின் கான்வாயில் இந்த கார் பங்கு கொள்ளும் வீடியோவையும் வெளியிட்டிருக்கின்றது. ஆகையால், காரை ஓட்டி வந்த அந்த நபர் அரசியல் பின்புலம் கொண்டவராக இருக்கக் கூடும் என யூகிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், கார் ஓட்டி வந்தவர் நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழும்பி இருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலில் ரயில்வே உயர் காவல் அதிகாரி ஒருவர் எம்ஜி ஹெக்டர் காரின் உரிமையாளரை தேடும் நபராக அறிவித்திருப்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கின்றார். மேலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவர் வீடியோவில் கூறப்பட்டு இருக்கின்றது. கார் ரயில் நிலையத்தில் வலம் வந்த நேரத்தில் பணியில் இருந்த காவலர்கள் மீதும் நடவடிக்கை பாயலாம் என தெரிகின்றது.
24 மணி நேரமும் பிசியாக இயங்கக் கூடிய ஓர் ரயில் நிலையமே ஆக்ரா கான்டினென்டல் நிலையம். இந்த நிலையத்தில் வாகனம் இயங்கியது அந்த பகுதி வாசிகளை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் ஆச்சரியமடையச் செய்திருக்கின்றது. இதுமாதிரியான செயலில் மற்றவர்களும் ஈடுபட கூடாது என்றால் இந்த சம்பவத்திற்கு காரணமானவர் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும். இதனால் மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை தவிர்க்க முடியும் என குரல்கள் எழும்ப ஆரம்பித்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications








