Virat Kohli First Car எது தெரியுமா?.. பல கோடிக்கு அதிபர் இந்த காரையா முன்னாடி வச்சுட்டு இருந்தாரு!!

கிரிக்கெட் உலகின் முன்னணி நட்சத்திர வீரர்களில் விராட் கோஹ்லியும் ஒருவர். இவர் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்திற்கு மட்டுமல்ல விலை உயர்ந்த சொகுசு கார்களை வைத்திருப்பதற்கும் பெயர்போனவராக இருக்கின்றார். இவர் பயன்படுத்தாத சொகுசு காரே இருக்க முடியாது என கூறிவிடலாம். அந்த அளவிற்கு கடந்த காலங்களில் சொகுசு கார்களை வாங்கு குவித்து போட்டவரே விராட்.

இத்தகைய வீரர் தன்னுடைய முதல் காரை பற்றிய சுவராஷ்ய நினைவுகளை தற்போது மீண்டும் நினைவுக்குக் கொண்டிருக்கின்றார். சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட் விராட் கோலியை நேர்காணல் செய்தது. அப்போது, நிரூபர் விராட் இடம் பல்வேறு சுவாரஷ்யமான கேள்விகளைக் கேட்டார். இதன் வாயிலாகவே அவர் முதன் முதலில் டாடா சஃபாரி காரை வாங்கினார் என்பது தெரிய வந்தது.

virat kohli first car

விராட்டின் சொந்த பணத்தில் வாங்கப்பட்ட முதல் கார் இதுவே ஆகும். தற்போது பல கோடி ரூபாய் மதிப்புக் கொண்ட கார்களை வைத்திருந்தாலும், அவர் முதன் முதலில் டாடா சஃபாரியையே வாங்கி இருக்கின்றார். இந்த காரை ஏன் அவர் வாங்கினார் என்பதையும் தெரிவித்து இருக்கின்றார். தெளிவாக சாலையைக் காண உகந்த வாகனமாக இது தென்பட்டது.

இந்த காரணத்திற்காகவே அவர் சஃபாரி காரை வாங்கி இருக்கின்றார். இந்த தகவலை மட்டுமின்றி இன்னும் சில தகவல்களையும் இந்த கார் காதலர் பகிர்ந்திருக்கின்றார். அவர் தன்னுடைய கார் வாங்கும் பார்வையை மாற்றி இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார். கடந்த காலங்களில் விராட் ஆடி ஆர்8 போன்ற சூப்பர் கார்களை வாங்கியதை நம்மால் பார்க்க முடிகின்றது.

ஆனால், இப்போது அவர் பெரிய தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக கார்களை வாங்குவதையே விரும்புவதாக தெரிவித்திருக்கின்றார். சூப்பர் கார்களை மனம் விரும்பி வாங்கி இருந்தாலும் அதை இயக்குவதிலும், பயன்படுத்துவதிலும் பெரும் சிரமத்தைச் சந்தித்ததாக தெரிவித்துள்ளார். இதன் காரணத்தினாலேயே தான் பெரும்பாலான சூப்பர் கார்களை கடந்த காலங்களில் விற்பனைச் செய்ததாகவும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.

குறிப்பாக, குடும்பத்துடன் பயணப்பதற்கு ஏற்ற அதிக இட வசதிகளைக் கொண்ட வாகனங்களையே அவர் வாங்கி வருகின்றார். ஆடி நிறுவனத்தின் சூப்பர் கார்கள் பலவற்றை விராட் வைத்திருக்கின்றார். இவர் ஆடி இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருப்பதால் எக்கசக்கமான சொகுசு கார்கள் ஆடி நிறுவனத்துடையதாகவே இருக்கின்றது.

ஆடி ஆர்8 வி10 பிளஸ் (R8 V10 Plus), ஆர்8 எல்எம்எக்ஸ் (R8 LMX), ஆடி ஏ8 எல் (A8 L), ஆடி க்யூ8 (Q8), ஆடி க்யூ7 (Q7), ஆடி ஆர்எஸ்5 (RS 5) மற்றும் ஆடி எஸ்5 (S5) உள்ளிட்ட ஆடி நிறுவனங்களின் தயாரிப்புகளையே அவர்
பயன்படுத்தி வருகின்றார்.

இதுதவிர, ரெனால்ட் டஸ்டர் ( Renault Duster), டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வோக் (Range Rover Vogue), பென்ட்லீ கான்டினென்டல் (Bentley Continental GT) மற்றும் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் (Flying Spur) உள்ளிட்ட லக்சூரி கார்களையும் விராட் பயன்படுத்தி வருகின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

விராட்டின் சொகுசு கார்கள் சில செகண்ட் ஹேண்ட் சந்தையில் கடந்த காலங்களில் விற்பனைக்கு வந்திருக்கின்றன. அப்போது அவை ஏன் விற்கப்பட்டன என்பதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. இப்போது அதற்கான முழு காரணமும் தெரிய வந்திருக்கின்றது. மேலும், விராட்டின் சொகுசு கார் வாங்கும் பார்வையும் மாறி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 12, 2023, 13:59 [IST]
English summary
Virat kohli shared his first car memory
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+