செகண்ட் ஹேண்ட் சொகுசு வாகனங்களை பயன்படுத்தும் வட இந்திய பிரபலங்கள்.. விராட், ஷில்பா இந்த லிஸ்ட்ல இருக்காங்களா!
பயன்படுத்திய கார்களை வாங்கிக் கெத்தாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வட இந்திய பிரபலங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ஷில்பா செட்டி போன்ற முன்னணி பிரபலங்கள் பலர் இந்த லிஸ்டில் இருக்கின்றனர். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
புதிய வாகனங்களைபோல் செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பானது காரை வாங்க வேண்டும் என்பதை கனவாகக் கொண்டிருக்கும் ஏழை மற்றும் எளிய மக்களிடம் இருந்து மட்டுமே கிடைத்துக் கொண்டிருப்பதாக நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

அதுதான் இல்லை. செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு முன்னணி திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியிலும் சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக செகண்ட் ஹேண்ட் கார்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிரபலங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
விராட் கோலி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இவர் மிகப் பெரிய வாகன காதலராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இவர் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி சொகுசு காரை பயன்படுத்தி வருகின்றார். இது அவர் யூஸ்டு மார்க்கெட்டில் இருந்து வாங்கிய கார் ஆகும்.

இதன் முந்தைய உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை. ஆனால், விராட் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பென்ட்லீ கான்டினென்டல் 3.5 கோடி ரூபாய் மதிப்புடையது என கூறப்படுகின்றது. விராட் பயன்படுத்தி வரும் இந்த ஒரு கார் மாடல் மட்டுமே பயன்படுத்தி வாகனங்கள் சந்தையில் இருந்து வாங்கப்பட்ட வாகனம் அல்ல.
அவரிடத்தில் இருக்கும் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் காரும் செகண்ட் ஹேண்ட் சந்தையில் இருந்து வாங்கப்பட்ட ஒன்றே ஆகும். அதேவேளையில், இவரிடத்தில் இன்னும் பல ஆடம்பர மற்றும் விலையுயர்ந்த வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக, ஆடி நிறுவனத்தின் பல சொகுசு கார்கள் விராட்டிடம் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஷில்பா ஷெட்டி, பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர் ஆவார். இவர் ரோல்ஸ் ராய்ஸ் வோக் எனும் ஓர் மிக மிக அதிக விலைக் கொண்ட லக்சூரி காரை பயன்படுத்தி வருகின்றார். இந்த காரே அவர் யூஸ்டு மார்க்கெட்டில் வாங்கிய சொகுசு வாகனம் ஆகும்.
இதன் மதிப்பு ரூ. 3 கோடிக்கும் அதிகம் இருக்கும் என கூறப்படுகின்றது. பிக் பாய்ஸ் டாய்ஸ் (Big Boys Toys) எனும் நிறுவனத்திடம் இருந்தே இந்த காரை நடிகை வாங்கியிருக்கின்றார். இது ஓர் யூஸ்டு கார் விற்பனையகம் ஆகும். பிரத்யேகமாக பயன்படுத்திய ஆடம்பர வாகனங்களை மட்டுமே இது விற்பனைச் செய்து வருகின்றது.

இந்திய ஹாக்கி விளையாட்டு டீமைச் சேர்ந்த சர்தார் சிங் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், ஆகிய இருவரும்கூட பிக் பாய்ஸ் டாய்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். தினேஷ் கார்த்திக் தனக்கான போர்ஷே 911 டர்போ எஸ் காரையும், சர்தார் சிங் தனக்கான லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவரையும் பிக் பாய்ஸ் டாய்ஸ் நிறுவனத்திடம் இருந்தே வாங்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவர்களைபோல் இன்னும் பலர் பிக் பாய்ஸ் டாய்ஸ் செகண்ட் ஹேண்ட் சொகுசு கார் விற்பனையாளரிடத்தில் இருந்து லக்சூரி கார்களை வாங்கி இருக்கின்றனர். அந்தவகையில், பாலிவுட் திரையுலகின் மிக சிறந்த பாடகர்களாக பார்க்கப்படும் பட்ஷா மற்றும் ஹனி சிங் ஆகியோர் பிபிடி-இடம் இருந்தே தங்களுக்கான சொகுசு கார்களை வாங்கி இருக்கின்றனர்.

ஆடி ஆர்8 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் வ்ரைத் கார்களையே அவரவர்களுக்கான சொகுசு கார்களாக பாடகர்கள் வாங்கி இருக்கின்றனர். ஷோரூமில் புதிய ஒன்றை வாங்குவதைக் காட்டிலும் பலமடங்கு குறைவான விலையில் செகண்ட் ஹேண்ட் சந்தையில் லக்சூரி கார்களை வாங்கிக்கொள்ள முடியும். இதன் காரணத்தினாலேயே பிரபலங்கள் பலர் தங்களுக்கான ஆடம்பர வாகனங்களை யூஸ்டு மார்க்கெட்டில் இருந்து வாங்கிக் கொள்கின்றனர். இதன் வாயிலாக பல லட்சக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications
